ஒரேயொரு போட்டோ தான்! அண்ணாமலையின் பாதயாத்திரைக்கு வந்த சிக்கல்! போலீசில் ‛பேராயர்’ பரபர புகார்
திருச்சி: தமிழக பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலையின் ‛என் மண், என் மக்கள்' என்ற தலைப்பில் பாதயாத்திரையை தொடங்கி உள்ளார். இந்நிலையில் விளம்பரம் தேடும் வகையில் தனது போட்டோவை அனுமதியின்றி பயன்படுத்தியதாக பேராயர் சந்திரசேகரன் சார்பில் போலீசில் புகார் கொடுக்கப்பட்டுள்ளதால் சிக்கல் எழுந்துள்ளது.
அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. தமிழ்நாட்டில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து பாஜக களமிறங்க திட்டமிட்டுள்ளது. இந்த கூட்டணி ஏறக்குறைய உறுதியாகி உள்ளது. இத்தகைய சூழலில் தான் தமிழ்நாட்டில் அதிக இடங்களில் வெற்றி பெறும் முனைப்பில் பாஜக செயல்பட்டு வருகிறது.

மேலும் பாஜகவின் செல்வாக்கை அதிகரிக்கும் வகையிலும், மாநிலத்தில் உள்ள கட்சி நிர்வாகிகளை உற்சாகப்படுத்தும் வகையிலும் மாநில தலைவர் அண்ணாமலை பாதயாத்திரையை தொடங்கி உள்ளார்.
"என் மண், என் மக்கள்'' என்ற தலைப்பில் மாநில பாஜக தலைவர் அண்ணாமலை ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் இருந்து பாதயாத்திரையை தொடங்கி உள்ளார். இந்த பாதயாத்திரையை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தொடங்கி வைத்தார். 6 மாதங்கள் வரை இந்த பாதயாத்திரை தமிழ்நாடு முழுவதும் நடைபெற உள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள 234 சட்டசபை தொகுதிகளிலும் அண்ணாமலை பாதயாத்திரை மேற்கொண்டு ஆதரவு திரட்டுகிறார். இந்நிலையில் இன்று அண்ணாமலையில் பாதயாத்திரை ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் சட்டசபை தொகுதியில் நடந்தது. திரளான நிர்வாகிகள், தொண்டர்கள் இந்த பாதயாத்திரையில் பங்கேற்று வருகின்றனர்.

