தங்கம் பிஸ்கட்.. ரூ.11 கோடிக்கு 10 கிலோ தங்கம்! உருக்கப்பட்ட தங்கத்தால் மலைத்த திருச்சி.. நகை எங்கே
திருச்சி: தங்க நகைகளின் விலையானது ராக்கெட் வேகத்தில் உயர்ந்து கொண்டிருக்கிறது. இதனால் ஏழை, எளிய மக்களால் தங்கத்தை நினைத்து கூட பார்க்க முடியாத நிலைமை வந்துள்ளது.. ஆனால், ஏற்கனவே அரும்பாடுபட்டு சேர்த்து வைத்த நகைகளையும் கொள்ளை போவது, மிகப்பெரிய அதிர்வலையை தந்து வருகிறது.. சமீபகாலமாகவே நகை கொள்ளை, நகை திருட்டு சம்பவங்கள் அதிகரித்தபடியே உள்ளதே இதற்கு சாட்சி.. கடந்த 13ம் தேதி திருச்சியில் மிகப்பெரிய திருட்டு சம்பவம் ஒன்று நடந்து, போலீசாருக்கே சவாலாக அமைந்துவிட்டது.
சென்னை சவுகார்பேட்டையை சேர்ந்த குணவந்த், மகேஷ் இருவரும் தங்க நகை கடை விற்பனை பிரதிநிதிகளாக உள்ளனர்.. இவர்கள் கடந்த மாதம் 8ம் தேதி கிலோ கணக்கில் தங்க கட்டிகளை, சேலம், கோவை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் நகை கடைகளில் விற்பனைக்காக தருவதற்கு காரில் சென்றார்கள்.

அங்கு விற்பனைக்கு தந்துவிட்டு, பிறகு திண்டுக்கல்லில் இருந்த ஒரு நகைக்கடையில் விற்பனையை முடித்துக்கொண்டு, மிச்சமிருந்த ரூ.11 கிலோ மதிப்புள்ள 10 கிலோ தங்கக்கட்டிகளுடன் கடந்த 13ம் தேதி சென்னைக்கு காரில் திரும்பி கொண்டிருந்தனர். காரை, ராஜஸ்தானை சேர்ந்த டிரைவர் பிரதீப் கான் என்பவர் ஓட்டியிருக்கிறார்.
11 கோடி தங்கம்
சமயபுரம் அருகே நள்ளிரவு கார் வந்தபோது, இயற்கை உபாதை கழிப்பதற்காக டிரைவர் பிரதீப் கான் காரை சாலையோரம் நிறுத்தினார்..
உடனே காரிலிருந்த மற்றவர்களும் கீழே இறங்கியிருக்கிறார்கள். அப்போது இவர்களது காரை, பின்தொடர்ந்து மற்றொரு கார் வந்தது.. கண்ணிமைக்கும் நேரத்தில் அந்த காரில் இருந்து இறங்கி வந்த கும்பல், டிரைவர், மற்றும் காரிலிருந்த 2 பேர் என அனைவர் மீதும் கண்களில் மிளகாய் பொடியை தூவிவிட்டு, காரில் வைத்திருந்த ரூ.11 கிலோ மதிப்புள்ள 10 கிலோ தங்க கட்டிகளையும் எடுத்துக்கொண்டு தப்பிச்சென்றுவிட்டனர்.
கிலோ கணக்கில் நகை
இதனால் அதிர்ச்சியடைந்த நகை வியாபாரிகள் இதுகுறித்து சமயபுரம் போலீசில் புகார் தரவும், உடனடியாக இதுகுறித்து வழக்கு பதிவு செய்து கொள்ளையர்களை போலீசார் தேட துவங்கினார்கள்..
இறுதியில் அந்த கும்பல் மத்திய பிரதேசத்தில் பதுங்கி இருப்பதாக ரகசிய தகவல் கிடைக்கவும், சமயபுரம் போலீசாரும் மத்திய பிரதேசத்துக்கு சென்று, அங்கு பதுங்கியிருந்த மங்கிலால் தேவாசி (22) விக்ரம் ஜாட் (19) இருவரையும் கைது செய்தது. இருவருமே ராஜஸ்தான் ஜோத்பூர் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் ஆவர்.
அவர்களிடமிருந்து ரூ.10 கோடி மதிப்புள்ள 9.432 கிலோ தங்க நகைகள், ரூ.6 லட்சம் ரொக்கம், 1 நாட்டுத்துப்பாக்கி, தோட்டாக்கள்,1 செல்போனை பறிமுதல் செய்தனர்.. கொள்ளையடித்த தங்க கட்டிகள் சிலவற்றை தங்க பிஸ்கட்டுகளாக உருக்கி வைத்திருந்ததால், அதனையும் பறிமுதல் செய்து, அவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர்.
