உலுக்கும் திகில் கொலை.. அஜீத் படம் பார்க்க போவதாக சொல்லி விட்டு.. பதற வைத்த காக்கா கார்த்திக்!

அஜித் ரசிகர் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார்

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    Trichy Crime news

    திருச்சி: அஜித் படம் பார்க்க போவதாக சொல்லிவிட்டு சென்ற ரசிகர், எரித்து கொன்று சாம்பலாக்கியதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

    திருச்சி செங்குளம் பகுதியை சேர்ந்தவர் தமிழழகன். இவர் தீவிர அஜித் ரசிகர். கடந்த 7 ந்தேதி இரவு, நேர்கொண்ட பார்வை படத்துக்கு பேனர் வைக்க நண்பர்களுடன் சேர்ந்து போவதாகவும், விடிகாலை ஸ்பெஷல் ஷோ பார்த்துவிட்டு வருவதாகவும் சொல்லிவிட்டு கிளம்பி சென்றார்.

    ஆனால் வீடு திரும்பவில்லை. போன் பண்ணினாலும் செல்போன் ஸ்விட்ச் ஆப் ஆகி இருந்தது. இந்நிலையில் போனவாரம்தான் அரியமங்கலம் பகுதியில் தமிழழகன் ஓட்டிச்சென்ற பைக் ஒன்று கண்டெடுக்கப்பட்டது. இதையடுத்து, மகனை காணவில்லை என்று சண்முக நாதன் திருச்சி கண்டோன்மெண்ட் போலீசுக்கு புகார் அளித்தார்.

    காக்கா கார்த்திக்

    காக்கா கார்த்திக்

    இதையடுத்து நடந்த விசாரணையில், காக்கா கார்த்திக் என்பவர் கடைசியாக பேசி இருந்தது தெரியவந்தது. அவரை விசாரிக்கலாம் என்றால், ஆள் தலைமறைவாகி இருந்தார். ஒருநாள் காக்கா கார்த்திக், மணிகண்டன், ஆட்டோ டிரைவர் ஜெகன் 3 பேரும் டாஸ்மாக்கில் தண்ணி அடிக்கும்போது, தமிழழகனை எரித்து கொன்றுவிட்டதாக ஒருத்தருக்கொருத்தர் உளறி கொண்டிருந்தனர்.

    எஸ்கேப்

    எஸ்கேப்

    இந்த விஷயத்தை அங்கிருந்தோர் போலீசுக்கு சொல்லவும், விரைந்து வந்த போலீசார், மணிகண்டன், காக்கா கார்த்திக்கை பிடித்துவிட்டனர். ஆட்டோ டிரைவர் எஸ்கேப் ஆகிவிட்டார். இதையடுத்து கைதானவர்களிடம் விசாரணை நடத்தியதில் வெளியான தகவல்கள் இதுதான்:

    வாக்குமூலம்

    வாக்குமூலம்

    பொன்மலையைச் சேர்ந்தவர்தான் காக்கா கார்த்திக். தமிழழகனின் நெருங்கிய நண்பர். கடந்த 1ம் தேதி பிரபாகர் என்பவரை காக்கா கார்த்தி, தமிழழகன், ஜெகன், மணிகண்டன் ஆகியோர் சேர்ந்து கத்தியால் குத்தி கொலை செய்ய முயன்றுள்ளனர். ஆனால் அவர் தப்பித்து விட்டார். இதில் காக்கா கார்த்தி உள்ளிட்ட 3 பேரும் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த விஷயத்தில் தமிழழகன் கைது செய்யப்படவில்லை. பெண் விவகாரம் தொடர்பாக இந்த கொலை நடந்ததாக கூறப்படுகிறது.

    வாக்குவாதம்

    வாக்குவாதம்

    இதனிடையே கைதானவர்கள் ஜாமீனில் வெளிவந்து, மீண்டும் 4 பேரும் ஒன்றாக பழைய மாதிரியே சுற்றி திரிந்துள்ளனர். ஆனாலும் தமிழழகன் மட்டும் கைதாகவில்லை என்பது மற்ற 3 நண்பர்களுக்குமே எரிச்சலை தந்தது. சம்பவத்தன்று, படம் பார்க்க ரிசர்வேஷன் செய்ய முன்பதிவிற்காக 4 பேரும் சென்றனர். அந்த சமயத்தில் பிரபாகரன் தாக்கப்பட்டது தொடர்பாக திரும்பவும் 4 பேரிடம் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது.

    3 பேர் கைது

    3 பேர் கைது

    இதில் ஒரு கட்டத்தில், தமிழழகனை காக்கா கார்த்திக், ஜெகன், மணிகண்டன் சேர்ந்து அடித்துக் கொலை செய்துள்ளனர். சடலத்தை ஒரு ஆட்டோவில் தூக்கி போட்டு, பொன்மலை கணேசபுரம் சுடுகாட்டில் கொண்டு போய் தீவைத்து எரித்து சாம்பலாக்கி உள்ளனர். இந்த வாக்குமூலத்தை கேட்ட போலீசார், 3 பேரையும் கைது செய்து விசாரித்து வருகிறார்கள்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+