உக்ரைன்ல என் மகனை காப்பாத்துங்க சாமி.. காலில் விழுந்து கதறிய தாய்.. மலைத்து நின்ற மாவட்ட ஆட்சியர்..!

Subscribe to Oneindia Tamil

திருச்சி : உக்ரைனில் போர் உச்சகட்டம் அடைந்துள்ள நிலையில் அங்குள்ள இந்திய மாணவர்கள் மீட்கப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் உக்ரைனில் உணவின்றி சிக்கித் தவிக்கும் தனது மகனை மீட்டுத் தரக்கோரி தாய் ஒருவர் திருச்சி மாவட்ட ஆட்சியரின் காலில் விழுந்து கதறிய சம்பவம் நிகழ்ந்துள்ளது.

Recommended Video

    உக்ரைன்ல என் மகனை காப்பாத்துங்க சாமி.. காலில் விழுந்து கதறிய தாய்.. மலைத்து நின்ற மாவட்ட ஆட்சியர்..!

    உக்ரைன் மீதான 4ஆம் நாள் போரை ரஷ்யா தொடங்கியுள்ள நிலையில், உக்ரைன் தலைநகர் கீவ் மீது குண்டுகள் வீசி தாக்குதல் நடத்தி வருகின்றனர் ரஷ்ய ராணுவத்தினர்.

    குறிப்பாக கீவ் நகரத்தை குறிவைத்து ரஷ்ய படைகள் தீவிர தாக்குதல் நடத்தி குண்டு மழை பொழிந்து வருகிறது. ரஷ்யாவுக்கு எதிரான போரில் நாங்கள் தனித்து விடப்பட்டுள்ளோம் எனவும், ஆனாலும் போராடுவோம் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி உருக்கமாக தெரிவித்தார்.

    மீட்க நடவடிக்கை

    மீட்க நடவடிக்கை

    தலைநகரிலிருந்து வெறும் 3 கிலோ மீட்டர் தூரத்திற்குள் வந்துள்ள ரஷ்ய ராணுவம் தொடர்ந்து தலைநகர் நோக்கி முன்னேறி வரும் நிலையில், உக்ரைனில் சிக்கியுள்ள இந்தியர்கள் ருமேனியாவின் எல்லைப் பகுதிகளுக்கு அழைத்து வரப்பட்டு எல்லைகளில் உள்ள இந்திய அதிகாரிகள் அவர்களை அழைத்துக்கொண்டு நாடு திரும்ப திட்டம் முன்வைக்கப்பட்டுள்ளது. இதற்காக இரண்டாம் கட்டமாக இரண்டு ஏர் இந்தியா விமானங்கள் தயராக உள்ளது.

    வலுக்கும் கோரிக்கை

    வலுக்கும் கோரிக்கை

    உக்ரைனில் உள்ள இந்தியர்களை வெளியேற்ற உதவ எல்லைகளுக்கு செல்வதாக வெளியுறவுத்துறை தகவல் தெரிவித்துள்ளது. உக்ரைனில் தவிக்கும் மக்களை மீட்க நடவடிக்கைகள் மேற்கொண்டு வருவதாகவும், இதற்கான செலவுகளை தமிழக அரசே ஏற்கும் முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார். இந்நிலையில் தமிழகத்தைச் சேர்ந்த மாணவர்கள் உள்ளிட்ட பலர் அங்கு சிக்கியுள்ளதாகவும், அவர்களை மீட்க வேண்டுமென்ற கோரிக்கை வலுத்து வருகிறது.

    உக்ரைனில் மகன்

    உக்ரைனில் மகன்

    இந்நிலையில் உக்ரைனில் சிக்கியுள்ள மகனை மீட்டுத் தரக் கோரி திருச்சி மாவட்ட ஆட்சியர் காலில் விழுந்து கதறி அழுத தாய் குறித்த வீடியோ சமூக ஊடங்களில் வேகமாக பரவி வருகிறது. திருச்சி மணப்பாறை சொந்த ஊராகக் கொண்டவர் ஜெயலட்சுமி. இவர் திருச்சி பெரிய மிளகுபாறை பகுதியில் தள்ளுவண்டியில் வியாபாரம் செய்து குடும்பத்தை நடத்தி வருகிறார். இவரது மகன் ராஜேஷ். இந்தியாவில் மருத்துவ கல்லூரிகளில் அதிக அளவில் டொனேஷன் கேட்பதால் குறைந்த செலவில் படிப்பதற்காக உக்ரைனுக்கு அனுப்பி உள்ளார். ராஜேஷ் உக்ரைன் தலைநகர் கீவ்சிவராசு பகுதியில் உள்ள ஒரு மருத்துவ கல்லூரியில் ஆறாம் ஆண்டு படித்து வருகிறார்.

    கண்ணீருடன் கதறி அழுத தாய்

    கண்ணீருடன் கதறி அழுத தாய்

    இன்னும் ஒரு மாதத்தில் தேர்வுகள் முடிந்து வர உள்ள நிலையில் உக்ரைனில் ராஜேஷ் உள்ள பகுதியில் போர் உக்கிரமாக உள்ளதாக உள்ளதால் சுமார் 500 மாணவர்களுடன் பாதாள அறையில் தங்கியுள்ளார். இது குறித்து தனது தாயுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். மேலும் உணவுக்கு கஷ்டப்படுவதாகவும் தெரிவித்துள்ளார் இதைத்தொடர்ந்து தன்னை விரைவில் இந்தியாவுக்கு அழைத்துவர ஏற்பாடு செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளார். இதனைக் கேட்ட பதட்டமடைந்த தாயார் ஜெயலக்ஷ்மி இன்று காலை திருச்சி பெரிய மிளகுபாறை பகுதியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடைபெற்ற போலியோ சொட்டு மருந்து நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்த மாவட்ட ஆட்சியர் சிவராசு காலில் விழுந்து கண்ணீர் விட்டு தனது மகனை எப்படியாவது மீட்டு தரவேண்டும் என கதறினார்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+