வேண்டுதலை நிறைவேற்ற... திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயிலுக்கு வந்த துர்கா ஸ்டாலின்..!
திருச்சி: முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் மனைவி துர்கா, வேண்டுதலை நிறைவேற்றுவதற்காக திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயிலுக்கு வந்து சென்றிருக்கிறார்.
Recommended Video
சென்னையிலிருந்து கார் மூலம் சமயபுரம் டோல்கேட் வரை வந்த அவர், அதற்கு பிறகு சுமார் 2 கி.மீ. நடந்தே சென்று மாரியம்மனை வழிபட்டிருக்கிறார்.
துர்கா ஸ்டாலினின் கோயில் வருகை குறித்த தகவல் கட்சியினருக்கு தெரிந்தால் கூட்டம் அதிகரித்துவிடும் என்பதால் இது ரகசியமாக வைக்கப்பட்டிருந்தது.

முதல்வர் மனைவி
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலினை பொறுத்தவரை ஆன்மிகத்தில் மிகுதியாக ஈடுபாடு கொண்டவர். தனது கணவருடன் வெளியூர்களுக்கு செல்கிறார் என்றால், அந்த ஊரில் உள்ள கோயிலுக்கு செல்லாமல் சென்னை திரும்பமாட்டார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பகுத்தறிவு பாதையை பின்பற்றினாலும் கூட, தனது விருப்பத்தை குடும்பத்தினர் மீது திணிக்கமாட்டார். மனைவி மற்றும் உறவினர்களின் தனிமனித உரிமைகளில் தலையிடமாட்டார்.

மனம் உருகி
இதனால் துர்கா ஸ்டாலின் கோயில் கோயிலாக சென்று மனமுருகி தனது குடும்பத்தினருக்காவும், கணவர் ஸ்டாலினுக்காகவும் தேர்தலுக்கு முன்பாக வேண்டுதலை முன் வைத்தார். தேர்தல் முடிவுகள் அவரது பிரார்தனைகள் நிறைவேறும் வகையில் அமைந்ததால், இப்போது வேண்டுதலை நிறைவேற்றுவதற்காக கடந்த இரண்டு மாதங்களாக தமிழகத்தின் முக்கிய கோயில்களுக்கு சென்று வருகிறார்.

மாரியம்மன் கோயில்
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில், நெல்லையப்பர் கோயில், எனச் சென்ற இவர் நேற்று திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயிலுக்கு நேற்று மாலை வந்து சென்றுள்ளார். அதுவும் சமயபுரம் டோல்கேட்டில் இருந்து நடந்தே பாதயாத்திரையாக வந்து தனது நன்றியை வெளிப்படுத்தியுள்ளார் துர்கா ஸ்டாலின். முதலமைச்சரின் மனைவி என்கிற எந்த பெருமையும் இல்லாமல் மிகவும் எளிமையாக ஆயிரக்கணக்கான பக்தர்களில் தானும் ஒருவராக மாரியம்மனை வழிபட்டுச் சென்றுள்ளார் இவர்.

பாத யாத்திரை
இதனிடையே சமயபுரம் மாரியம்மன் கோயிலை உள்ளடக்கிய மண்ணச்சநல்லூர் தொகுதி திமுக எம்.எல்.ஏ. கதிரவன், முதலமைச்சரின் மனைவிக்கு வரவேற்பு அளித்தார். துர்கா ஸ்டாலின் பாத யாத்திரையாக கோயிலுக்கு நடந்து வந்த போது அவருடன் அவரது உறவினர்களும் சென்றனர். மற்றபடி இந்த தகவல் கட்சியினர் யாருக்கும் தெரியப்படுத்தவில்லை. திருச்சியில் தங்கியிருக்கும் அவர் உறையூர் வெக்காளியம்மன் கோயிலுக்கும் எனத் தெரிவிக்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications