திருச்சிராப்பள்ளி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

என்னால முடியல! எனக்கு ப்ராப்ளமா வருது.. போலீசுக்கு ஓடிய பாஜக பிரபலம்! அடடே இவரா? என்னாச்சு?

Google Oneindia Tamil News

திருச்சி : ஆளும் கட்சியான திமுகவை நான் தொடர்ந்து விமர்சிப்பதால் அரசியல் காழ்ப்புணர்ச்சியின் காரணமாக என் மீது திட்டமிட்டு வழக்கு தொடர்ந்து உள்ளனர் என பாஜக ஓபிசி பிரிவு மாநில செயலாளர் சூர்யசிவா திருச்சி மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் கூறியுள்ளார்.

திமுக மாநிலங்களவை எம்பி திருச்சி சிவா உடன் கருத்து மோதல் காரணமாக நீண்ட நாட்கள் அவருடன் பேசாமல் இருக்கும் அவரது மகன் சூர்யா சிவா கடந்த சில மாதங்களுக்கு முன்பு பாஜகவில் இணைந்தார்.

பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை சந்தித்து அவர் பாஜகவில் இணைந்த நிலையில் அவருக்கு பாஜக ஓபிசி பிரிவு மாநில செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டது. தொடர்ந்து பல்வேறு ஊடகங்களிலும் யூட்யூப் சேனல்களிலும் திமுகவுக்கு எதிராக பல்வேறு கருத்துக்களை முன்வைத்து வருகிறார்.

கால்பந்து வீராங்கனை பிரியா இறப்பு.. அந்த 2 அரசு மருத்துவர்களும் தலைமறைவு?.. அமைச்சர் சொல்வது என்ன? கால்பந்து வீராங்கனை பிரியா இறப்பு.. அந்த 2 அரசு மருத்துவர்களும் தலைமறைவு?.. அமைச்சர் சொல்வது என்ன?

சூர்யா சிவா

சூர்யா சிவா

இந்நிலையில்," திருச்சி எடமலைப்பட்டி புதூர் பகுதியில் வசித்து வருபவர் ஆர்த்தி - இவருக்கு திருச்சி சண்முகா நகர் 3வது குறுக்கு சாலையில் சொந்தமாக ஏபிசி மாண்டேசரி பள்ளி மற்றும் வீடு இணைந்து உள்ளது. இந்த வளாகத்தை கடந்த ஒரு வருட காலமாக காலி செய்ய மறுப்பு தெரிவித்தும், 6மாத வாடகையும் தராமல், பாஜகவின் ஓபிசி அணியின் மாநில செயலாளர் சூர்ய சிவா மற்றும் அவரது மனைவி அத்தினா கொலை செய்து விடுவதாக மிரட்டியதாக கடந்த 2ம் தேதி காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனுவை அளித்திருந்தனர்.

புகார்

புகார்

அதனையொட்டி இன்று பாஜகவின் ஓபிசி அணியின் மாநில செயலாளர் சூர்யசிவா மற்றும் அவரது மனைவி அத்தினா ஆகிய இருவரும் திருச்சி காவல்துறை ஆணையர் அலுவலகத்திற்கு வருகை தந்தனர். முன்னதாக செய்தியாளர்களை சந்தித்து பேசிய ஓபிசி அணியின் மாநில செயலாளர் சூர்யசிவா," தன்மீது கொடுக்கப்பட்ட புகாரில் உண்மை இல்லை. ஆர்த்தி மற்றும் அவரது கணவர் இணைந்து பள்ளி வளாகத்திற்குள் அத்துமீறி நுழைந்து குண்டர்களை வைத்து மிரட்டியதாக ஆதாரங்களுடன் புகார் அளிக்க வந்துள்ளேன்.

திமுக விமர்சனம்

திமுக விமர்சனம்

காவல்துறைக்கு என் மீது எப்படியாவது வழக்கு தொடர வேண்டும் என்ற நோக்கில் யார் புகார் கொடுத்தாலும் உடனடியாக அந்த புகாரின் மீது நடவடிக்கை எடுப்பது போல் வழக்கு என் மீது ஜோடிக்கப்பட்டு வருகிறது. அதற்கு முக்கிய காரணம் ஆளும் கட்சியாகிய திமுகவை நான் தொடர்ந்து விமர்சிப்பதால் என்னை பழிவாங்கும் நோக்கத்தோடு காவல்துறை செயல்படுகிறது. இந்த பள்ளி வளாக கட்டிடம் தொடர்பான புகாரிலும் இதே போன்று என் மீது காவல்துறை திட்டமிட்டு வழக்கு பதிவு செய்துள்ளது" என்றார்.

அடுத்தடுத்து வழக்குகள்

அடுத்தடுத்து வழக்குகள்

ஏற்கனவே தன்னிடம் பணியாற்றிய கார் ஓட்டுனருக்கு முறையான சம்பளம் வழங்காமல் அதை கேட்க சென்றவரை கொலை முயற்சி செய்ததாக வழக்கு அவர் மீது பதிவு செய்யப்பட்டு விசாரணையில் உள்ளது. இதேபோல் அமைச்சர் கேஎன் நேரு குறித்துப் பேசியதாகவும் அவர் மீது காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அவர் மீது அடுத்தடுத்து புகார்கள் அளிக்கப்பட்டு வரும் நிலையில், சூர்யா சிவா தற்போது பேசி இருப்பது குறிப்பிடத்தக்கது.

English summary
State secretary of BJP OBC unit Suryasiva said in Trichy Police Commissioner's Office that they are planning to file a case against me due to political vandalism as I continue to criticize the ruling party DMK.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X