16 வயது மாணவருக்கு இரவு நேரங்களில் ஆபாச சேட்டிங் செய்த 40+ கணக்கு டீச்சர்.. துருவி துருவி விசாரணை
திருச்சி: திருச்சியில் 40 வயது ஆசிரியை ஒருவர் 10 ஆம் வகுப்பு மாணவருடன் இரவு நேரங்களில் ஆபாச சேட்டிங்கில் ஈடுபட்டதை அடுத்த போக்சோ சட்டத்தில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஆசிரியையிடம் துருவி துருவி விசாரணை நடத்தப்படுகிறது.
திருச்சி மாவட்டத்தை சேர்ந்த உப்பிலியபுரத்தை அடுத்த வலையப்பட்டியை சேர்ந்தவர் தேவி. இவருக்கு வயது 40. துறையூர் பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் கணித ஆசிரியையாக பணியாற்றி வருகிறார்.

இவர் உப்பிலியபுரத்தை சேர்ந்திருந்தாலும் பணி சூழல் காரணமாக துறையூர் பகுதியில் வசித்து வருகிறார். இந்த நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக தேவியும் அவரது கணவரும் கடந்த சில மாதங்களாக பிரிந்தே வாழ்ந்து வருவதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் தேவி சில மாணவர்களுக்கு டியூசன் எடுத்து வருகிறார். அவரிடம் டியூசன் படித்த 10 ஆம் வகுப்பு மாணவரின் நடவடிக்கைகளில் பெற்றோருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து அந்த மாணவரின் செயல்பாடுகளை பெற்றோர் கவனிக்கவும் கண்காணிக்கவும் தொடங்கினர். அப்போது இரவு நேரங்களில் அந்த மாணவர், ஆசிரியை தேவியுடன் அதிக நேரம் பேசி வருவதும் படிப்பில் கவனமில்லாததும் தெரியவந்தது.
இதனிடையே கடந்த மாதம 27ஆம் தேதி அன்று அந்த 16 வயது சிறுவனுக்கு ஆசிரியை பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து சிறுவன் தனது பெற்றோரிடம் கூறினார். இதையடுத்து சிறுவனுடைய பெற்றோர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஆசிரியை மீது புகார் அளித்தனர். அதன் பேரில் முசிறி மகளிர் போலீஸார் ஆசிரியை தேவியை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.
ஆசிரியை திருச்சி மகளிர் சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் பாலியல் தொல்லைக்குள்ளான மாணவர் குழந்தைகள் நல காப்பகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டார். இந்த நிலையில் 10 ஆம் வகுப்பு மாணவரை தவிர வேறு யாருடனாவது ஆசிரியை தேவி பாலியல் தொல்லையில் ஈடுபட்டாரா என்பது குறித்து விசாரணை நடத்தப்படுகிறது.
மேலும் அந்த மாணவன்தான் தன்னிடம் பாலியல் ரீதியாக அணுகினான் என தேவி வாக்குமூலம் கொடுத்துள்ளார். எனினும் தேவியிடம் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. அவரிடம் டியூசன் படித்து கொண்டிருந்த மாணவர்களிடமும் பள்ளியில் படிக்கும் மாணவர்களிடமும் விசாரணை நடத்தப்படுகிறது.
-
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
குளிர்பானத்தில் மயக்க மருந்து.. ஏர்வாடி விடுதியில் கொடூரம்! கூட்டு பலாத்காரம்.. தவெக நிர்வாகி கைது -
சிறுமிகளுக்கு மது சப்ளை.. சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வந்த கோயம்பேடு பார்.. 'திடுக்' தகவல்! -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்! -
திருச்சிக்கு இன்று வருகிறார் முதல்வர் விஜய்.. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க தவெக பிரமாண்ட ஏற்பாடு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய்












Click it and Unblock the Notifications