''எங்கண்ணே செய்வாரு''! அமைச்சர் கே.என்.நேருவிடம் கையெடுத்து கும்பிட்டு கெஞ்சிய நடிகர் பிரபு!
திருச்சி: திருச்சியில் கடந்த 10 ஆண்டுகளக மூடி வைக்கப்பட்டுள்ள சிவாஜிகணேசன் சிலையை மீண்டும் திறப்பதற்கு அமைச்சர் நேரு நடவடிக்கை எடுப்பார் என நடிகர் பிரபு தெரிவித்துள்ளார்.
எங்கள் பெருமை எங்கள் முதல்வர் என்ற தலைப்பில் ஒருங்கிணைந்த திருச்சி மாவட்ட திமுக சார்பில் நடத்தப்படும் புகைப்படக் கண்காட்சியை நடிகர் பிரபு இன்று காலை துவக்கி வைத்தார்.

அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர், ஸ்டாலின் கடந்து வந்த பாதைகள் பற்றி சிலாகித்து பேசினார். பிரஸ்மீட் முடிந்து புறப்படவிருந்த பிரபுவை நோக்கி சிவாஜி கணேசன் சிலை மூடியே வைக்கப்பட்டிருப்பது பற்றி செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
ஒரு நொடி யோசித்த அவர், ''நீங்க கேட்ட நேரம் கரெக்டான நேரம், இதோ அண்ணன் தான் இருக்காரே,'' எனக் கூறிக்கொண்டே அமைச்சர் கே.என்.நேருவை நோக்கி கையெடுத்து கும்பிட்டு குணிந்து தனது தந்தையின் சிலை குறித்த கோரிக்கையை பணிவாக தெரிவித்தார்.
''சில பிரச்சனைகள் காரணமாக திருச்சி பாலக்கரை ரவுண்டானாவில் உள்ள சிவாஜி சிலை மூடியிருப்பதாகவும், கண்டிப்பாக எங்கண்ணே நேருவும், எங்கண்ணே முதல்வரும் அதை திறக்க நடவடிக்கை எடுப்பார்கள் என நம்புகிறேன்'' என்றார் நடிகர் பிரபு.

பிரவு இவ்வாறு ஒரு பக்கம் கோரிக்கை வைத்துக் கொண்டிருந்த நிலையில், அதற்கு நேரு என்ன சொல்லப் போகிறார் என அங்கிருந்த செய்தியாளர்கள் ஆவலோடு எதிர்பார்த்த நிலையில் அவர் தனது கைக்குட்டையையும், செல்போனையும் எங்கே வைத்தேன் என தேடிக்கொண்டிருந்தார்.
கருணாநிதி மீது திமுகவினர் எந்தளவு ப்ரியம் வைத்திருக்கிறார்களோ, அதே போல் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் மீதும் அதேயளவு பிரியமும் மரியாதையும் வைத்திருக்கிறார்கள் என்றார் பிரபு.
திருச்சியில் 10 ஆண்டுகளாக மூடியே உள்ள சிவாஜிகணேசன் சிலையை மீண்டும் நிறுவ திமுக அரசு நடவடிக்கை எடுக்கும் என தாம் நம்புவதாக நடிகர் பிரபு கூறினார்.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications