ஆறு வயது மாமன்மகளிடம் விபரீதமாக விளையாடிய அத்தை மகன்கள் கைது
திருச்சி அருகே மாமன் மகளான 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த 2 மாணவர்களை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்.
திருச்சி: ஆறு வயது மாமன் மகளுடன் ஒடிப்பிடித்து விளையாடாமல் விபரீதமாக விளையாடிய அத்தை மகன்கள் இருவரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்த காவல்துறையினர் சிறுவர் சீர்திருத்த பள்ளிக்கு அனுப்பி வைத்துள்ளனர். திருச்சியில் இந்த அதிர்ச்சிகரமான சம்பவம் நடந்துள்ளது.
கோடை விடுமுறையில் சொந்தக்காரர்கள் வீட்டிற்கு போவது வழக்கமான ஒன்று. அப்படித்தான் திருச்சி ஜீயபுரம் அருகே தாயனூர் கீழக்காட்டில் உள்ள மாமா வீட்டிற்கு இரண்டு சிறுவர்கள் விடுமுறைக்கு சென்றுள்ளனர். மாமனுக்கு ஆறு வயதில் ஒரு மகள் இருக்கிறாள். அவளுடன் விளையாடிக்கொண்டு பொழுதை போக்கியுள்ளனர்.

அத்தையும், மாமாவும் வேலைக்காக வெளியில் சென்ற நேரத்தில் தனியாக இருந்த சிறுமியிடம் விளையாடிக்கொண்டிருந்தவர்கள் ஒரு கட்டத்தில் பாலியல் ரீதியாக துன்புறுத்தியுள்ளனர். விளையாட்டு போக்கில் சிறுமி அதனை தெரிவிக்கவில்லை.
குளிக்க வைக்கும் போது சிறுமியின் ஆடைகளில் ரத்தக்கறை இருந்துள்ளது. உறுப்பில் ரத்தப்போகும் இருந்துள்ளது. இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த சிறுமி அம்மா, என்ன நடந்தது என்று விசாரித்தார்.
அப்போது அந்த சிறுமி அழுது கொண்டே அத்தை மகன்கள் தன்னிடம் நடந்து கொண்ட விதத்தை கூறினார். சிறுமியை உடனடியாக மருத்துவமனையில் அனுமதித்த பெற்றோர் ஜீயபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
இதனையடுத்து இன்ஸ்பெக்டர் விஜயலட்சுமி வழக்குபதிவு செய்து இரண்டு சிறுவர்கள் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். மைனர் சிறுவர்கள் என்பதால் சிறுவர் சீர்திருத்த பள்ளிக்கு அனுப்பி வைத்தனர். பாதிக்கப்பட்ட சிறுமிக்கு திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
அக்கம் பக்கத்து வீட்டினர்களால் பாலியல் தொல்லை ஏற்படுவது ஒருபுறம் இருக்க சொந்தக்காரர்களால் சிறுமிகள் பாதிக்கப்படுவது அதிகரித்து வருகிறது. யாரையும் நம்பி வீட்டிற்குள் விடவே பயமாக இருக்கிறது என்பது பெண் குழந்தையை பெற்றவர்களின் வேதனையாக இருக்கிறது.
-
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக












Click it and Unblock the Notifications