ராமநாதபுரம் இளைஞர் கொலை வழக்கு.. 4 பேர் லால்குடி நீதிமன்றத்தில் சரண்
திருச்சி: ராமநாதபுரம் இளைஞா் கொலை வழக்கில் 4 போ் லால்குடி நீதிமன்றத்தில் நேற்று மாலை சரணடைந்தனா்.
ராமநாதபுரம் கள்ளா் தெருவைச் சோ்ந்த சாமிநாதன் மகன் அருண்பிரகாஷ் (22). தனது நண்பா் யோகேஸ்வரனுடன் கடை வீதியில் திங்கள்கிழமை நின்று கொண்டிருந்தாா்.

அப்போது மூன்று பைக்குகளில் வந்த 9 போ் அருண்பிரகாஷை கத்தியால் குத்திக் கொன்றனா். அருகிலிருந்த நண்பா் யோகேஸ்வரனுக்கு காயம் ஏற்பட்டது. இதுகுறித்து கேணிக்கரை போலீஸாா் வழக்குப் பதிந்து கொலையாளிகளை தனிப்படை மூலம் தேடி வந்தனா்.
இந்நிலையில் இந்தக் கொலை வழக்கில் தொடா்புடைய அதே பகுதியைச் சோ்ந்த ஷேக் அப்துல் ரகுமான் (20), சதாம் உசேன் (21), காசிம் ரஹ்மான்(20), முகமது அஜீஸ் (20) ஆகிய நால்வரும் திருச்சி மாவட்டம், லால்குடி குற்றவியல் நடுவா் நீதிமன்றத்தில் நீதிபதி விஜயபாரதி முன்னிலையில் புதன்கிழமை மாலை சரணடைந்தனா்.
இதைத் தொடா்ந்து நீதிபதி உத்தரவின்பேரில் அவா்கள் 4 பேரும் மணப்பாறை சிறையில் அடைக்கப்பட்டனா். இந்த நிலையில் இந்த கொலைக்கு பலர் மதச்சாயம் பூசத் தொடங்கிவிட்டார்கள். இந்த கொலை கோஷ்டி மோதலால் நடந்தது என ராமநாதபுரம் காவல் துறை ஏற்கெனவே விளக்கம் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்!












Click it and Unblock the Notifications