"தாலி போலி.. குங்குமம் போலி.. பஞ்ச அரசு இது".. திருச்சியில் போட்டு தாக்கிய எச்.ராஜா
திமுக அரசை கடுமையாக சாடி பேசினார் எச் ராஜா
திருச்சி: திமுக அரசுக்கு ஓட்டு போடுபவராக இருந்தால், கோயிலுக்குப் போவது போலி, நெற்றியில் குங்குமம் வைப்பது போலி, மனைவிக்கு கட்டிய தாலி போலி... அதனால், மத நம்பிக்கை இருந்தால், கோயில்களை இடிக்கும் அரசுக்கு உங்கள் எதிர்ப்பை காட்டி ஓட்டு போடுங்கள் என்று எச்.ராஜா ஆவேசமாக பேசிய பேச்சு சலசலப்பை கூட்டி உள்ளது.
திருச்சி மாநகராட்சி வார்டுகளில் கவுன்சிலர் பதவிக்குப் போட்டியிடும் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து, அக்கட்சியின் மூத்த தலைவர் ஹெச். ராஜா பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:
மத்திய அரசு மக்களுக்காக எத்தனையோ நல்ல விஷயங்களை செய்துள்ளது.. இந்த கொரோனா லாக்டவுன் காலத்தில், தொழில் நிறுவனங்களில், 50 சதவீதம்தான் வேலை...

பப்பாளி விதை
ஆனால், 80 கோடி மக்களுக்கு மத்திய அரசு, மாதம் 5 கிலோ அரிசி, ஒரு கிலோ பருப்பு இலவசமாக வழங்கியுள்ளது.. தமிழகத்தில் இருப்பது மாபாவிகள் அரசு... மஞ்சள் தூளுக்கு பதில் மரத்தூள் தர்றங்க.. இலவும் பஞ்சு, பப்பாளி விதைகளை மிளகு என்று சொல்லி தந்தனர்... பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கியதில், அமைச்சர் சக்கரபாணி தப்பே செய்யவில்லை என்கிறார்.. தவறு செய்தவர்கள் தண்டிக்கப்படுவார்கள் என்று முதல்வர் சொல்கிறார்.

திருடர்கள்
இவங்க கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேத்திட்டாங்களா? அரசு ஊழியர்களுக்கு பஞ்சப்படி தரமுடியாத பஞ்ச பரதேசி அரசு இந்த தமிழ்நாட்டில் நடக்கிறது.. 10 ரூபாயை கீழே போட்டு அதை எடுக்க குனியும்போது பாக்கெட்டில் இருக்கும் 2000 ரூபாயை ஜேப்படி செய்வது போல், சட்டசபை தேர்தலில் மக்களிடம் ஓட்டுக்களை திருடி உள்ளனர்.. திருடியும் விட்டனர்.

கரப்ஷன் - கமிஷன்
1967ம் ஆண்டு முதல் ஒரு ரூபாய்க்கி 3 படி அரிசி என்று சொன்னதுமே முதலே பொய்தான்.. இப்போது செயல்படுத்தப்படும் திட்டங்கள் அனைத்துமே மத்திய அரசின் திட்டங்கள் தான். மாநில அரசைப் பொறுத்தவரை கமிஷன், கனெக்சன் , கரப்ஷன் என்ற திட்டம் செயல்பாட்டில் உள்ளது... 100 சதவீதம் உள்ள இந்து விரோத ஆட்சிக்கு சரியான பாடம் மக்கள்தான் கற்பிக்க வேண்டும்.

தாலி போலி
உளுத்துப்போன இந்து விரோத ஆட்சியாளர்களுக்கு ஓட்டு போடுவது கொள்ளிக் கட்டையால் தலையில் நம்மை நாமே சொரிந்து கொள்வது போலத்தான்.. திமுக அரசுக்கு ஓட்டு போடுபவராக இருந்தால் கோயிலுக்குப் போவது போலி, நெற்றியில் குங்குமம் வைப்பது போலி, மனைவிக்கு கட்டிய தாலி போலி... அதனால், மத நம்பிக்கை இருந்தால், கோயில்களை இடிக்கும் அரசுக்கு உங்கள் எதிர்ப்பை காட்டி ஓட்டு போடுங்கள்
-
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
விஜய்க்கு நேரடி குடைச்சல் தரப்போகும் அண்ணாமலை.. பாஜகவில் இருந்து விலகிய கையோடு போட்ட பிளான்! பின்னணி -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்?












Click it and Unblock the Notifications