3டி பிரின்டிங் டெக்னாலஜியில் முகக் கேடயங்கள் தயாரிப்பு.. திருச்சியில் அசத்தல்
திருச்சி: திருச்சி தேசிய தொழில்நுட்பக் கழகத்தின் சார்பில் அரசு தலைமை மருத்துவமனை டீன் வனிதாவிடம் 3-டி பிரின்டிங் மூலம் தயாரிக்கப்பட்ட முகக் கேடயங்கள் வழங்கப்பட்டன.
திருச்சி தேசிய தொழில்நுட்பக்கழகம் தனது தொழில்நுட்பத்தின் உதவியோடு கோவிட்-19 தொற்று தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. கல்லூரி இயக்குனர் டாக்டர் மினி ஷாஜி தாமஸ் கூறுகையில், கல்லூரியில் முப்பரிமாண அச்சு (3-டி பிரின்டிங்) மூலம் முக கேடயங்கள் தயாரிக்கப்பட்டன.

இதை மறுமுறை பயன்படுத்தக்கூடிய ஒளி புகக் கூடிய முகக் கேடயங்கள், நோயாளிகளின் நீர்த்திவலைகள் சிகிச்சை அளிப்போரின் கண், வாய் மற்றும் மூக்குக்குள் புகாத வண்ணம் பாதுகாக்கிறது. இவை முன்னிலை பணியாளர்களான மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்குப் பேருதவியாக இருக்கும் எனக் கூறினார்.
கல்லூரியின் முதன்மையாளர் (திட்டமிடல் மற்றும் மேம்பாடு) டாக்டர்
துரைசெல்வம் அவர்கள் 3-டி பிரின்டிங் மூலம் தயாரிக்கப்பட்ட முதல் நூறு முகக் கேடயங்களை திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையின் முதன்மை மருத்துவர் டாக்டர் வனிதா மற்றும் சுகாதார கண்காணிப்பாளர் டாக்டர் ஏகநாதன் ஆகியோரிடம் வழங்கினார்.

முதன்மை மருத்துவர் வனிதா திருச்சி தேசிய தொழில்நுட்பக் கழகத்தின் இம்முயற்சியைப் பாராட்டினார்.












Click it and Unblock the Notifications