புலிக் கொடி ஏற்றி.. மரக்கன்று நட்டு.. ஸ்ரீரங்கத்தில் ஒரு புரட்சித் திருமணம்
திருச்சி: திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் சட்டசபைத் தொகுதிக்குட்பட்ட யாகப்புடையான்பட்டி கிராமத்தில் நாம் தமிழர் கட்சியின் தொண்டர் ஒருவர் வித்தியாசமான முறையில் திருமணம் செய்துள்ளார்.

திருச்சி மாவட்டம், திருவரங்கம் தொகுதி, யாகப்புடையான்பட்டியைச் சேர்ந்தவர் சிரஞ்சீவி. இவருக்கும் ஜெய்சியாவுக்கும் இன்று திருமணம் நடந்தது. இந்தத் திருமணம் வித்தியாசமான முறையில் நடந்தது.
திருச்சி மாவட்டம், திருவரங்கம் தொகுதி, யாகப்புடையான்பட்டியில் இல்லற வாழ்க்கையைத் தொடங்கிய சிரஞ்சீவி - ஜெய்சியா ஆகியோர் தங்கள் பகுதியில் நாம் தமிழர் கட்சியின் உறுதிமொழியேற்று, புலிக்கொடியினை ஏற்றி, மரக்கன்றுகள் நட்டு மண்ணுக்கும் மக்களுக்குமான அரசியலை புரட்சிகரமாக முன்னெடுத்தனர். pic.twitter.com/MX2hUSghGA
— நாம் தமிழர் கட்சி (@NaamTamilarOrg) October 22, 2018
நாம் தமிழர் கட்சியின் உறுதிமொழியேற்று, புலிக்கொடியினை ஏற்றி, மரக்கன்றுகள் நட்டு புரட்சிகரமாக இவர்கள் முன்னெடுத்து தங்களது திருமண வாழ்க்கையைத் தொடங்கினர்.












Click it and Unblock the Notifications