சசிகலாவை வரவேற்று போஸ்டர் ஒட்டும் அதிமுக நிர்வாகிகள் - கட்சியை விட்டு நீக்கும் ஓபிஎஸ், இபிஎஸ்

Subscribe to Oneindia Tamil

திருச்சி: டாக்டர் இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்களோடு தவ வாழ்க்கை வாழ்ந்த அஇஅதிமுக பொதுச் செயலாளர், தியாகத் தலைவி சின்னம்மா அவர்களே வருக வருக என்று போஸ்டர் ஒட்டிய திருச்சி அதிமுக நிர்வாகி கட்சியை விட்டு நீக்கப்பட்டுள்ளார். சசிகலாவின் வருகையை அவரது ஆதரவாளவர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கின்றனர். பல மாவட்டங்களில் போஸ்டர்களை ஒட்டி வருகின்றனர்.

சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற சசிகலா கடந்த 27ஆம் தேதி விடுதலையானார். சசிகலாவின் உடல்நிலை தற்போது சீராக இருப்பதாக விக்டோரியா மருத்துவமனை அறிக்கை வெளியிட்டிருக்கிறது. இதையடுத்து சசிகலா விரைவில் டிஸ்சார்ஜ் ஆகி தமிழகம் திரும்பப் போகிறார்.

AIADMK workers welcome poster for Sasikala - OPS and EPS expels workers

சிறையில் இருந்து விடுதலையான சசிகலாவை வரவேற்றும் விதமாக, திருச்சி வடக்கு மாவட்ட ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அந்தநல்லூர் ஒன்றிய முன்னாள் மாவட்ட கவுன்சிலர் புலியூர் இரா அண்ணாதுரை ஸ்ரீரங்கம் உள்ளிட்ட இடங்களில் போஸ்டர்களை ஒட்டினார்.

அந்த போஸ்டரில், 33 ஆண்டுகள் டாக்டர் இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்களோடு தவ வாழ்க்கை வாழ்ந்த அஇஅதிமுக பொதுச் செயலாளர், தியாகத் தலைவி சின்னம்மா அவர்களே வருக வருக என்பன போன்ற வாசகங்கள் இடம் பெற்றுள்ளன. கட்சிக்கட்டுப்பாட்டை மீறி போஸ்டர் ஒட்டியதாக ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதியில் உள்ள அந்தநல்லூர் தெற்கு ஒன்றிய முன்னாள் மாவட்ட கவுன்சிலர் அண்ணாதுரையை கட்சியில் இருந்து அதிமுக நீக்கியுள்ளது.

இது தொடர்பாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர் செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர்கள் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில்,'கழகத்தின் கொள்கை - குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும் கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் நடந்து கொண்டதாலும் கழகக் கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு களங்கமும் அவப்பெயரும் உண்டாகும் விதித்ததில் செயல்பட்ட காரணத்தினாலும் திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த அந்தநல்லூர் ஒன்றிய முன்னாள் மாவட்ட கவுன்சிலர் அண்ணாதுரை இன்று முதல் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார். கழக உடன்பிறப்புடன் யாரும் இவருடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக் கொள்ளக் கூடாது எனக் கேட்டுக் கொள்கிறோம்,' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு திருநெல்வேலி மாவட்ட எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளர் சுப்ரமணிய ராஜா சசிகலா விடுதலையையொட்டி, அதிமுகவை வழிநடத்த வருகை தரும் பொதுச்செயலாளர் அவர்களே வாழ்க.. வாழ்க என்று போஸ்டர் அடித்து ஒட்டியதை அடுத்து உடனடியாக கட்சியை விட்டு நீக்கி உத்தரவிட்டனர்.

சசிகலாவின் வருகையை அவரது ஆதரவாளவர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கின்றனர். பல மாவட்டங்களில் போஸ்டர்களை ஒட்டி வருகின்றனர். திருநெல்வேலி, திருச்சியை அடுத்து விருதுநகரிலும் சசிகலாவை வரவேற்று போட்டர் ஒட்டியுள்ளனர். இன்னும் எத்தனை பேர் போஸ்டர் ஒட்டப்போகிறார்களோ, எத்தனை பேர்களை கட்சியை விட்டு நீக்கப் போகிறார்களோ? பார்க்கலாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+