திருச்சியில் 6000 குடும்பங்களுக்கு விலையில்லா காய்கறி.. களமிறங்கி அசத்தும் அதிமுக நிர்வாகிகள்!
திருச்சி: திருச்சி மாநகரத்தில் 9வது நாளாக இன்று இல்லம் தோறும் திருச்சி மாநகர் அ.தி.மு.க. மாவட்ட கழக செயலாளர் ப.குமார் விலையில்லா காய்கறி தொகுப்புகளை வழங்கினார்
தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் ஆலோசனையின்படி தமிழகம் முழுக்க அதிமுகவினர் மக்களுக்கு உதவி செய்து வருகிறார்கள். ஊரடங்கு காரணமாக பாதிக்கப்பட்டு இருக்கும் மக்களுக்கு உதவி வருகிறார்கள்.

அதன்படி திருச்சி மாநகரத்தில் 9வது நாளாக இன்று இல்லம் தோறும் திருச்சி மாநகர் அ.தி.மு.க. மாவட்ட கழக செயலாளர் ப.குமார் விலையில்லா காய்கறி தொகுப்புகளை வழங்கினார்திருச்சி பொன்மலை பகுதி கழகத்திற்கு உட்பட சங்கிலியாண்டபுரம் வள்ளுவர் நகர் அண்ணா நகர் உள்ளிட்ட தெருக்களில் வழங்கப்பட்டது.
தொடர்ந்து இன்று 9வது நாளாக 44வது வட்டம் கொடுப்பாபள்ளம் புதுத்தெரு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இல்லம் தோறும் விலையில்லா காய்கறி தொகுப்புகளை திருச்சி மாநகர் மாவட்ட கழக செயலாளர் ப.குமார் பொதுமக்களுக்கு வழங்கினார்.
திருச்சி மாநகரத்தில் மாநகர மாவட்ட அ.தி.மு.க. சார்பில் 6 ஆயிரம் குடும்பங்களுக்கு விலையில்லா காய்கறி வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிகழ்ச்சியில் பொன்மலை பகுதி செயலாளர் எம்.பாலசுப்ரமணியம் மற்றும் கழக நிர்வாகிகள் உடன் இருந்தார்கள்.
மேலும் திருச்சி மேற்கு, திருவெறும்பூர் சட்டப்பேரவை தொகுதிகளுக்கு உட்பட்ட பகுதிகளிலுள்ள அபிஷேகபுரம் கோட்ட அலுவலகம் அருகில் உள்ள புத்தூர், தென்னூர் உழவர் சந்தை, உறையூர் சாலை ரோடு, திருச்சி ஜங்சன் ராக்கின்ஸ் சாலை, கல்கண்டார்கோட்டை,னா அரியமங்கலம் ஜெகநாதபுரம் ஆகிய 6 இடங்களிலுள்ள அம்மா உணவகங்களில், வரும் மே 3-ஆம் தேதி வரை காலை, மதியம், இரவு என மூன்று வேளைகளும் இலவசமாக உணவு வழங்குவதற்கான செலவினை திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக ஏற்றுக்கொண்டுள்ளது.












Click it and Unblock the Notifications