குப்பை அள்ளும் வண்டியில் அம்மா உணவகத்திற்கு வந்த உணவுப் பொருட்கள்.. பொதுமக்கள் ஷாக்! அதிமுக ஆவேசம்!
திருச்சி : துறையூரில் செயல்பட்டு வரும் அம்மா உணவகத்திற்கு நகராட்சி குப்பை வண்டியில் அரிசி மூட்டைகள் கொண்டு வரப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பான வீடியோவை பகிர்ந்து அதிமுக கண்டனம் தெரிவித்துள்ளது.
திருச்சி மாவட்டம் துறையூர் பேருந்து நிலையத்தில் அம்மா உணவகம் செயல்பட்டு வருகிறது. இந்த உணவகம் துறையூர் நகராட்சியின் கட்டுப்பாட்டில் இயங்கி வருகிறது. துறையூர் பகுதியைச் சேர்ந்த ஏழைகள் மற்றும் வெளியூர்களைச் சேர்ந்தவர்கள் மூன்று வேளையும் பசியாறுவதற்காக அதிமுக ஆட்சியில் இந்த உணவகம் திறக்கப்பட்டது.

தினந்தோறும் 600க்கும் மேற்பட்டோர் இந்த அம்மா உணவகத்தில் பசியாறி வருகின்றனர். 12 பணியாளர்கள் சமையல் உள்ளிட்ட இதர பணிகளைச் செய்து வருகின்றனர். உணவு சமைப்பதற்காக துறையூர் நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் இருந்து அரிசி உள்ளிட்ட உணவுப் பொருட்கள் கொண்டுவரப்பட்டு இங்கு சமைத்து பொதுமக்களுக்கு மலிவு விலையில் வழங்கப்படுகிறது.
இந்நிலையில், கடந்த ஒரு வார காலமாக துறையூர் அம்மா உணவகத்தில் அரிசி தட்டுப்பாடு ஏற்பட்டதாகவும், வெளியில் இருந்து அரிசி வாங்கி சமைத்ததாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், அரிசி மூட்டைகளை துறையூர் நகராட்சிக்கு சொந்தமான குப்பை அள்ளும் வாகனத்தில் கொண்டு வந்து அம்மா உணவகத்தில் இறக்கியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நகராட்சி குப்பை அள்ளுவதற்கான வண்டியில் அரிசி மூட்டைகள் வந்து அம்மா உணவகத்தில் இறங்கியுள்ளன. அதனை கண்ட பேருந்துக்காக வெளியூர் செல்ல காத்திருந்த பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். ஏழை, எளிய மக்கள் பசியாறும் உணவு தயாரிக்கப்படும் அரிசியை நகராட்சி நிர்வாகம் பொதுமக்களிடம் குப்பை வாங்க பயன்படுத்தும் வாகனத்தில் கொண்டு வந்து இறக்கியது பலரையும் முகம் சுளிக்கச் செய்தது.
அதிமுக ஆட்சியில் அம்மா உணவகத்தால் ஏராளமானோர் பயன் பெற்று வந்த நிலையில் தற்போது அம்மா உணவகத்தில் சுகாதாரமற்ற முறையில் உணவு தயாரிக்க அரிசி மூட்டைகள் குப்பை வண்டியில் வந்து இறக்கும் வீடியோ சமுக வலைதளங்களில் தீயாகப் பரவி, பொதுமக்களின் கண்டனங்களைச் சந்தித்துள்ளது.
இது குறித்து விளக்கம் அளித்துள்ள துறையூர் நகராட்சி நிர்வாகம், வழக்கமாக அரிசி மூட்டைகள் ஏற்றி வரும் வாகனம் பழுதடைந்ததால் நகராட்சியில் நிறுத்த வைக்கப்பட்டிருந்த வாகனத்தில் அரிசி முட்டைகள் அனுப்பப்பட்டன. அந்த வாகனம் அவசர தேவைக்கு மட்டுமே பயன்படுத்தப்படும். குப்பை சேகரிக்க பயன்படுத்துவதில்லை. எனினும் இது பற்றி விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்துள்ளது.
துறையூர் நகராட்சியின் இத்தகைய நடவடிக்கைக்கு அதிமுக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது குறித்து அதிமுக மதுரை மண்டல ஐடி விங் செயலாளர் ராஜ் சத்யன் தனது ட்விட்டர் பக்கத்தில், "அவர்களுக்கு என்னமோ தங்கத் தட்டும், ஜப்பான் பயணமும், அம்மா உணவகம் - ஏழைகளின் பசிக்கு குப்பை வண்டியா? எளியவர்கள் மீதும், ஏழைகளின் மீதும் அக்கறையற்ற இந்த அரசு விரைவில் அகலும்!" என விமர்சித்துள்ளார்.
-
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை












Click it and Unblock the Notifications