சிவாஜி இருந்திருந்தால் பிரதமர் மோடிக்கு செவாலியே பட்டத்தை கொடுத்திருப்பார் - சிபிஐ முத்தரசன் பேட்டி

Subscribe to Oneindia Tamil

திருச்சி : தமிழகத்தில் மதவாத அரசியல் வெற்றி பெறாது எனவும், தமிழக அரசு வெளிப்படையாகவும் நேர்மையாகவும் செயல்பட்டு வருவதால் நல்லரசை அங்கீகரிக்கும் வகையில் உள்ளாட்சி தேர்தலில் மக்கள் திமுக கூட்டணிக்கு வாக்களிப்பார்கள் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் கூறியுள்ளார்.

Recommended Video

    சிவாஜி இருந்திருந்தால் பிரதமர் மோடிக்கு செவாலியர் பட்டத்தை கொடுத்திருப்பார் - சிபிஐ முத்தரசன் பேட்டி

    இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில மற்றும் மாவட்டச் செயலாளர் கூட்டம் மாநிலச் செயலாளர் முத்தரசன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் வருகின்ற உள்ளாட்சித் தேர்தல் குறித்து ஆலோசனை நடைபெற்றது.

    இக்கூட்டத்தில் திருச்சி மாவட்ட செயலாளர் திராவிடமணி நிர்வாகிகள் இந்திரஜித், சுரேஷ், சிவா, இப்ராஹிம் உட்பட மாநில, மாவட்ட நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர். இதனை தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மாநிலச் செயலாளர் முத்தரசன், தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற தமிழக முதலமைச்சர பல முயற்சிகளை எடுத்து வருகிறார் என்றார்.

    சிபிஐ முத்தரசன்

    சிபிஐ முத்தரசன்

    தமிழக அரசு வெளிப்படையாகவும் நேர்மையாகவும் செயல்பட்டு வருகிறது, நல்லரசை அங்கீகரிக்கும் வகையில் உள்ளாட்சி தேர்தலில் மக்கள் தி.மு.க கூட்டணிக்கு வாக்களிப்பார்கள் எனவும், குடியரசு தின விழாவில் தமிழ்நாடு ஊர்தி, மேற்கு வங்க ஊர்தி, கேரளா ஊர்தி அனுமதிக்கப்படாதது கண்டிக்கத்தக்கது எனக் கூறிய முத்தரசன், மேற்கு வங்க ஊர்த்தியில் சுபாஷ் சந்திரபோஸ் உருவம் இருந்ததை அங்கீகரிக்காத மோடி டெல்லியில் அவர் பிறந்த நாளின் போது அவருக்கு சிலை அமைக்கும் நிகழ்ச்சியில் பணிவாக பேசினார் எனவும், சிவாஜி கணேசன் உயிரோடு இருந்திருந்தால் அவர் வாங்கிய செவாலியர் பட்டத்தை திருப்பிக் கொடுத்து மோடிக்கு வழங்கி சொல்லியிருப்பார் எனக் கூறியுள்ளார்.

    பாசிச மத்திய அரசு

    பாசிச மத்திய அரசு

    மத்திய அரசின் அமைச்சர்கள் பல்வேறு ரவுடித்தனங்களில் ஈடுபட்டு வருகிறார்கள், மத்திய அரசு சர்வாதிகார பாஸிச அரசாக இருப்பது மீண்டும் மீண்டும் நிரூபணமாகிறது எனவும், ஒன்றிய அரசின் பல்வேறு மக்கள் விரோத திட்டங்களை கண்டித்து பிப்ரவரி 23, 24 ஆகிய தேதிகளில் அனைத்து தொழிற்சங்கங்களும் இணைந்து நாடு தழுவிய போராட்டங்களை நடத்த உள்ளார்கள் எனவும், அதற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி முழு ஆதரவளிக்கும் எனக் கூறிய முத்தரசன், ஒகேனக்கல் 2 வது கூட்டு குடிநீர் திட்டத்தை கர்நாடக அரசு அனுமதிக்க மாட்டோம் என கூறுவது மனிததன்மையற்றது எனவும், கேனக்கல் கூட்டு குடிநீர் திட்ட விவகாரத்தில் அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் ஒ.பன்னீர் செல்வம் அரசுக்கு ஆதரவாக இருப்போம் என கூறியிருப்பது வரவேற்கத்தக்கது என்றார்.

    பாகுபாடின்றி நடவடிக்கை

    பாகுபாடின்றி நடவடிக்கை

    இந்த பிரச்சினை மட்டுமல்ல அனைத்து பிரச்சனைகளையும் கட்சி பாகுபாடின்றி அனைவரும் இணைந்து செயல்பட்டால் தமிழ்நாட்டின் உரிமைகளை பாதுகாக்கலாம் எனவும், தமிழக மீனவர்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை தொடர்ந்து நீடித்து வருகிறது, தமிழக மீனவர்களின் படகுகளை இலங்கை அரசு பறிமுதல் செய்து அதை ஏலம் விடப்போகிறோம் என அறிவித்துள்ளது எனப் பேசிய முத்தரசன், இலங்கைக்கு நிதி உதவிகள் அளிக்கும் இந்திய அரசு மீனவர்கள் விவகாரம் தொடர்பாக அவர்களை கண்டிக்க மறுக்கிறார்கள் எனவும், சொந்த நாட்டு மக்களை பாதுகாக்க வக்கற்ற அரசாக மோடி அரசு இருக்கிறது என கடுமையாக சாடினார்.

    குறுக்கே பாஜக

    குறுக்கே பாஜக

    உள்ளாட்சி தேர்தலில் எத்தனை இடங்களில் போட்டியிடுவது என்பது குறித்து தி.மு.கவுடன் சுமூகமாக பேசி முடிவெடுப்போம் எனப் பேசிய அவர், தஞ்சையில் பள்ளி மாணவி தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் உறுதிப்படாத செய்தியை வைத்து கொண்டு அரசியல் ஆதாயம் தேட பா.ஜ.க முயற்சி செய்கிறது எனவும், குறுக்கு வழியில் அவர்கள் தங்கள் கட்சியை தமிழகத்தில் வளர செய்ய முயற்சி செய்து வருகிறார்கள் எனவும்,

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+