200 கோடி, 300 கோடி செலவு பண்ணி படம் எடுத்தால்... ஈஸியாக காலி பண்ணிடுறாங்க.. திருப்பூர் சுப்பிரமணியம்
திருப்பூர்: எந்த படமும் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டது அல்ல... ஆனால் சமீப காலமாக என்ன நடக்கிறது என்றால்.. ஒரு 200 கோடி , 300 கோடி செலவு பண்ணி, ஒன்றரை வருடம், இரண்டு வருடம் சிரமப்பட்டு எடுக்கக்கூடிய படத்தை ஈஸியா நெகட்டிவ் ரிவ்யூ போட்டு அந்த படத்த காலி பண்ணிடுறாங்க.. என்று திருப்பூர் சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர் சங்க தலைவர் திருப்பூர் சுப்பிரமணியம் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், சமீப காலமாக வரக்கூடிய படங்களை பற்றி, நிறைய இன்றைக்கு வந்து யூடியூபர்கள், சேனல்கள் வந்துவிட்டார்கள்.. இன்று நெகட்டிவ் ரிவியூ மட்டும் இவர்கள் போட ஆரம்பித்துவிட்டார்கள்.. சினிமா ஆரம்ப காலத்தில் இருந்தே விமர்சனங்களை சந்தித்துக் கொண்டு தான் இருந்தது- எந்த படமும் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டது அல்ல... ஆனால் சமீப காலமாக என்ன நடக்கிறது என்றால்.. ஒரு 200 கோடி , 300 கோடி செலவு பண்ணி, ஒன்றரை வருடம், இரண்டு வருடம் சிரமப்பட்டு எடுக்கக்கூடிய படத்தை ஈஸியா நெகட்டிவ் ரிவ்யூ போட்டு அந்த படத்த காலி பண்ணிடுறாங்க..

தமிழ்நாட்டை பொறுத்தவரை காலை 9மணிக்கு தான் புதிய படங்களுக்கான சிறப்பு காட் நடக்கிறது. அதே சமயம் மற்ற மாநிலங்களில் அதிகாலையில் படம் வெளியாகிறது. அதை இவர்கள் போய் பார்த்துவிட்டு, குறைகளை மட்டுமே சொல்கிறார்கள்.. இதனால் என்னாகிறது என்றால்... இன்றைக்கு மீடியாக்கள் அதிகமாகிவிட்டது. வாட்ஸ் அப் குரூப்கள் அதிகமாகிடுச்சு.. ஒரு விஷயத்தை ஒருவர் வந்து பிளாஸ் பண்ணி விட்டாங்க அப்படீன்னா.. ஒரு மணி நேரத்தில் லட்சக்கணக்கான மக்கள் அதனை பார்த்து விடுகிறார்கள்... அப்படி என்றால், அதிகாலை 5 மணிக்கு, 6 மணிக்கு மற்ற மாநிலங்களில் போய் படம் பார்க்கும் யூடியூபர்கள் ரிவியூ சொல்கிறார்கள். அதனை தமிழ்நாடு முழுவதும் 7 முதல் 8 மணிக்கு எல்லாம் மக்கள் பார்க்கிறார்கள்.. ரிவியூ சொல்பவர்கள் யாரும் படத்தின் நிறைகளை பற்றி சொல்வதே கிடையாது.. முழுவதும் குறைகளை சொல்லி அந்த படத்தை பொறுத்தவரை ஓபனிங்கே இல்லாமல் செய்துவிடுகிறார்கள்..
இது சரியான முறை இல்லை என்று நாங்கள் (தயாரிப்பாளர்கள், விநியோகிஸ்தர்கள், திரையரங்கு உரிமையாளர்கள்) ரொம்ப நாளாகவே பேசிக் கொண்டிருந்தோம்.. அதனால் தான் அதுபற்றி என் கருத்தை கூறியிருந்தேன். மற்ற மாநிலங்களிலும் சிறப்பு காட்சிகளை தமிழகத்தில் ஆரம்பமாகும் 9 மணிக்கு ஆரம்பிக்க வேண்டும். படம் பார்க்கும் மக்கள் அவர்களுக்குள் விமர்சனம் செய்வதை நாங்கள் யாரும் வேண்டாம் என்று சொல்லவில்லை.. ஆனால் சமீப காலமாக யூடியூபர்கள் எப்படி என்றால், உதாரணத்திற்கு வேட்டையன் படத்தை எடுத்துக் கொள்ளுங்கள்... அதற்கு முன்பு ரிலீஸ் ஆன இந்தியன் 2 படத்தை எடுத்துக் கொள்ளுங்கள்.. அந்த படங்கள் எல்லாம் எந்த அளவிற்கு பிரம்மாண்டமாக எடுத்தார்கள் என்பது உங்களுக்கே தெரியும்..
படங்களை பற்றி கலவையான விமர்சனங்கள் இருக்கலாம்.. ஆயிரம் பேர் படம் பார்த்து வெளியில் வரும் போது, ஒரு நான்கு பேருக்கு அந்த படம் பிடிக்காது.. அந்த பிடிக்காத விமர்சனத்தை திரும்ப திரும்ப போடும் போது என்னாகிறது என்றால்.. படத்திற்கு வரலாம் என்று நினைத்தவர்கள் கூட வராமல் இருக்கிறார்கள்... இந்த விமர்சனங்களால் நியாயமாக வர வேண்டிய வசூலில் 30 முதல் 40 சதவீதம் வராமல் எங்களை பாதிக்கிறது..
அதனால் தான் தயாரிப்பாளர் எல்லாருமே காலை 9மணிக்கு படத்தை வெளியிடுங்கள்.. திரையரங்கு உரிமையாளர்களை பொறுத்தவரை வளாகத்திற்கு படத்தை விமர்சித்து பேசுவதை அனுமதிக்க வேண்டாம் என்று கூறினேன்.. எதற்காக சொல்கிறேன் என்றால்.. ஓட்டல் முன் நின்று யாரும் நல்லா இல்லை என்று ரிவியூ செய்வது இல்லை.. ஆனால் தியேட்டரில் மட்டும் செய்கிறார்கள்..ரிவியூ தவறு இல்லை.. ஆனால் மிகவும் தரம் தாழ்ந்து செய்யக்கூடாது" இவ்வாறு கூறினார்.












Click it and Unblock the Notifications