இத்தகைய சூழலில் தான் அண்ணாமலையில் பாதயாத்திரை தொடர்பாக புதிய சிக்கல் எழுந்துள்ளது. அதாவது பேராயர் ஒருவரின் போட்டோவை எவ்வித அனுமதியும் இன்றி பயன்படுத்திய நிலையில் தற்போது பிரச்சனை உருவாகி உள்ளதோடு, போலீஸ் நிலையம் வரை சென்றுள்ளது. அதன் விபரம் வருமாறு:
தென்னிந்திய திருச்சபையின் திருச்சி-தஞ்சை திருமண்டல பேராயராக இருப்பவர் சந்திரசேகரன். இந்நிலையில் தான் அண்ணாமலையின் ‛என் மண், என் மக்கள்' பாதயாத்திரைக்கு ஆதரவு அளிக்கும்படி அவரிடம் கோரிக்கை வைக்கப்பட்டது. இந்த கோரிக்கையை பேராயர் சந்திரசேகரனை சந்தித்து பாஜகவின் சிறுபான்மை அணியின் துணை தலைவர் ஏ ஆர் பாட்ஷா முன்வைத்தார்.
அப்போது அவர்கள் வழங்கய நோட்டீசில் பேராயர் சந்திரசேகரனின் போட்டோ இடம்பெற்றிருந்தது. இதனை பார்த்த சந்திரசேகரன் நோட்டீசில் இருக்கும் எனது போட்டோவை அகற்றும்படி கூறினார். இதுதொடர்பாக சந்திரசேகரன் கூறுகையில், ‛‛என்னுடைய அலுவலகத்தில் 4 முதல் 5 பேர் வந்து பாஜக சார்பில் நடக்கும் நடைப்பயணத்துக்கு அழைப்பு கொடுக்க வந்துள்ளதாக தெரிவித்தனர். அதுபற்றிய விளம்பரத்தை என்னிடம் கொடுத்தனர். அதில் எனது புகைப்படம் இருந்தது.
இதையடுத்து எனது புகைப்படத்தை ஏன் இடம்பெற செய்தீர்கள்? என கேள்வி எழுப்பினேன். மேலும் என்னுடைய சம்மதம் இல்லாமல் போட்டோவை இடம்பெற செய்வது தவறு. இது சட்டப்படி குற்றம் என்பது தெரியதா? என கேட்டேன். இதையடுத்து தெரியாமல் செய்துவிட்டதாக கூறினார்கள்'' என்றார்.
இதற்கிடையே அண்ணாமலையின் ‛என் மண், என் மக்கள்' பாதயாத்திரை தொடர்பான போஸ்டரில் பேராயர் சந்திரசேகரனின் போட்டோ இடம்பெற்றுள்ளது. இது தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இதையடுத்து மறுப்பு அறிக்கை வெளியிட்ட சந்திரசேகரன், பாஜகவினர் மீது உறையூர் போலீசில் புகார் செய்தார். இந்த புகாரின் பேரில் போலீசார் விசாரணையை தொடங்கி உள்ளனர்.
-
அண்ணாமலைக்கு சீட் கொடுக்க கூடாது.. எடப்பாடி எடுத்த முடிவு.. பாஜக தொகுதி பங்கீட்டில் என்ன நடந்தது? -
கோவை தெற்கு, அரவக்குறிச்சி, நெல்லை எங்கே? தொகுதி மாறும் நயினார் நாகேந்திரன், வானதி, அண்ணாமலை! -
தர்மத்திற்காக கொடுத்தாரா.. தவறாக கொடுத்தாரா.. பாஜகவின் 27 தொகுதிகள்... எடப்பாடி தப்புக்கணக்கு! -
மதுரைக்காரர் பிடிஆர்! இனி மயிலாப்பூர்காரர்! தொகுதி மாறுகிறார் பழனிவேல் தியாகராஜன்! ஸ்டாலின் முடிவு? -
சிலர் சிரிப்பார்! சிலர் அழுவார்! நாங்கள் சிரித்துக் கொண்டே அழுகின்றோம்! திமுகவால் புலம்பும் மதிமுக -
நாகர்கோவில் தொகுதியை.. தூக்கி கொடுத்த எடப்பாடி பழனிசாமி! போராட்டத்தில் குதித்த அதிமுக மகளிர் அணி -
வேட்புமனு தாக்கல் செய்ய.. 4 நாட்கள்தான்! அதிரடியாக அறிவித்த தேர்தல் ஆணையம்! -
செக் வைத்த எடப்பாடி பழனிசாமி! அண்ணாமலை அப்செட்? தமிழக பாஜக வேட்பாளர் தேர்வு கூட்டத்தில் மிஸ்ஸிங்! -
18 தொகுதிகளில் பாஜக வெல்வது கடினம்? திமுகவிடம் கோர்த்துவிட்ட எடப்பாடி பழனிச்சாமி! தாமரைக்கு ‘செக்’ -
ஈரோட்டில் வெளுத்த வெயில்.. 100 டிகிரியை தாண்டியது! வேலூருக்கு இரண்டாவது இடம் -
எடப்பாடி ஷாக்.. பாஜகவின் பிக் பிரதர் பிளான்.. தாமரைச் சின்னத்தில் அடைக்கலம் தேடும் கூட்டணி கட்சிகள் -
மழையெல்லாம் ஓவர்.. இனி வறண்ட வானிலைதான்! உஷாரா இருங்க மக்களே! வெதர் அப்டேட்!












Click it and Unblock the Notifications