திருச்சியில் தோப்புக்குள் அழைத்து கல்லூரி மாணவர் கொடூர கொலை.. சரணடைந்த 2 பேர்.. திடுக் தகவல்
திருச்சி: திருச்சி மாவட்டம், முசிறியை சேர்ந்தவர் முருகானந்தம் கூலித்தொழிலாளி இவரது மகன் கௌதம் (19),கடந்த 17ஆம் தேதி முசிறியில் உள்ள நர்சரி தோப்பு என்ற இடத்தில் அடித்து கொலை செய்யப்பட்ட நிலையில் இறந்து கிடந்தார்.
இதுகுறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டபோது 16ஆம் தேதி வீட்டில் இருந்து சென்ற வாலிபர் வீட்டிற்கு செல்லவில்லை என்பதும் 16ஆம் தேதி இரவு கொலை செய்யப்பட்டுள்ளார் என்பது தெரியவந்தது கொலைக்கான காரணம் குறித்தும் கொலைகள் பற்றியும் போலீசார் தீவிரமாக துப்பு துலக்கி வந்தனர்.
முசிறி போலீஸ் டிஎஸ்பி பிரம்மானந்தம் மேற்பார்வையில் போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு கொலையாளிகளை தேடி வந்தனர். இந்நிலையில் முசிறி சுண்ணாம்பு காரை தெருவைச் சேர்ந்த முருகேசன் என்பவரது மகன் ராம்கி என்கின்ற ரகுபதி (23)

விஏஓவிடம் சரண்
ஸ்ரீஅங்காளம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த ராஜா என்பவரின் மகன் அழகுமணி (38) ஆகிய இருவரும் கௌதம் கொலை வழக்கு தொடர்பாக முசிறி மேற்கு கிராம நிர்வாக அலுவலர் ஆனந்தனிடம் சரண் அடைந்தனர்.

கேலி கிண்டல்
கிராம நிர்வாக அலுவலர் ஆனந்தன் முசிறி போலீசாருக்கு கொடுத்த தகவலின்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று இருவரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர் விசாரணையில் அழகு மணியின் தங்கை மகளை கல்லூரி மாணவர் கௌதம் அவ்வப்போது கேலி கிண்டல் செய்து வந்துள்ளதாக தெரிகிறது,

கௌதம் கொலை
அவ்வாறு கேலி கிண்டல் செய்வதை நிறுத்திக் கொள்ளுமாறு அழகுமணி பலமுறை கௌதமை எச்சரித்தும் கேட்கவில்லையாம் இதனால் ஆத்திரமடைந்த அழகுமணி இவரது நண்பர் ராம்கி என்கின்ற ரகுபதியின் துணையுடன் கௌதமை தந்திரமாகப் பேசி முசிறியில் உள்ள நர்சரி தோப்புக்கு 16ஆம் தேதி அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு இரும்பு பைப்பால் கௌதமின் தலையில் அடித்துள்ளனர் இதில் படுகாயமடைந்த கௌதம் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்து போனார்.

கடைசியில் சரண்
இதையடுத்து இருவரும் தப்பி ஓடி தலைமறைவாகி இருந்தனர்.போலீசார் தீவிரமாக தேடுவதை அறிந்த அழகு மணியும், ராம்கி என்கின்றனர் ரகுபதியும் முசிறி மேற்கு கிராம நிர்வாக அலுவலரிடம் சரண் அடைந்துள்ளனர். கல்லூரி மாணவர் கொலை வழக்கில் இருவர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
Gas bill: சென்னை பெருங்குடி ஹோட்டலில்! இட்லி, வடையுடன் கேஸ் சிலிண்டருக்கும் கட்டண வசூலா? உண்மை என்ன? -
திமுக மாணவரணி செயலாளராக முதல்முறையாக பெண் நிர்வாகி நியமனம்.. ராஜீவ் காந்தி திடீர் மாற்றம் -
அமெரிக்கா போட்ட தப்பு கணக்கு... ஈரான் விரித்த 'மொசைக்' வலை.. யார் இந்த முகமது அலி ஜாஃபரி? -
முகத்திற்கு நேராக மம்தா சொன்ன வார்த்தை! ஆளுநர் ரவியின் சிரிப்பு அப்படியே போச்சு! முதல் நாளே சம்பவம் -
160+ சீட்டில் எடப்பாடி பழனிசாமி யூடர்ன்.. சீனியர் லிஸ்ட்டை கிழித்து.. உளவுத்துறை மாஜி சொன்ன சீக்ரெட் -
2010ல் அதிமுக மாவட்ட பொறுப்பில் இருந்தேன்.. எடப்பாடியிடம் ஜனநாயகம் இருக்காம்.. காளியம்மாள் பேட்டி! -
ரஷ்யாவிற்கு சுக்கிர திசை.. அமெரிக்காவே திறந்து விட்ட புதிய வழி.. பல ஆயிரம் கோடி லாபம் கொட்டுகிறது -
தேமுதிகவால் திமுக கூட்டணியில் மற்ற கட்சிகளுக்கு நெருக்கடியா – ஒரே வார்த்தையில் முடித்த பிரேமலதா -
அமைதி வேண்டாம்! எங்களிடம் நீங்க நினைக்காத அஸ்திரம் உள்ளது! அதிர வைத்த புது சுப்ரீம் லீடரின் வார்னிங் -
தேமுதிக தொகுதிகளை குறைக்க திமுக பேச்சுவார்த்தை.. டென்ஷனில் பிரேமலதா விஜயகாந்த்.. ஸ்டாலினின் கேம்! -
உலகை கண்ட்ரோல் செய்யும் "நிழல்" கப்பல்கள்.. அப்போ நாம் கண்ணால் காண்பது எல்லாமே பொய்யா?












Click it and Unblock the Notifications