பல்லடத்தில் 3 பேர் கொலையில் பகீர்! ஐடி ஊழியரின் சிம் கார்டை மட்டும் மர்ம நபர்கள் உடைத்தது ஏன்?
சென்னை: திருப்பூர் பல்லடத்தில் பண்ணை வீட்டில் கொலை செய்யப்பட்ட செந்தில் குமாரின் செல்போனில் இருந்த சிம்கார்டை மர்மநபர்கள் உடைத்து போட்டுவிட்டுச் சென்ற தகவல் கிடைத்துள்ளது. இந்த செல்போனில் அவர் யாருடன் எல்லாம் பேசினார் என்ற தகவல்களை போலீஸார் சேகரித்து வருகிறார்கள்.
திருப்பூர் மாவட்டம், பல்லடம் அருகே உள்ள சேமலைக்கவுண்டம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் தெய்வசிகாமணி (78). இவரது மனைவி அலமேலு (75). இந்த தம்பதியருக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். இருவரும் திருமணம் ஆகி, மகன் கோவையிலும், மகள் சென்னிமலையிலும் வசித்து வருகின்றனர். தம்பதியர் கிராமத்தில் தென்னை விவசாயம் செய்து வந்தனர்.

இந்த நிலையில் நேற்று உறவினரின் நிச்சயதார்த்த விழாவில் கலந்து கொள்ள மகன் செந்தில் குமார், தனது தாய், தந்தையர் இருக்கும் பண்ணை வீட்டிற்கு நேற்று முன் தினம் அதாவது வியாழக்கிழமை வந்திருந்தார். மூவரும் இரவு உணவை சாப்பிட்டதும் தூங்கச் சென்றனர்.
அப்போது நள்ளிரவில் வழக்கத்திற்கு மாறாக நீண்ட நேரமாக நாய்கள் குரைத்தது. இதனால் தூக்கம் கலைந்த தெய்வசிகாமணி உடனே எழுந்து வெளியே போய் பார்த்தார். அப்போது அங்கு மறைந்திருந்த மர்ம நபர்கள் தெய்வசிகாமணியை அரிவாளால் வெட்டினர்.
பிறகு பண்ணை வீட்டிற்குள்ளே சென்று அங்கிருந்த அலமேலுவையும் செந்தில்குமாரையும் வெட்டினர். இதையடுத்து அவர்கள் அங்கிருந்து தப்பி சென்றனர். இந்த நிலையில் நேற்று காலை 7 மணி வாக்கில் தெய்வசிகாமணி வரச் சொன்னதால் சவரத் தொழிலாளி வல்பூரான் பண்ணை வீட்டிற்கு சென்றிருந்தார். அவர்தான் இந்த மூவரின் கொலைகளை பார்த்துவிட்டு போலீஸிலும் உறவினர்களிடமும் தகவல் தெரிவித்துள்ளார். இறந்த செந்தில் குமாருக்கு மனைவி கவிதாவும் ஒரு மகன், ஒரு மகள் ஆகியோர் உள்ளனர்.
இதுகுறித்து சவரத் தொழிலாளி வல்பூரான் செய்தியாளர்களிடம் கூறியதாவது: நான் 6 முதல் 7 மணிக்கு இந்த தோப்புக்குள் வந்தேன். பெரியவர்தான் என்னை வரச் சொல்லியிருந்தார். கதவை தட்டிபார்த்தேன். யாரும் திறக்கவில்லை, பிறகு குரல் கொடுத்து பார்த்தேன். அப்போதும் யாரும் வரவில்லை.
பிறகு கதவு திறந்திருந்ததால் உள்ளே பார்த்த போது இருட்டாக இருந்தது, விளக்கு போட்டு பார்த்த போதுதான் அவர்கள் மூவரும் கீழே விழுந்து ரத்த வெள்ளத்தில் கிடந்தனர். அதில் தெய்வசிகாமணி மட்டும் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார்.
உடனே ஊர்காரர்களிடமும் போலீஸிடமும் சொல்லி தெய்வசிகாமணியை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார்கள். ஆனால் அங்கு அவருக்கு சிகிச்சை அளித்தும் அவரை காப்பாற்ற முடியவில்லை. மூவருக்கும் மண்டையிலேயே அரிவாளால் வெட்டியிருந்தனர் என அவர் தெரிவித்தார்.
இறந்த மூவரின் உடல்களையும் மீட்ட போலீஸார் பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களது உடலுக்கு பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
பிறகு தெய்வசிகாமணியின் தோட்டத்துக்கு அருகே உள்ள தகன மேடையில் மூவரின் உடல்களும் ஒன்றாக எரியூட்டப்பட்டது. இந்த தோட்டத்தில் பாலமுருகன் என்பவர் தனது மனைவியுடன் தங்கியிருந்து தோட்டத்து வேலைகளை செய்து வந்ததாக தெரிகிறது.
ஆனால் பாலமுருகன் அடிக்கடி குடித்துவிட்டு வந்ததால் அவரை தோட்டத்தை விட்டு வெளியே போகும்படி தெய்வசிகாமணி கூறிவிட்டதாக தெரிகிறது. இந்த நிலையில் அந்த பாலமுருகனும் இன்னொருவரும் தன்னை வேவு பார்த்து வந்ததாக தனது உறவினர்களிடம் தெய்வசிகாமணி தெரிவித்ததாக தெரிகிறது.
செந்தில் குமாரை வெட்டிய மர்மகும்பல் அவருடைய செல்போனில் இருந்து சிம் கார்டை எடுத்து இரண்டாக உடைத்து போட்டுவிட்டனர். இந்த செல்போனுக்கு யாரெல்லாம் பேசினர். இந்த இடத்தில் இந்த செல்போனில் யாரெல்லாம் பேசினார்கள், கொலை நடந்த இடத்தை சுற்றி யாருடைய செல்போன் சிக்னல்கள் இருந்தன என்பது குறித்தெல்லாம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மேலும் செந்தில் குமார் அடிக்கடி பண்ணை வீட்டிற்கு வராத நிலையில் தற்போது மட்டும் எப்படி வந்தார் என்ற கோணத்திலும் போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

-
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி உற்சாகம்.. LIC பாலிசிதாரர்களுக்கு காத்திருக்கும் அந்த ஒரு ரகசியம் -
வைத்திலிங்கம் வயிற்றில் பாலை வார்த்த ஸ்டாலின்! திமுகவுக்கு ஜம்ப்பான 5 பேருக்கு சீட்! யார் அவர்கள்? -
போடியில் ஓபிஎஸ்! ஆலங்குளத்தில் மனோஜ் பாண்டியன்! திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு -
164.. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.. திமுக பட்டியலில் கடைசி பெயராக வந்த முதல்வர் பெயர் -
சட்டமன்ற தேர்தலில் நடிகர் சுந்தர் சி போட்டி.. மதுரை மத்திய தொகுதியில் களம் இறங்குகிறார்.. ஏசி சண்முகம் அறிவிப்பு -
தமிழ் புத்தாண்டு பலன்: எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 3 ராசிகள்.. உங்க ராசி இருக்கா பாருங்க -
எழும்பூர் டூ பத்மநாபபுரம் வரை.. திமுகவில் சீட் மறுக்கப்பட்ட சிட்டிங் எம்எல்ஏக்கள்! முழு விவரம் -
அண்ணாமலையை தொட்ட விஜய்! கொங்குவில் ரகசிய வார் ரூம் டீல்? எடப்பாடி பழனிசாமிக்கு காத்திருக்கும் ஷாக்

Click it and Unblock the Notifications