மார்கெட்டில் ஓட ஓட விரட்டி.. பாஜக பிரமுகர் வெட்டிகொலை.. மிட்டாய் பாபு கேங் அட்டகாசம்.. திருச்சியில்!
திருச்சி மார்க்கெட் பகுதியில் பாஜக பிரமுகர் ஓட ஓட விரட்டி கொல்லப்பட்டார்
திருச்சி: மார்க்கெட்டிலேயே ஓட ஓட விரட்டி... பாஜக பிரமுகரை வெட்டி கொன்றுள்ளர் மிட்டாய் பாபு.. இந்த சம்பவத்தினால் பாஜக தொண்டர்கள் கொதிப்படைந்து, மிட்டாய் உட்பட 5 பேர் கொண்ட கும்பலை உடனடியாக கைது செய்யக்கோரி தொண்டர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.. இதனால் திருச்சி பகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
திருச்சி வரகனேரி பகுதியை சேர்ந்தவர் விஜய் ரகு.. 40 வயதாகிறது.. பாலக்கரை மண்டல பாஜக செயலாளராக பதவி வகித்தவர்.. காந்தி மார்க்கெட்டில் இருசக்கர நுழைவு பகுதியில் டூவீலருக்கு சீட்டு வழங்கும் வேலையை செய்து வந்தவர்.

இந்நிலையில் இன்று காலை வழக்கம்போல் விஜய் ரகு மார்க்கெட் சென்றார்.. அப்போது மிட்டாய் பாபு என்பவர் 5 பேர் கொண்ட கும்பலுடன் அரிவாளால் தாக்கியதாக கூறப்படுகிறது. உயிரை கையில் பிடித்து கொண்டு விஜய் ரகு தப்பி முயல.. மார்க்கெட்டுக்குள் ஓட ஓட விரட்டி அவரை அரிவாளாலேயே வெட்டி கொன்றுள்ளனர் மிட்டாய் பாபு & கோ!
பொதுமக்கள் கண் முன்னாடியே ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்தார் விஜய் ரகு.. தகவல் காந்தி மார்கெட் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து அவரை மீட்டு திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனாலும் விஜயகுரு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

இது சம்பந்தமாக போலீசார் விசாரணை செய்து வருவதுடன், தப்பி ஓடிய மிட்டாய் பாபுவை தேடி வருகின்றனர். எதனால் இந்த கொலை என்று தெரியவில்லை.. முன் விரோதம் காரணமாகவே படுகொலை நடந்ததாக சொல்கிறார்கள். மிட்டாய் பாபு ஒரு லாட்டரி வியாபாரி என்கிறார்கள். விஜய் ரகுவின் பக்கத்து வீட்டுக்காரராம்... அரசியல் முன்விரோதம் காரணமாக இவர்களுக்குள் ஏற்கனவே நிறைய முறை தகராறு வந்துள்ளது.
இதனால் ஏற்கனவே 2 முறை விஜயரகு மீது கொலை முயற்சி நடைபெற்றுள்ளது. அது மட்டுமல்ல, தேடப்பட்டு வரும் மிட்டாய் பாபு மீது ஏற்கெனவே ஏராளமான வழக்குகள் உள்ளதாம்.. சமீபத்தில்தான் ஒரு கேஸில் இருந்து ஜாமீனில் வெளியே வந்தாராம். இப்போது கொலை வரை சென்றிருப்பதால், மிட்டாய் பாபு மீது போலீசில் புகார் கொடுக்கப்பட்டு உள்ளது.

இந்த கொலை பாஜகவினரிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. அப்பகுதி தொண்டர்கள் பலர் மருத்துவமனை முன் திரண்டு சாலை மறியலில் ஈடுபட்டனர். குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தி அவர்கள் முழக்கமிட்டனர். இதையடுத்து பாதுகாப்புக்காக போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். மக்கள் நடமாட்டம் மிகுந்த மார்க்கெட்டில் நடந்த இந்த கொலை சம்பவம் திருச்சியில் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.
-
சென்னையை அதிரவைத்த மூதாட்டி - சிறுவன் மீதான பாலியல் வன்கொடுமை.. தேசிய மகளிர் ஆணையம் அதிரடி -
"10 வயது குழந்தையை கொன்னுட்டீயே.." கோவை சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளியை தாக்கிய சக கைதிகள்? -
முதல்வர் விஜய் வீடு அருகே பரபரப்பு: பனையூரில் ரத்தக் காயங்களுடன் ஆண் சடலம்.. போலீசார் தீவிர விசாரணை! -
கேரளா Amusement park-ல் ஆகாய ஊஞ்சல் உடைந்து தமிழர்கள் உள்பட 7 பேர் காயம்! நடந்தது என்ன? -
தனிப்படை போலீசாருக்கு மீன் வறுவல் போட்டு கொடுத்த கொலையாளி! கடலூரில் அடுத்த நொடி நடந்த ட்விஸ்ட் -
மணப்பாறை சிப்காட்: 650 பேருக்கு வேலை ரெடி! வேகமெடுக்கும் பெப்சி ரூ.880 கோடி மெகா தொழிற்சாலை திட்டம் -
கையில் கத்தி.. பெட்ரோல் பங்க் ஊழியர்களை கொலைவெறியோடு தாக்கிய கும்பல்.. தூத்துக்குடியில் பயங்கரம்! -
Rooster பொஷிஷனில் மனைவிக்கு ‘டார்ச்சர்'.. வீட்டுக்குள் சிறை வைத்து கணவர் செய்த வெறிச்செயல் -
தென்காசியில் ஷாக்.. கண்ணில் தென்பட்டவர்கள் அனைவருக்கும் அரிவாள் வெட்டு.. மர்ம கும்பல் வெறிச்செயல்! -
சட்டம் ஒழுங்கு காலி.. எங்கே போனது சிங்கப்பெண் படை? முதல்வர் விஜய் அரசை விளாசிய டிடிவி தினகரன்! -
கடலூரில் முகம் சிதைத்த நிலையில் கிடந்த இளம்பெண் சடலம்.. கொலையாளி யார்? போலீஸ் தீவிரம் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா?












Click it and Unblock the Notifications