க்ளைமேட்டே மாறுதே.. "அவங்களுடன் + அந்த நேரத்தில் கூட்டணி".. சீமான் என்ன சொல்கிறார்.. சாத்தியமா?
திருச்சி: நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், தனித்து அரசியல் என்பதையும் தாண்டி, கூட்டணி என்ற விஷயத்தை பேச துவங்கியிருப்பது, மிகுந்த வியப்பையும், ஆச்சரியத்தையும், எதிர்பார்ப்பையும், அவரது தொண்டர்களிடம் ஏற்படுத்தி கொண்டிருக்கிறது.
திருச்சியில் நேற்றைய தினம் செய்தியாளர்களிடம் சீமான் பேசினார்.. அப்போது, ஆன்லைன் ரம்மி, ராகுல்காந்தி விவகாரம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து பேசினார்.
அப்போது, தமிழக அரசியல் நிலவரங்கள் குறித்தும் செய்தியாளர்கள் சீமானிடம் கேள்வி எழுப்பினர்.. அதிமுக பிரச்சனை குறித்து கேட்டதற்கு, அக்கட்சியின் எதிர்காலம் குறித்து என்னால் கருத்து சொல்ல முடியாது என்றும் தன் கட்சியின் எதிர்காலம் குறித்து தான் சிந்திப்பேன் என்றும் கூறிவிட்டார்.

மாற்று அணி
பிறகு, "மாற்று அணி" என்ற விஷயத்தை முன்வைத்தார்.. சீமான் பேசும்போது, " நாங்கள் தேர்தல்களில் எப்போதுமே தனித்துதான் போட்டியிடுவோம். இதுவரை நடந்த தேர்தலில் நாங்கள் தோற்கவில்லை.. ஆனால், மக்கள்தான் தொடர்ந்து தோல்வி அடைந்து கொண்டு இருக்கிறார்கள்.. வரும் 2024 தேர்தலில் பாஜகவை வீழ்த்த நாடு முழுவதும் உள்ள மாநில கட்சிகள் ஒன்றிணைந்து மாற்று அணியை உருவாக்க வேண்டும்... கடந்த பாராளுமன்ற தேர்தலில் இப்படி ஒரு அணியை உருவாக்கினார்கள். ஆனால் தேர்தலுக்கு முன்பே ராகுல் காந்தியை "பிரதமர் வேட்பாளர்" என்று ஸ்டாலின் அறிவித்ததால் அந்தக் கூட்டணி சிதறுண்டு போனது..

தனித்து போட்டி
மறுபடியும், வரும் தேர்தலில் அதுபோல் ஒரு மாற்று அணியை உருவாக்க முயற்சி செய்ய வேண்டும்... எப்போதுமே நாங்கள் தனித்து தான் போட்டியிடுவோம்... நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலுமே தனித்து போட்டிதான். தற்போதைக்கு என் தலைமையிலான கூட்டணிக்கு யாரும் வரமாட்டார்கள். பாஜகவை வர விடாமல் தடுக்க மாநில கட்சிகள் இணைந்து மாற்று அணியை உருவாக்க வேண்டும்.. ஒருவேளை "மாற்று அணி" என்று ஒரு சூழல் வந்தால், அந்த நேரத்தில் கூட்டணியில் சேரலாமா? என்பது குறித்து சிந்திப்போம்" என்றார் சீமான்.

RSS கைக்கூலி
சீமானை பொறுத்தவரை, வெற்றி தோல்வி பற்றியெல்லாம் கவலைப்படாமல், எந்த ஒரு தேர்தலையும் புறக்கணிக்கவும் செய்யாமல், அதேசமயம் யாருடனும் கூட்டணிக்கும் இணங்காமல், தொடர்ந்து தனித்தே களவாடி வருவது பலராலும் கவனிக்கப்பட்டு வருகிறது.. தமிழ் தேசியத்தை முன்வைத்துக்கொண்டே, திராவிட அரசியல் மீதான கடுமையான விமர்சனத்தையும் அழுத்தமாக பதிய செய்து, இரு துருவங்களில் அவரது அரசியலை கொண்டு செல்வது பலரால் உற்றுநோக்கப்பட்டு வருகிறது.. ஆனால், பாஜகவின் "பி டீம்", ஆர்எஸ்எஸ்ஸின் கைக்கூலி - போன்ற எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களை இதுவரை சீமானால் தடுக்க முடியவில்லை..

