காதலன் வீட்டில் 3 நாள் தங்கிய காதலி.. திடீரென தூக்கில் தொங்கினார்.. பல்லடத்தில் பரபரப்பு
காதல் விவகாரத்தில் இளம் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
பல்லடம்: பெற்றோரை ஏமாற்றிவிட்டு காதலன் வீட்டுக்கு சென்ற இளம்பெண்ணின் வாழ்வு மிகவும் மோசமாக முடிந்திருக்கிறது.
வால்பாறையை சேர்ந்தவர் மஞ்சுளா. திருப்பூரில் ஒரு மில்லில் வேலை பார்த்து வந்தார். உடன் வேலை பார்த்து வந்த கார்த்தி மீது மஞ்சுளாவுக்கு லவ் வந்துவிட்டது.
கார்த்தியும் மஞ்சுளாவை விரும்ப, ரெண்டு பேரும் ரொம்ப தீவிரமாக காதலித்தார்கள். இந்த லவ் மேட்டர் மஞ்சுளா வீட்டுக்கு தெரிந்துள்ளது. இதனால் அவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்திருக்கிறார்கள்.

காதலன் வீடு
இந்நிலையில், தனது அம்மா வசந்தாவுக்கு உடம்பு சரியில்லை என்று கேள்விப்பட்டு மஞ்சுளா ஊருக்கு கிளம்பி போனார். அம்மாவையும் நேரில் பார்த்து விசாரித்தார். பிறகு வேலைக்கு போகிறேன் என்று சொல்லிவிட்டு, அங்கு போகாமல், நேராக திருப்பூரில் உள்ள கார்த்தி வீட்டுக்கு மஞ்சுளா வந்திருக்கிறார்.

தூக்கில் தொங்கினார்
3 நாட்கள் கார்த்தி வீட்டில்தான் மஞ்சுளா தங்கியிருந்து இருக்கிறார். இந்நிலையில், மஞ்சுளா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த கார்த்திகேயன் குடும்பத்தினர் உடனே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

மரணத்தில் மர்மம்
சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது சம்பந்தமாக உடனடியாக மஞ்சுளா பெற்றோருக்கும் தகவல் அளிக்கப்பட்டது. இதையடுத்து, மஞ்சுளாவின் மரணத்தில் மர்மம் இருப்பதாக உறவினர்கள் புகார் அளித்தார்கள்.

தடயங்கள் இல்லை
இதுகுறித்து போலீசார் விசாரணையை மேற்கொண்டுள்ளனர். மஞ்சுளா எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என இதுவரை தெரியவில்லை. மற்றொரு புறம், மஞ்சுளா தூக்கில் தொங்கியதற்கான தடயங்களும் இல்லை. எனவே காதலன் கார்த்திக்கை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

பெற்றோர் மறுப்பு
இதனிடையே மஞ்சுளா என்ற பெண் தங்கள் வீட்டில் தங்கி இருந்ததே தங்களுக்கு தெரியாது என்று கார்த்திக்கின் பெற்றோர் சொன்னதை கேட்டு போலீசாருக்கு இன்னும் தலையே சுற்றிவிட்டது. அதனால் 3 நாட்கள் மஞ்சுளா கார்த்தி வீட்டில் தங்கியிருக்க காரணம் என்ன? அங்கு என்ன நடந்தது? எதற்காக இந்த தற்கொலை? என்பது உட்பட பல்வேறு விஷயங்களில் போலீசார் விசாரணையை விரிவுபடுத்தி உள்ளனர்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications