Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நைட் "பஸ் ஸ்டாண்ட்" வந்துடுங்க.. நைஸா பேசிய பெண் ஆபீஸர்.. சைஸா வந்த போலீஸ்.. அட.. என்னாச்சு பாருங்க

கோயில் பணிக்கு லஞ்சம் வாங்கிய பெண் அதிகாரி கையும் களவுமாக சிக்கினார்

Subscribe to Oneindia Tamil

திருச்சி: அரசு துறையில் ஒரு பெண் அதிகாரி லஞ்சம் கேட்டு சிக்கியது என்பது குறித்த தகவல்கள் வெளியாகி பரபரப்பை கிளப்பி விட்டுள்ளது.

திருச்சி மாவட்டத்தில் புகழ்பெற்ற வைணவ திருத்தலங்கள் ஒன்றுதான் குணசீலம் பிரசன்ன வெங்கடாஜலபதி திருக்கோயிலில்.. இங்கு என்ன ஸ்பெஷல் என்றால், மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு கோயிலில் இருந்து எடுத்துவரப்பட்ட தீர்த்தம் காலை, மாலை 2 வேளையிலும் மருந்தாக இங்கு தரப்படும்..

சுவாமிக்கு அபிஷேகம் செய்த தீர்த்தத்தை, பாதிக்கப்பட்டவர்களின் முகத்தில் தெளித்து வைத்தியம் வழங்கப்பட்டு வருகிறது.. இது பக்தர்களின் பெருத்த நம்பிக்கையாகவும் உள்ளது.. அதனால், ஏராளமானோர், மிகுந்த நம்பிக்கையுடன் இந்த கோயிலுக்கு வந்து செல்வது வழக்கம்.

 பிச்சுமணி

பிச்சுமணி

அந்த அளவுக்கு புகழ்வாய்ந்த இந்த பிரசித்தி பெற்ற திருக்கோயிலில், திருப்பணிகளை நிறைவேற்றுவதற்காகவே ஒரு பெண் அதிகாரியை நியமித்துள்ளனர்.. ஆனால், இந்த அதிகாரிதான், லஞ்சத்தை வாங்கியிருக்கிறார்.. திருச்சி மாவட்டம் முசிறி வட்டம் குணசேலத்தை சேர்ந்தவர் பிச்சுமணி.. குணசீலம் ஸ்ரீபிரசன்ன வெங்கடாஜலபதி பெருமாள் திருக்கோவிலில் பரம்பரை நிர்வாகியாக இருந்து வருகிறார்... இந்த கோவிலுக்கு திருப்பணி வேலைகள் நடந்து 12 வருடங்களுக்கு மேலாகிவிட்டதாம்..

ரிப்போர்ட்

ரிப்போர்ட்

அதனால், இப்போது திருப்பணி நடத்த முடிவு செய்து, அதற்காக இந்து அறநிலையத்துறையின் உதவியையும் பெற்றுள்ளனர்.. எனினும், தமிழக அரசால் நியமிக்கப்பட்ட State level expert committee என்ற கமிட்டியில், ஆய்வறிக்கை ஒன்றையும் பெற்று, அதை தாக்கல் செய்ய வேண்டும்.. அந்த ஆய்வறிக்கையை உடனே தந்துவிட முடியாது.. இதற்காக கமிட்டி உள்ளது.. அவர்கள் கோயிலை நேரடியாக ஆய்வு செய்து, அதற்கு பிறகுதான், அறிக்கையை தருவார்கள்.. அதன்படி, கடந்த ஜுன் மாதம், அந்த கோயிலை ஆய்வு செய்துள்ளனர்...

 10,00,000

10,00,000

ஆனால், ஆய்வு அறிக்கை மட்டும் வரவேயில்லை.. அதனால், கோயில் நிர்வாகத்தினர் கமிட்டியினரை தொடர்பு கொண்டு அறிக்கை குறித்து கேட்டனர்.. அப்போதுதான் தெரிந்தது, அந்த பெண் அதிகாரி மூர்த்தீஸ்வரிதான் இடைஞ்சலாக இருக்கிறார் என்பதை அறிந்து அதிர்ந்து போனார்கள்.. திண்டுக்கல் மாவட்டம் பழனி ராஜாநகர் லட்சுமிபுரம் பகுதியை சேர்ந்தவராம் மூர்த்தீஸ்வரி.. தொல்லியல்துறை வல்லுனரும்கூட.. ஓய்வு பெற்ற அறநிலையத்துறை அதிகாரியும்கூட.. கடந்த 12ம்தேதி கோயிலுக்கு வந்து, டிரஸ்டியை சந்தித்து 10 லட்ச ரூபாய் பணம் கொடுத்தால் கமிட்டியிலிருந்து ஆய்வறிக்கை வழங்குவேன் என்று கண்டிஷன் போட்டாராம்..

