அல்வா மாதிரி மாட்டியது.. தமிழக தேர்தல் களத்தை உலுக்க போகும் "சாக்கு மூட்டை".. திமுகவிற்கு செம சான்ஸ்

Subscribe to Oneindia Tamil

திருச்சி: திருச்சியில் நேற்று நடந்த சம்பவம் ஒன்று தமிழக தேர்தல் களத்தில் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.. திருச்சி பெட்டவாய்த்தலை பாலம் அருகே கிடந்த ஒரு சாக்கு மூட்டை திருச்சியை உலுக்கி உள்ளது.

தமிழகத்தில் சட்டசபை தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ளன. தேர்தலை முன்னிட்டு தமிழகம் முழுக்க பறக்கும்படையினர் தீவிர ரோந்து பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள்.தேர்தல் ஆணையம் சார்பாக தீவிரமான கண்காணிப்பு பணிகளை அதிகாரிகள் மேற்கொண்டு வருகிறார்கள்.

தெருவுக்கு தெரு பறக்கும்படையினர் சோதனைகளை மேற்கொண்டு வருகிறார்கள். இதில் நேற்று நடந்த ஒரு சம்பவம்தான் திமுகவை குஷிப்படுத்தி உள்ளது.

எப்படி

எப்படி

நேற்று திருச்சியில் தேர்தல் அதிகாரிகள் சோதனையில் ஈடுப்பட்ட போது திருச்சி - கரூர் சாலையில் பெட்டவாய்த்தலை பாலத்தில் ஜீப் ஒன்று நின்று கொண்டு இருந்தது. இதை பார்த்து சந்தேகப்பட்ட தேர்தல் அதிகாரிகள் ஜீப் அருகே சென்று விசாரித்தனர். இந்த விசாரணை நடக்கும் போதே அருகில் இருந்த சாக்குமூட்டை ஒன்றையும் அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.

சாக்கு

சாக்கு

இந்த சாக்கு மூட்டையை திறந்து பார்த்ததில் அதில் 1 கோடி ரூபாய் பணம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அந்த ஜீப் ஓட்டுனரிடம் போலீசார் சரமாரியாக விசாரித்தனர். முடிவில் அந்த ஜீப்பில் இருந்தவர்கள் முசிறி சட்டபேரவை தொகுதி அதிமுக எம் எல் ஏவும் தற்போதைய வேட்பாளருமான செல்வராஜ் நண்பர்கள் என்று கண்டுபிடிக்கப்பட்டது. இந்த ஜீப்பே அவருடையதுதான் என்று கண்டுபிடிக்கப்பட்டது ..

கவுன்சிலர்

கவுன்சிலர்

அதிமுகவை சேர்ந்த மாவட்ட கவுன்சிலர் ரவிச்சந்திரனும் இந்த காரில் இருந்தார். ஆனால் இந்த 1 கோடி ரூபாய் எங்களுடையது இல்லை. இந்த பாலத்தில் இரண்டு காரில் வந்த நபர்கள் சண்டை போட்டுகொண்டு இருந்தனர். அவர்கள்தான் இந்த மூட்டையை தூக்கி எறிந்துவிட்டு சென்றனர் என்று அதிமுக நிர்வாகிகள் கூறியுள்ளனர். இவர்கள் முன்னுக்கு பின் முரணாக பேசி உள்ளனர்.

பதற்றம்

பதற்றம்

அதோடு பதற்றமாக காணப்பட்டனர். இதனால் பணத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள் இவர்களையும் கைது செய்தனர். திருச்சி திமுக நிர்வாகிகள் இன்னொரு பக்கம் இதை கேட்டு குஷியில் உள்ளனர். இது அதிமுக பணம்தான். மக்களுக்கு கொடுக்க எடுத்து வந்தனர். நல்லவேளை போலீஸ் பிடித்துவிட்டது.

விளையாடுகிறது

விளையாடுகிறது

இந்த தேர்தலில் பணம் அதிகம் விளையாடுகிறது. அதற்கு இந்த சாக்கு மூட்டைதான் உதாரணம். இந்த மூட்டை யாருடையது என்பது எங்களுக்கு தெரியும்.. அதை சீக்கிரம் தெரியப்படுத்துவோம். இந்த விஷயத்தை நாங்கள் மக்களிடம் கொண்டு செல்வோம் என்று திமுகவினர் கூறுகிறார்கள். சாக்கு மூட்டை ஒன்றில் 1 கோடி ரூபாய் பணம் இருந்தது திருச்சியில் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+