தனி ஒருவர்
நடந்து முடிந்த இடைத்தேர்தலில் இதற்கான நீண்ட விளக்கங்களை சீமான் சொன்னபோதிலும், அந்த பிம்பம் முழுமையாக அவரிடமிருந்து விலகவில்லை என்பதே தற்போதைய சூழலாக உள்ளது. இந்நிலையில்தான், பாஜகவுக்கு எதிரான ஒரு அணியை கட்டமைக்க வேண்டும் என்று சீமான் வலியுறுத்தி உள்ளது, பலரையும் திரும்பி பார்க்க வைத்து வருகிறது.. அத்துடன், தன் நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ளாமல், "தனி ஒருவராகவே" வலம்வந்து கொண்டிருந்த சீமான், பாஜகவுக்கு எதிரான மாற்று அணி உருவானால், கூட்டணியில் சேர்வது பற்றி சிந்திப்போம் என்று கூறியுள்ளதும், வியப்பை தந்து வருகிறது..

6.5%
கட்சி ஆரம்பித்து 10 வருடங்கள் ஆகியும், இதுவரை ஒரு தேர்தலிலும் நாம் தமிழர் கட்சி வெற்றி பெற்றதில்லை. எனினும், குறிப்பிடத்தக்க தொகுதிகளில் வெற்றி தோல்விகளை தீர்மானிக்கும் அளவுக்கு அக்கட்சி முன்னேறி உள்ளதையும், கூட்டணி இல்லாமல் அனைத்து தொகுதிகளிலும் தனித்தே போட்டியிட்டு ஏறக்குறைய 6.5%-க்கும் அதிகமான வாக்குகளை பெற்றிருந்ததையும் யாராலும் மறுக்க முடியாது.. இதுவரை நடந்த தேர்தல்களில் ஒன்றில் கூட டெபாசிட் வாங்காததால் நாம் தமிழர் கட்சி தொண்டர்கள் சோர்வடைந்துள்ளனர்..

கமல் + சீமான்
கடந்த சட்டமன்ற தேர்தலின்போது, கூட்டணி வைத்து போட்டியிடலாம் என்று நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் வலியுறுத்தியதாகவும், அப்போதுகூட சீமான் அதற்கு மறுத்துவிட்டதாகவும் செய்திகள் வெளியாகின.. அதேபோல, கமல் + சீமான் சந்திப்பு நடந்தபோதும், ஒருவேளை இவர்கள் 2 பேரும் இணைந்து கூட்டணி வைப்பார்களா? என்றும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது.. அப்படி கமலும், சீமானும் இணைந்து கூட்டணி வைத்தால், இளைஞர்களின் எழுச்சி கூட்டணியாக அதுநிச்சயம் இருக்கும் என்றும், எதிர்காலத்தில் மிகப்பெரிய அரசியல் தாக்கத்தையும், மாற்றத்தையும் இந்த கூட்டணி ஏற்படுத்தும் என்றும் அரசியல் விமர்சகர்கள் கருத்து கூறியிருந்தனர். ஆனால், சீமான் அப்போதும் தனித்து போட்டி என்பதில் உறுதியாக இருந்தார்.