 10 பைசா

10 பைசா

இதைக்கேட்டு அதிர்ந்துபோன பிச்சுமணி, 10 லட்சம் அதிகம்.. இதை உபயதாரர்களிடம் கேட்க முடியாது என்று சொல்லி உள்ளார்.. அதற்கு மூர்த்தீஸ்வரி, 5 லட்ச ரூபாய் கொடுங்கள் போதும் என்றாராம்.. 10 பைசாகூட லஞ்சம் கொடுக்க விரும்பாத பிச்சுமணி, திருச்சி லஞ்ச ஒழிப்புத்துறை ஆபீசுக்கு போய் விஷயத்தை சொல்லிவிட்டார்.. பிறகு அதிகாரிகள் கொடுத்த ஆலோசனையின் பேரில், 1 லட்சம் அட்வான்ஸ் பணம் தருவதாகவும், திருச்சி பஸ் ஸ்டாண்ட் பக்கத்தில் லாட்ஜ் ஒன்றில் வந்து பணத்தை வாங்கி கொள்ளுமாறும் மூர்த்தீஸ்வரியிடம் சொல்லி உள்ளார்.. அதன்படியே நேற்று இரவு பஸ் ஸ்டாண்டுக்கு வந்தார் மூர்த்தீஸ்வரி.

 பஸ் ஸ்டாண்டு

பஸ் ஸ்டாண்டு

மறைந்திருந்த போலீசார் மூர்த்தீஸ்வரியை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.காஜாமலை லஞ்ச ஒழிப்புத்துறை ஆபீசிலேயே வைத்து லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் விசாரணையை துவங்கினார்.. அப்போதுதான், மூர்த்தீஸ்வரியின் பல ஏடாகூடங்கள் வெளியே வந்தன.. தமிழகத்தில் இது போன்ற பல கோவில்களுக்கு இந்த கமிட்டியினரால் ஆய்வறிக்கை வழங்கப்படாமல் கோவில்களின் திருப்பணி வேலைகள் நடைபெறாமல் நிலுவையிலேயே உள்ளதாம்.. ஆய்வறிக்கை வேண்டுமென்றால் லஞ்சம் தந்தே ஆக வேண்டும் என்று கட்டாயப்படுத்தி பெற்று வந்துள்ளதும் தெரிய வந்துள்ளது...

 சம்பாத்தியம்

சம்பாத்தியம்

அதுமட்டுமல்ல, மூர்த்தீஸ்வரி காரை சோதனை செய்ததில் அவரது காரில் கணக்கில் வராத 5 லட்ச ரூபாய் இருப்பது இருந்துள்ளது.. அது யாரை மிரட்டி வாங்கிய லஞ்சப்பணம் என்று தெரியவில்லை.. எத்தனை பேரை ஏமாற்றி, எவ்வளவு கோடி சம்பாதித்துள்ளார் என்றும் தெரியவில்லை.. விசாரணை நடந்து கொண்டிருக்கிறது.. பொதுவாக, அரசு பணியில் பெண்கள் பொறுப்பாக செயல்படுவார்கள் என்பார்கள்.. ஒரு தர்ம காரியத்துக்காக கோயிலில் கமிட்டியில் இவரை நியமித்தால், இப்படியா செய்வது???

ஷாக்கிங்

ஷாக்கிங்

இதில் இன்னொரு விஷயமும் வெளியாகி உள்ளது.. மூர்த்தீஸ்வரியிடம் தொடர் விசாரணை நடத்தப்பட்டதில், தொல்லியல்துறை வல்லுநராக இவர் இருந்திருக்கிறார்.. இந்து அறநிலையத்துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றிருக்கிறார் என்றாலும், இப்படி பல கோயில்களில் லஞ்சமாக பணம் பெற்றதும், லஞ்சம் கொடுக்காத கோயில்களில் அறிக்கை சமர்ப்பிக்காமல் இவர் உட்பட இவரது குழுவினர்களும் இழுத்தடித்து வந்துள்ளார்களாம்.. எனவே, இதில் மற்ற அதிகாரிகளுக்கு இதில் சம்பந்தம் இருப்பதாக போலீசார் சந்தேகிக்கின்றனர்.. அதுமட்டுமல்ல, சம்பந்தப்பட்ட கோயிலை ஆய்வு செய்து 4 மாதங்காளாகியும் எதனடிப்படையில் அறிக்கையை சமர்ப்பிக்காமல் நிபுணர் குழுவினர் காலம் தாழ்த்தி வந்தனர் என்றும் லஞ்ச ஒழிப்புத்துறையினர் விசாரணையை கையில் எடுத்திருப்பதால், பல பேர் இதில் சிக்குவார்கள் என்கிறார்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+