தனிப்படை அமைப்பு
இதற்காகவே மாவட்ட எஸ்.பி. செல்வநாகரத்தினம் உத்தரவின்பேரில், லால்குடி டி.எஸ்.பி. தினேஷ்குமார், காவல் ஆய்வாளர்கள் கருணாகரன், ரகுராமன், முத்தையன், குணசேகரன், கண்ணதாசன் ஆகியோர் கொண்ட 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டன.
அப்போதுதான், கொள்ளையர்கள் பயன்படுத்திய காரின் பதிவு எண் (டி.என்.06-வ்0608 ) போலியானது என்பதும், அதன் உண்மையான பதிவெண் (25 பி.ஹெச்.4097 ஜெ) என்றும், அதன் உரிமையாளர் ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரைச் சேர்ந்தவர் என்பதும் விசாரணையில் தெரியவந்தது.
இதையடுத்து, தனிப்படையினர் கர்நாடகா, ராஜஸ்தான், மஹாராஷ்டிரா, பீகார் மற்றும் மத்தியப்பிரதேசம் ஆகிய வெளிமாநிலங்களில் முகாமிட்டு தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இதில், பாதிக்கப்பட்டவர்களின் காரை ஓட்டி வந்த டிரைவர் பிரதீப் ஜாத்திற்கே இந்தக் கொள்ளை சம்பவத்தில் தொடர்பு இருந்தது அம்பலமானது.
ஓடும் பஸ்ஸில் பிடிபட்டனர்
இதையடுத்து, பிரதீப் ஜாத் மற்றும் அவருடன் தொடர்பில் இருந்த மனோகர் ராம் ஆகியோரைக் கைது செய்து விசாரித்ததில், இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட 250க்கும் மேற்பட்ட செல்போன் நம்பர், 12 வங்கிக் கணக்குகள், 15க்கும் மேற்பட்ட டோல் பிளாசாக்களின் ஆய்வுகள் முக்கியத் துப்பு அளித்தன.
இதன் அடிப்படையில், கொள்ளையர்கள் தப்பிச் சென்ற காரை கர்நாடக மாநிலம் ஹூப்ளி பகுதியில் போலீசார் கண்டுபிடித்தனர். அத்துடன் 300க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில், மத்திய பிரதேசம் சென்ற போலீசார், மும்பை - ஆக்ரா நெடுஞ்சாலையில் பர்வானிக்கு சென்ற பஸ்ஸில் சோதனை செய்தனர்.
கும்பலுடன் கைது
அப்போது, இக்கொள்ளைக்கு மூளையாக செயல்பட்ட ராஜஸ்தானை சேர்ந்த முக்கியக் குற்றவாளியான ஜோத் மங்கிலால் மற்றும் விக்ரம் ஜாட் ஆகியோரைக் கைது செய்தனர்.
விசாரணையில் அவர்கள் தந்த தகவலின்பேரில், பன்னாராம் தேவாசி என்கிற வினோத், சொகைல்கான் என்கிற முகமது சொகைல், கைலாஷ், ஹனுமான் ஜாட், மனிஷ் சிரோகி, பரத் ராம், ராகேஷ் மற்றும் அவரது மனைவி லட்சுமி தேவி ஆகிய 10 பேரையும் தனிப்படையினர் கடந்த 5ம் தேதி மும்பையில் வைத்து கைது செய்தனர்.
பாராட்டிய எஸ்பி
தமிழக காவல்துறையினரால் ஏற்கனவே இருவர் கைது செய்யப்பட்ட நிலையில், பிற மாநில போலீசாரின் உதவியுடன் மொத்தம் 12 பேர் கைது செய்யப்பட்டனர்.
விரைந்து செயல்பட்ட தனிப்படையினரை எஸ்.பி. செல்வநாகரத்தினம் பாராட்டினார். மேலும் இது தொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் பேசும்போது, இந்தக்கொள்ளை வழக்கில் எடுத்து செல்லப்பட்ட தங்க நகைகள் உரிய அனுமதியின்றி கொண்டு செல்லப்பட்டது குறித்து வருமானவரித்துறைக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
போலீஸ் அறிவுரை
வேலைக்கு ஆட்களை சேர்க்கும்போது அவர்களின் பின்புலம் குறித்து ஆய்வு செய்த பிறகே வேலையில் அவர்களை அமர்த்த வேண்டும். விலை உயர்ந்த ஆபரணங்களை வாகனங்களில் எடுத்துச் செல்லும்போது உரிய பாதுகாப்புடன், அரசு வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றிச் செல்ல வேண்டும்.
வாகனங்களை பொதுமக்கள் அதிகமுள்ள இடங்களில் மட்டுமே நிறுத்த வேண்டும், இருள் சூழ்ந்த பகுதிகளில் நிறுத்தக் கூடாது. அவசர உதவிக்கு தமிழ்நாடு காவல்துறையின் காவல் உதவி மொபைல் செயலியைப் பயன்படுத்த வேண்டும்" என்றார்.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி












Click it and Unblock the Notifications