B டீம் திமுக
10 வருடம் கழித்து, கூட்டணி என்ற விஷயத்தை வெளிப்படுத்தி உள்ளதே மிகப்பெரிய மாற்றமாக அக்கட்சிக்குள் கருதப்படுகிறது.. ஆனால், யாருடன் கூட்டணி? என்ற எதிர்பார்ப்பும் கிளம்பி உள்ளது.. காரணம், பாஜக எதிர்ப்பு என்ற விஷயத்தில், திமுக + காங்கிரஸ் + விசிக + மநீம + கம்யூனிஸ்ட்கள் இப்படி பலரும் உள்ள நிலையில், இவர்களில் யாருடன் சீமான் கூட்டணி வைக்கக்கூடும் என்ற சந்தேகம் எழுகிறது.. இப்போதைக்கு பாஜகவுக்கு எதிரான கூட்டணியை தேசிய அளவில் கட்டமைப்பதில், முதல்வர் ஸ்டாலின் தீவிரமாக உள்ளார்.. அப்படியானால், திமுகவுடன் சீமான் கூட்டணி வைப்பாரா? என்றும் தெரியவில்லை.. எப்படி பாஜகவின் பி டீம் என்று விமர்சனங்கள் வருகிறதோ, அதுபோலவே, திமுகவின் பிடீம் என்ற விமர்சனத்துக்கும் சீமான் ஆளாகி உள்ளதால், அவர் முன்வைத்துள்ள "மாற்று அணி" மிகப்பெரிய ஆர்வத்தை தமிழக அரசியல் களத்தில் ஏற்படுத்தி உள்ளது.. பொறுத்திருந்து பார்ப்போம்..!!
-
சிங்கம் களம் இறங்கிருச்சு.. சிங்காநல்லூரில் களம் காணும் அண்ணாமலை? அக்கா தமிழிசை எங்கே தெரியுமா? -
அண்ணாமலைக்கு சீட் கொடுக்க கூடாது.. எடப்பாடி எடுத்த முடிவு.. பாஜக தொகுதி பங்கீட்டில் என்ன நடந்தது? -
14 அமைச்சர்களிடம் நேருக்கு நேர் மோதல் இல்லை.. பாஜக, அமமுகவை கோர்த்துவிட்ட எடப்பாடி பழனிசாமி! -
நடிகை கவுதமியை மீண்டும் ஏமாற்றிய அதிமுக – பாஜக.. ராஜபாளையம் ஜான் பாண்டியனுக்கு ஒதுக்கியதன் பின்னணி -
மதுரை தெற்கில் பாஜக வெல்லுமா.. செளராஷ்டிரா வாக்குகளை நம்பும் ராம சீனிவாசன்.. பூமிநாதன் சமாளிப்பாரா? -
எடப்பாடி சாமர்த்தியசாலியா.. அமித்ஷா சாமர்த்தியசாலியா.. அதிமுக கூட்டணியில் நடக்கும் எதார்த்தம் என்ன -
ஷாக்கில் சரவணன்! எடப்பாடிக்காக விழுந்து விழுந்து வேலை பார்ப்பாரே அவரா? பாஜக விஐபிகள் மெகா ஸ்கெட்ச் -
சேப்டி கேம் ஆடுகிறாரா எடப்பாடி? தென் மண்டலத்தை பாஜகவிற்கு தாரை வார்த்ததில் உள் அர்த்தம் இருக்கிறதா? -
"அந்த" 54 தொகுதிகள் தான் மேஜிக்.. மம்தாவை காலி செய்ய சக்கர வியூகம்.. இறங்கி அடிக்கும் பாஜக! -
அதிமுக வேட்பாளர்கள் யார்? 146 வேட்பாளர்களை எப்போது அறிவிப்பார் எடப்பாடி! உச்சகட்ட டென்ஷனில் ர.ர.கள்! -
அரைக் கிணறை தாண்டாத அறிவாலயம்.. அதிவேகத்தில் அதிமுக! போட்ட ஸ்கெட்சை பக்காவாக முடித்த எடப்பாடி! -
பலே ஆளுங்க எடப்பாடி பழனிசாமி.. பாஜகவின் 27 தொகுதிகளில் இப்படி ஒரு ட்விஸ்டா! பாவம் ஜிகே வாசன்?












Click it and Unblock the Notifications