திமுக மீது மக்கள் ரொம்ப கோபமாக இருக்கிறார்கள்.. அதிமுகவிற்கு வாக்குகளை அள்ளி தெளிப்பார்கள்- தங்கமணி
திருச்சி: 2024ம் ஆண்டு நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் அதிமுக வெற்றிபெறும் என்று முன்னாள் அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.
Recommended Video
அதிமுக சார்பில் தமிழகம் முழுவதும் மின்விலை உயர்வை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக இன்று திருச்சி சிந்தாமணி அண்ணாசிலை பகுதியில் முன்னாள் அமைச்சர் தங்கமணி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் 500க்கும் மேற்பட்ட அதிமுக தொண்டர்கள் கலந்து கொண்டு மின்சார கட்டண உயர்வை கண்டித்து கோஷம் எழுப்பினர்.

தங்கமணி பேட்டி
தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அதிமுக முன்னாள் தங்கமணி கூறுகையில், இலவச வேட்டி சேலை திட்டம் கொண்டு வந்ததன் நோக்கமே கைத்தறி நெசவாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும் என்பதற்காக தான். அதனை நிறுத்த உள்ளதாக தகவல் வருகிறது. அதற்கு பதிலாக பிரிண்டிங் சேலை தரவுள்ளதாக கூறப்படுகிறது. இலவச வேட்டி சேலை திட்டத்தை நிறுத்தக்கூடாது.

ஓபிஎஸ் மீது புகார்
அதிமுக தலைமை அலுவலகத்தில் பணம் காணாமல் போய் இருப்பதால் தான் காணாமல் போய் உள்ளது என்று புகார் தெரிவித்துள்ளோம்.அதிமுக தலைமை அலுவலகம் திறக்கப்பட்ட போது நான் அங்கு இல்லை. ஆனால் முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் அங்கு இருந்தார். அங்கு பணம் காணாமல் போனதால் மட்டுமே அவ்வாறு புகார் அளிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.

திமுக மீது கோபம்
தொடர்ந்து, திமுக ஆட்சி அமைந்ததில் இருந்து சொத்து வரி, மின்சார கட்டண உயர்வு என மக்கள் அடுத்தடுத்து துன்பங்களை சந்தித்து வருகிறார்கள். இதனால் 2024ம் ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் அதிமுக வெற்றிபெறும். மக்கள் அந்த அளவுக்கு திமுக அரசு மீது கோபத்தில் உள்ளார்கள். எப்படி 2014ம் ஆண்டு அதிமுக வெற்றிபெற்றதோ, அதேபோல் மீண்டும் வெற்றிபெறுவோம்.

உதய் திட்டம்
அதிமுக புதிய மின் திட்டங்களை ரூ. 60 ஆயிரம் கோடிக்கு கொண்டு வந்துள்ளது. கடன் சுமையால் இருப்பது என குறிப்பிடுவது தவறு. இது சேவை துறையாகும். உதய் மின் திட்டத்தில் இணைவதற்கு முன், 3 மாதங்களுக்கு ஒருமுறை மின்சார கட்டணத்தை மாற்றியமைக்க கூடாது என்றும், விவசாயிகளுக்கு வழங்கப்படும் இலவச மின்சார திட்டங்களுக்கு பாதிப்பு ஏற்படக் கூடாது என்பதற்காக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அதன்பின்னர் மத்திய அரசின் மின்சார திட்டத்தில் தமிழ்நாடு இணைந்தது என்று விளக்கமளித்தார்.












Click it and Unblock the Notifications