மோடியிடம் ஸ்டாலின் சொன்ன ஒரு வார்த்தை! இதுக்கு மட்டும் கிரீன் சிக்னல் கிடைச்சா! மதுரை மொத்தமா மாறும்

Subscribe to Oneindia Tamil

திருச்சி: நேற்று திருச்சி வந்த பிரதமர் மோடியிடம் முதல்வர் ஸ்டாலின் முக்கியமான கோரிக்கைகளை வைத்தார். இதில் மதுரை தொடர்பாக அவர் வைத்த கோரிக்கை பெரிய அளவில் கவனம் பெற்றுள்ளது.

நேற்று திருச்சி விமான நிலையம் உட்பட திருச்சியில் பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்து பிரதமர் மோடி உரையாற்றினார். அதில், 2024-ம் ஆண்டில் நான் பங்கேற்கும் முதல் பொது நிகழ்ச்சி. தமிழ்நாடு முன்னேற்றத்துக்கு ரூ.20,000 கோடி திட்டங்கள் தொடக்கம்.. எனது தமிழ் குடும்பமே முதலில் உங்கள் அனைவருக்கும் 2024 புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

CM Stalin important request to Prime Minister Modi on Madurai Airport Status

2023-ல் மழை வெள்ளத்தால் தமிழ்நாட்டில் பலர் உயிரிழந்தனர். 2023-ல் மழை வெள்ளத்தால் தமிழ்நாட்டில் பெரும் சேதம் ஏற்பட்டது. மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தமிழ்நாட்டுக்கு மத்திய அரசு உறுதுணையாக இருந்தது.

விஜயகாந்த் சில நாட்களுக்கு முன்னர் காலமானார். சினிமாவில் மட்டும் கேப்டன் விஜயகாந்த் அல்ல அரசியலிலும் கேப்டன். விஜயகாந்த் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிக்கிறேன். பொருளாதார, கலாசார வளர்ச்சியில் தமிழ்நாட்டின் பங்களிப்பு உள்ளது, என்று கூறினார்.

மதுரை தொடர்பான கோரிக்கை: நேற்று திருச்சி வந்த பிரதமர் மோடியிடம் முதல்வர் ஸ்டாலின் முக்கியமான கோரிக்கைகளை வைத்தார். மதுரை தொடர்பாக அவர் வைத்த கோரிக்கை பெரிய அளவில் கவனம் பெற்றுள்ளது.

மதுரை விமான நிலையத்தைப் பன்னாட்டு விமான நிலையமாக அறிவிக்க வேண்டும்.
சென்னை - பினாங்கு, சென்னை - டோக்கியோ இடையே நேரடி விமான சேவையைத் தொடங்கிட வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். திருச்சி போல மதுரை விமான நிலையத்தை மாற்ற வேண்டும் என்று அவர் கோரிக்கை வைத்தார்.

சென்னை, திருச்சி, கோவை, மதுரை, தூத்துக்குடி, வேலூர் விமான நிலைய விரிவாக்க மற்றும் நவீனமயமாக்கல் பணிகளை விரைந்து முடித்து மக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டு வர வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் தனது கோரிக்கையில் குறிப்பிட்டார்.

வெள்ள பாதிப்பு: சென்னை மற்றும் தென் மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ளப் பாதிப்பை 'கடுமையான இயற்கைப் பேரிடர்கள்' என அறிவித்து NDRF-இல் இருந்து உரிய நிவாரண நிதி வழங்கிட வேண்டும். சென்னை மெட்ரோ இரயில் திட்டத்தின் இரண்டாம் கட்டப் பணிகளுக்கான ஒன்றிய அரசின் பங்களிப்பினை விரைந்து வழங்கிட வேண்டும்.

தமிழ்நாட்டில் NHAI செயல்படுத்தி வரும் பணிகளை விரைவுபடுத்த வேண்டும். இருவழிச் சாலையாக மாற்றப்படுகிற நெடுஞ்சாலைகளுக்கும் சுங்கக் கட்டணம் வசூலிக்கப்படுவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும். திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த MSME நிறுவனங்களுக்கு BHEL நிறுவனம் அதிக அளவில் procurement orders வழங்க வேண்டும். என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமர் மோடியிடம் கோரிக்கை வைத்தார்.

திருச்சி ஏர்போர்ட்: திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் சுமார் ரூ.1,200 கோடி மதிப்பீட்டில் புதிய முனையம் கட்டப்பட்டுள்ளது. முன்புறம் கோவில் தோற்றத்திலும்.. பின் புறம் அல்ட்ரா மாடர்ன் தோற்றத்திலும் இந்த விமான நிலையம் கட்டப்பட்டு உள்ளது.

தற்போது திருச்சி விமான நிலையத்தை 1.5 மில்லியன் பயணிகள் பயன்படுத்தி வருகின்றனர். 4.5 மில்லியன் பயணிகளைக் கையாளும் நோக்கில், 60 கவுண்டர்களுடன் புதிய முனையம் நிறுவப்பட்டுள்ளது. ஏற்கனவே, 10 சர்வதேச விமானங்களும், நான்கு உள்நாட்டு விமானங்களும் விமான நிலையத்திலிருந்து இயக்கப்பட்டு வருகின்றன, மேலும் இரண்டையும் அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக விமான நிலைய அதிகாரிகள் கூறி உள்ளனர்.

பீக் ஹவர்ஸில் 2,900 பயணிகளை செயலாக்கும் வகையில் புதிய முனையம் வடிவமைக்கப்பட்டுள்ளது. 75,000 சதுர மீட்டர் பரப்பளவில் 60 செக்-இன் கவுண்டர்கள் மற்றும் 10 போர்டிங் பிரிட்ஜ்கள் இருக்கும். கட்டுப்பாட்டு அறை, துணை உபகரண அறைகள், டெர்மினல் ரேடார், ரேடார் உருவகப்படுத்துதல், ஆட்டோமேஷன் வசதிகள், விஎச்எஃப், ஏஏஐ அலுவலகங்கள் மற்றும் வானிலை ஆய்வு அலுவலகங்கள் ஆகியவை இத்திட்டத்தின் ஒரு பகுதியாகும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+