திருச்சியில் ஒலிம்பிக் அகாடமி.. முதல்வர் மு.க.ஸ்டாலின் கொடுத்த சர்ப்ரைஸ்.. அப்போ விளையாட்டு நகரம்?
திருச்சி: திருச்சியில் உலகத்தரத்தில் ஒலிம்பிக் அகாடமி அமைக்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். தமிழ்நாட்டின் 4 மண்டலங்களில் அமைக்கப்பட உள்ள ஒலிம்பிக் அகாடமிகளில் ஒன்று, திருச்சியில் அமைக்கப்பட உள்ளது. இதனால் விளையாட்டு வீரர்களின் திறன் வேகமாக முன்னேற்றமடையும் என்று பார்க்கப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் இதனால் திருச்சி அருகே விளையாட்டு நகரம் அமைக்கும் தமிழக அரசின் திட்டத்தில் மாற்றம் செய்யப்பட்டிருக்கலாம் என்று பார்க்கப்படுகிறது.
ஏப்ரல் மாதத்தில் நடைபெற்ற தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதங்கள் நடைபெற்றது.
அப்போது பன்னாட்டுப் போட்டிகளில் தமிழகத்தைச் சேர்ந்த வீரர், வீராங்கனைகள் அதிக பதக்கங்கள் வெல்வதை ஊக்குவிக்கக்கூடிய வகையில், உலகத் தரத்திலான விளையாட்டுக் கட்டமைப்புகளை ஏற்படுத்த பிரம்மாண்டமான விளையாட்டு நகரம் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
அதுமட்டுமல்லாமல், ஒலிம்பிக் போன்ற சர்வதேச அளவிலான போட்டிகளில் பதக்கங்கள் வெல்லும் வாய்ப்பை ஏற்படுத்த தமிழகத்தின் 4 மண்டலங்களில் தலா ஒன்று வீதம் நான்கு ஒலிம்பிக் அகாடமிகள் அமைக்க அனைத்துவிதமான நடவடிக்கைகளையும் தமிழக அரசு மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது.

ஒலிம்பிக் அகாடமி
இதனிடையே விளையாட்டு நகரம் அமைப்பதற்கான இடங்கள் தேர்வு செய்யப்பட்டு வரும் நிலையில், ஒலிம்பிக் அகாடாமி பற்றி எந்த அறிவிப்பும் வெளியிடப்படாமல் இருந்தன. இந்த நிலையில் திருச்சி வந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், திருச்சியில் சர்வதேச தரத்திலான ஒலிம்பிக் அகாடமி அமைக்கப்படும் என்று அறிவித்துள்ளார்.

முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
இதுகுறித்து மு.க.ஸ்டாலின் பேசுகையில், விளிம்பு நிலை மக்களை மேம்படுத்தும் துறைகள் உதயநிதியிடம் வழங்கப்பட்டுள்ளது. திருச்சியில் அனைத்து வசதிகளுடன் கூடிய ஒலிம்பிக் அகாடமி அமைக்கப்படும். ஒலிம்பிக் போன்ற பன்னாட்டு அளவிலான போட்டிகளுக்குத் தமிழ்நாட்டு இளைஞர்கள் தயாராகவே ஒலிம்பிக் அகாடமி. உலகத் தரம் வாய்ந்த பயிற்சி வழங்கக்கூடிய வகையில் தமிழ்நாட்டில் 4 ஒலிம்பிக் அகாடமிகள் அமைக்கப்பட உள்ளன.

திராவிட மாடல் ஆட்சி
தமிழர்களையும், தமிழ்நாட்டையும் செழிக்க வைப்பதே திராவிட மாடல் ஆட்சியின் நோக்கம். யார் எத்தகைய விமர்சனங்களை வைத்தாலும் திராவிட மாடல் கொள்கையில் இருந்து வழுவாத ஆட்சியை நாம் இன்றைக்கு நடத்திக் கொண்டிருக்கிறோம். எல்லோருக்கும் எல்லாம் என்ற கருதுகோளின் அடிப்படையில் இந்த ஆட்சியின் கொள்கையையும், திட்டங்களையும் இன்றைக்கு இந்தியாவின் பல்வேறு மாநிலங்கள் பின்பற்றக் கூடிய வகையில் நாம் இன்று செயலாற்றிக் கொண்டிருக்கிறோம் என்று தெரிவித்தார்.

விளையாட்டு நகரம்?
ஏற்கனவே திருச்சியில் அண்ணா விளையாட்டு அரங்கம் இருக்கும் சூழலில், சென்னையில் அமைக்கப்படவிருந்த விளையாட்டு நகரம் திருச்சி அருகே மாற்றம் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகியது. ஆனால் திருச்சியில் ஒலிம்பிக் அகாடமி அமைய உள்ளதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ள நிலையில், விளையாட்டு நகரம் சென்னைக்கு அருகே அமைக்கும் முயற்சியில் தமிழக அரசு ஈடுபடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா?












Click it and Unblock the Notifications