பாஜக கூட்டணியில் விஜய்..? பியூஷ் கோயல் கொடுத்த சிக்னல்.. விஷயம் டாப் சீக்ரெட்
திருச்சி: தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளது. ஆட்சியை தக்க வைப்பதற்கு திமுக கூட்டணியும், ஆட்சியை பிடிப்பதற்கு அதிமுக - பாஜக கூட்டணியும் தீவிரம் காட்டி வருகிறார்கள். நாம் தமிழர், தவெக கட்சிகளும் களத்தில் வேகம் காட்டி வருகிறார்கள். அதிமுக பாஜக கூட்டணி தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் இழுபறி நீடித்து வருகிறது. இந்நிலையில் தவெக விஜய்யை தேசிய ஜனநாயக கூட்டணியில் இழுப்பதற்கு முயற்சித்து வருகிறார்கள். இதுகுறித்து கேள்விக்கு பியூஷ் கோயல் அளித்துள்ள ரியாக்ஷன் கவனம் ஈர்த்துள்ளது.
பாஜக மேலிட பொறுப்பாளர் பியூஷ் கோயல், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி திருச்சியில் சந்தித்தனர். திருச்சியில் இன்று தேசிய ஜனநாயக கூட்டணியின் பொதுக்கூட்டம் நடைபெறவுள்ளது. இதில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்ளவுள்ளார். இந்நிலையில் இந்த சந்திப்பு அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக கூறப்படுகிறது.

அதிமுக பாஜக தேசிய ஜனநாயக கூட்டணி
திருச்சியில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், "திமுக மீது மக்கள் அதிருப்தியில் இருக்கிறார்கள். திமுக குடும்பம் ஊழல் ஆட்சி நடத்தி கொண்டிருக்கிறது. தமிழ்நாடு மக்கள் ஒருபோதும் உதயநிதியை முதலமைச்சராக ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். திமுக ஆட்சியில் 50,000 கோடிக்கு ஊழல் நடந்துள்ளது.
சட்டம் ஒழுங்கு கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. திமுக ஆட்சியை தூக்கி எறிய வேண்டிய காலம் இது. ஸ்டாலின் உதயநிதியை பதவியில் இருந்து அகற்றி, அதிமுக எடப்பாடி பழனிசாமி தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்கும். எடப்பாடி பழனிசாமி முதலமைச்சரானவுடன் எல்லா பிரச்சனைகளும் சரியாகிவிடும்.
திமுக மீது விமர்சனம்
சட்டம் ஒழுங்கு சீராகிவிடும். பெண்களுக்கு பாதுகாப்பு வழங்கப்படும். இளைஞர்களுக்கு அதிகளவு வாய்ப்புகள் கொடுக்கப்படும். அம்மாவின் வழங்கிய நல்லாட்சியை எங்கள் ஆட்சி வழங்கும். தொகுதி பங்கீடு தொடர்பாக ஆலோசனை நடத்தி வருகிறோம். தொகுதி பங்கீட்டில் எந்த பிரச்சனையும் இல்லை. எங்கள் கூட்டணி பலமாக பாதுகாப்பாக உள்ளது.
திமுக தான் கூட்டணியை பற்றி பயப்பட வேண்டும். திமுகவை காங்கிரஸ் பிளாக்மெயில் செய்தது போல எங்கள் கூட்டணியில் யாரும் பிளாக் மெயில் செய்வதில்லை. எங்கள் கூட்டணி குடும்பம் போன்றது. விரைவில் தொகுதி பங்கீடு இறுதி செய்யப்படும். இந்த தேர்தல் திமுகவுக்கு எதிரான போர்" என்றார்.
விஜய் குறித்த கேள்வி
"விஜய் தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைகிறாரா" என்கிற கேள்விக்கு பியூஷ் கோயல் மறுப்பு தெரிவிக்காமல் சென்றார். முன்னதாக மத்திய இணை அமைச்சர் எல். முருகன், விஜய் உள்ளிட்ட அனைவரும் கூட்டணியில் இணைவார்கள் என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. இதனால் விஜய்யுடன் பாஜக பேச்சுவார்த்தை நடத்துவது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது.
-
ரசிகர்களை ஏமாற்றிய முதல்வர் விஜய்.. இப்படி செய்வார்னு எதிர்பார்க்கலை.. கர்நாடகா கோவிலுக்கு சென்றபோது சம்பவம் -
இடியாப்ப சிக்கலில் மாட்டிக்கொண்ட விஜய்.. ஆளே இல்லாத கடையில் டீ ஆற்றுகிறது அரசு - திமுக கேள்வி -
விஜய் அதிரடி உத்தரவு! டெல்லி பயணம் முடித்த பின்பு முக்கியமான சேஞ்ச்! -
அம்மா கொடுத்த அனுமதி.. ரஜினியை போல் விஜய்யும் எனக்கு நெருக்கம்.. ராகவா லாரன்ஸ் சொன்ன வார்த்தை! -
18 மணிநேரம் தடையில்லா மின்சாரம்.. விவசாயிகளுக்கு சூப்பர் திட்டத்தை அறிவித்த முதலமைச்சர் விஜய்! -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
பெரிய பிரச்சனை.. முதல்வர் அலுவலகத்துக்கே வரும் ’ஜான்’.! விஜய் டேபிளுக்கே போகாத உளவுத்துறை தகவல்! -
"முதுகு குத்து வரலாறுல அஜித் குமாருக்கு டஃப் கொடுப்போம் போலயே" புலம்பும் திமுகவினரின் மீம்ஸ்! -
கம்ப்ளைன்ட் கொடுக்க போன என் மீதே கேஸ் போட்டுட்டாங்க.. பிளான் பண்ணி பண்ணுறாங்க! ஜூலி ஆதங்கம் -
திருச்சி, கோவை, சென்னை.. அடியோடு மாறப்போகுது.. விஜய்யின் 5 மாஸ்டர்பிளான்.. டெல்லியில் பேசியது என்ன? -
தவெகவின் வியூகம்.. புஸ்ஸி ஆனந்துடன் பேச்சுவார்த்தை நிறைவு.. அடுத்த வாரத்தில் இணையும் விஜயபாஸ்கர்? -
சிங்கப்பெண் அதிரடிப்படைக்கு அப்போ பவரே இல்லையா.. வழக்கு போட முடியாது! விசாரிக்கவும் முடியாதாம்!












Click it and Unblock the Notifications