திருச்சிராப்பள்ளி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

காலணிகளை வைத்து டாஸ்மாக்கில் இடம் பிடித்த குடிகாரர்கள்.. திருச்சியில் காலையிலேயே கூடிய செம கூட்டம்

திருச்சி மாநகரில் மது வாங்குவதற்காக மதுக் கடைகளில் சமூக இடைவெளிக்காக அடையாளமிடப்பட்டிருந்த வட்டங்களில் மதுப்பிரியர்கள் தங்களது காலணிகளை வைத்து இடம் பிடித்து காத்திருந்த சம்பவம் வைரலாகி உள்ளது.

Google Oneindia Tamil News

திருச்சி: திருச்சி மாநகரில் மது வாங்குவதற்காக மதுக் கடைகளில் சமூக இடைவெளிக்காக அடையாளமிடப்பட்டிருந்த வட்டங்களில் மதுப்பிரியர்கள் தங்களது காலணிகளை வைத்து இடம் பிடித்து காத்திருந்த சம்பவம் வைரலாகி உள்ளது.

Recommended Video

    முதல் 2 TASMAC Token-களை தட்டிச்சென்ற 2 Spain குடிமகன்கள்

    கொரோனா பொதுமுடக்கம் காரணமாக 40 நாள்களுக்கு மேலாக மதுக்கடைகள் திறக்கப்படவில்லை. இந்தநிலையில், இன்று முதல் மது விற்பனை நடைபெறும் என அரசு அறிவித்திருந்தது. இதையடுத்து தமிழகம் முழுக்க சென்னை மற்றும் கண்டெயின்மெண்ட் அல்லாத பகுதிகளில் மதுக்கடைகள் திறக்கப்பட்டது.

    Coronavirus: Trichy people reserved place in Tasmac in the morning itself

    திருச்சி மாவட்டத்தில் மாநகரப் பகுதியில் 63 கடைகள் ஊரகப் பகுதியில் 100 கடைகள் என மொத்தம் 163 கடைகள் மட்டும் திறக்க உத்தரவிடப்பட்டுள்ளது. 20 கடைகள் கரோனா கட்டுப்பாடுகளுக்குள் வருவதால் அந்த கடைகளை திறக்க அனுமதியில்லை.

    இந்தநிலையில், இன்று அதிகாலையே மதுக்கடைகளை நோக்கி மதுப் பிரியர்கள் படையெடுக்கத் தொடங்கினர். கடை திறப்பதற்கு முன்பே கடைக்காக லைனில் நிற்க தொடங்கினார்கள். திருச்சி மாநகரில் புத்தூர் நான்குசாலை பகுதியில் உள்ள கடைகளில் சமூக இடைவெளிக்காக அடையாளமிடப்பட்டிருந்த வட்டங்களில் மதுப்பிரியர்கள் தங்களது காலணிகளை வைத்து இடம் பிடித்து காத்திருந்தனர்.

    Coronavirus: Trichy people reserved place in Tasmac in the morning itself

    மேலும், மத்திய பேருந்துநிலையப் பகுதியில் இன்று காலை 8.30 மணிக்கே டோக்கன் வழங்கும் பணி தொடங்கியது. ராமகிருஷ்ண பாலம் மற்றும் ஒரு சில கடைகளில் வாழைத் தோரணம், பூ மாலைகள் அணிவித்து கடைகளை திறக்க ஏற்பாடு செய்திருந்தனர். காலையில் இருந்து குடிமக்கள் பலர் டோக்கன் வாங்குவதற்காக லைனில் காத்து இருந்தனர்.

    கருப்புச் சின்னத்துடன் திமுக தோழமைக் கட்சி தலைவர்கள் போராட்டம்... அரசுக்கு எதிராக முழக்கம்கருப்புச் சின்னத்துடன் திமுக தோழமைக் கட்சி தலைவர்கள் போராட்டம்... அரசுக்கு எதிராக முழக்கம்

    கூட்டத்தைக் கட்டுப்படுத்தவும், சமூக இடைவெளியை கண்காணிக்கவும் காவல்துறை, ஊர்க்காவல்படை, தன்னார்வலர்கள் கொண்ட குழுவினரும் மதுக்கடைகள் முன்பாக குவிக்கப்பட்டுள்ளனர்.

    English summary
    Coronavirus: Trichy people reserved place in Tasmac in the morning itself today.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X