பழைய ஸ்டைல மாற்றுங்க! இனி இது தாங்க டிரெண்ட்! தீபாவளி புது வரவு புடவைகள்! கலக்கல் கலெக்ஷன்ஸ்
திருச்சி: தீபாவளி பண்டிகைக்கான ஷாப்பிங்கை பெரும்பாலானோர் முடித்திருப்பீர்கள் என கருதுகிறோம். சிலர் நேரடியாக ஜவுளி கடைகளுக்கு சென்று புத்தாடைகள் எடுத்திருப்பீர்கள், சிலர் அலைச்சலை தவிர்க்கும் வகையில் ஆன்லைன் மூலமாகவே தீபாவளி பர்சேஸை முடித்திருப்பீர்கள். இன்னும் சிலர் கடைசி மூன்று நாட்களில் எடுத்துக்கொள்ளலாம் என நினைத்திருப்பீர்கள்.
இந்நிலையில் தீபாவளிக்கு விற்பனைக்கு வந்துள்ள புது கலெக்ஷன் சேலைகள் பற்றியும், அதிகம் விற்பனையாகும் ரகங்கள் பற்றியும் அறிந்து கொள்வதற்காக தமிழகத்தின் முக்கிய நகரங்கள் அனைத்திலும் கிளைகளை கொண்டுள்ள பி.எஸ்.ஆர். சில்க்ஸ்க்கு நாம் நேரடி விசிட் அடித்தோம். தீபாவளிக்கு வந்துள்ள புத்தம் புது சேலை கலெக்ஷன்களை மலைபோல் குவித்து விவரிக்கத் தொடங்கினார்கள் கடை ஊழியர்கள்.

அதன் விவரம் அப்படியே வருமாறு;
பனாரஸ் பிரிண்ட்: ''பனாரஸ் பட்டை கேள்விப்பட்டிருப்பீர்கள், பனாரஸிலேயே பிரிண்டட் இந்த தீபாவளிக்கு புதுசா வந்திருக்கு. பார்க்கவும் கிராண்டாக இருக்கும், லைட் வெயிட்டாகவும் இருக்கும். விலை பார்த்தீங்கன்னா ஆயிரத்து நூற்று 80 ரூபாய் தான். பட்டு போல் பார்க்க ரிச்சாகத் தெரியும். ஆனால் பட்டில்லை. தீபாவளி விற்பனையில் ஃபாஸ்ட் மூவிங் கலெக்ஷனில் இதுவும் ஒன்று.''
சில்க் பிரிண்டட் : ''அதேபோல் சில்கில் பிரிண்டட் கலெக்ஷனும் தீபாவளி புது வரவு தான். இந்த ரக சேலைகளை யார் அதிகம் வாங்குகிறார்கள் என்று பார்த்தால், கல்லூரி மாணவிகள். இப்ப இருக்கிற இளம் பெண்கள் பெரும்பாலானோர் பட்டு உடுத்த விரும்புவதில்லை. ஆனால் பட்டை போலவே பார்ப்பதற்கு இருக்கும் லைட் வெயிட் சில்க் பிரிண்டட் சேலைகளை அதிகம் வாங்குகின்றனர்.இந்தாண்டு தீபாவளிக்கு இது எங்க கடையில் புது வரவு.''
காதி சில்க்: ''காதி சில்க்கை பொறுத்தவரை பி.எஸ்.ஆரில் ரேர் பேப்ரிக் கலெக்ஷன் தான் உள்ளன. பெண் அரசியல் வாதிகள், டாக்டர்கள், என முக்கிய விஐபிக்கள் எல்லாம் காதி சில்க்கை தான் இந்த தீபாவளிக்கு அதிகம் வாங்கினார்கள். பட்டு போல் தெரியாது, ஆனால் பார்க்க எலிகெண்டாக இருக்கும். காதி சில்க் சேலையை பொறுத்தவரை இதன் விலை ரூ.8,000. பட்டு சேலைக்கு இணையான விலையா என நினைக்கலம், இதற்கு காரணம் ரேர் பேப்ரிக் மற்றும் நைஸ்.''
கோவை காட்டன்: ''கோவை காட்டனை பொறுத்தவரை வயதானவர்களுக்கு ஏற்ற சேலை. அதேபோல் தீபாவளிக்கு எடுத்துக் கொடுப்பவர்களும் கோவை காட்டனை தான் அதிகம் வாங்குகிறார்கள். செல்ஃபிலேயே பிளவுஸ் வந்துடும். ஃபுல் டிசைனாக இருக்கும். ஹை லெவல் பீப்பிள்ஸ் கோவை காட்டனை தான் தேர்வு செய்கிறார்கள்.''
டிஸ்யூ சில்க்- செமி லினன்: ''லினன் சேலைகளை பொறுத்தவரை பார்க்க ரொம்ப டீசண்டாகவும், நீட்டாகவும் இருக்கும் என்பதால் வேலைக்கு செல்லும் பெண்கள் இந்த தீபாவளிக்கு இதை விரும்பி வாங்கினார்கள். அதேபோல் டிஸ்யூ சில்க்கை பொறுத்தை எங்களிடம் பியூர் டிஸ்யூ சில்க். ஆர்கென்ஸா ரக சேலைகளும் தீபாவளிக்கு வந்த புது வரவு தான். சின்னப் பொண்ணுங்க ஈஸியாக கட்டிக்கொள்ளலாம். சந்தேரி காட்டன், இது வந்து பார்க்க காட்டன் மாதிரி தெரியாது, ஸ்டார்ச் லெஸ், அதனால் ஈஸியாக கட்டிக்கொள்ளலாம்.
பட்டு சேலையில் வைர ஊசி டிசைன்: ''பட்டு சேலையில் வைர ஊசி டிசைன் வைத்த மெட்டீரியல் இந்த தீபாவளிக்கு வந்த புது கலெக்ஷன். இதோடு விலை பத்தாயிரத்தில் இருந்து ஆரம்பமாகுது. 1500 ரூபாயில் தொடங்கி 60,000 ரூபாய் வரை பட்டு சேலைகள் எங்களிடம் உள்ளன. அதேபோல் ஆர்டிஃபீசியல் சேரீஸ் ரகங்களும் புது கலெக்ஷன் தான். ஆர்டிஃபீசியல் சேரி என்றால் அச்சு அசல் பட்டு மாதிரியே இருக்கும், ஆனால் பட்டு கிடையாது.'' என ஒவ்வொரு ரகங்களை பற்றியும் விளக்கினார்கள்.
Oneindia Tamil Youtube: இங்கே நீங்கள் படித்ததை விட தீபாவளி புது டிரெண்டிங் சேலைகளை குறித்த காணொளியை நமது Oneindia Tamil Youtube சேனலில் பின் வரும் லிங்கை கிளிக் செய்து கண்டு ரசிக்கலாம்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications