கண்வலிக்கிழங்கு விதையை அரைத்து குடித்த பெண் போலீஸ் வள்ளியம்மாள்.. பரிதாப பலி!
திருப்பூர் அருகே பெண் போலீஸ் தற்கொலை செய்து கொண்டார்
திருப்பூர்: பெண் போலீஸ் வள்ளியம்மாள், விஷ விதையை அரைத்து குடித்து உயிரிழந்துவிட்டார்.. திருப்பூரில் இந்த சோக சம்பவம் நடந்துள்ளது.
திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை அடுத்தள்ள மூலனூர் போலீஸ் ஸ்டேஷனில் வேலை பார்க்கும் பெண் போலீஸ் வள்ளியம்மாள்.. வயது 31 ஆகிறது.

இவரது கணவர் ராமசாமி.. அவருக்கு வயது 35.. இவர்களுக்கு கல்யாணம் ஆகி 13 வருடங்கள் ஆகின்றன.. ஆனால் குழந்தை இல்லை.. இதனால் பல காலமாகவே மன உளைச்சலில் கலங்கி வந்துள்ளார் வள்ளியம்மாள்.
சமீப காலமாக கடுமையான மனவருத்தத்தில் இருந்ததாக சொல்லப்படுகிறது.. இந்நிலையில் சம்பவத்தன்று வீட்டில் யாருமில்லாத நேரம் கண்வலிக்கிழங்கு விதையை அரைத்துக் குடித்துள்ளார்.. இந்த கண்வலிக்கிழங்கு என்பது ஒரு கொடிய வகை மருந்து பயிர் ஆகும்.. வேலிகளில் படர்ந்து காணப்படும்.. காந்தள் மலர் மருந்து செடி என்றும் சொல்வார்கள்.
இந்த விதையைதான் வள்ளியம்மாள் அரைத்து குடித்து மயங்கி விழுந்துள்ளார். திடீரென மனைவி மயங்கி விழுவதை பார்த்ததும் பதறிபோன கணவர் ராமசாமி அவரை மீட்டு சிகிச்சைக்காக தாராபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றார். பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரியிலும் கொண்டு சென்று அனுமதித்தார்.
ஆனால், சிகிச்சை பலனின்றி வள்ளியம்மாள் உயிர் பிரிந்தது.. இது சம்பந்தமாக மூலனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். கல்யாணமாகி 13 வருஷம் ஆகியும் குழந்தை இல்லாததால் மன உளைச்சல் ஏற்பட்டதால் அவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டது விசாரணையில் தெரியவந்தது.
-
காலையில் கஞ்சா பால்.. இட்லிக்கு கஞ்சா சட்னி.. பெட் ரூம் முழுக்க 70 கஞ்சா செடிகள்.. மிரண்ட போலீஸ் -
தஞ்சையில் கள்ளக்காதல்.. நள்ளிரவில் புருஷன்- சொந்த அக்காவை தீயில் கொளுத்திய அமுதா -
முதல்வர் விஜய் தொகுதியில் சூட்கேஸுக்குள் தலையில்லாத ஆண் சடலம்.. பெரம்பூர் ரயில் நிலையத்தில் ஷாக்! -
காதல் திருமணம் செய்துக்கொண்ட மகள்! பெட்ரோல் குண்டு வீசிய பாசக்கார தந்தை! நெல்லையில் ஷாக்! -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி












Click it and Unblock the Notifications