அதிமுக “பாலிசி”.. தயாநிதிமாறன் பேச்சால் ஒரே சிரிப்பு! ஒரே நாடு, ஒரே தேர்தல், ஒரே தோல்வியாமே
திருச்சி: ஒரே நாடு, ஒரே தோ்தல் தொடா்பாக ஆராய அமைக்கப்பட்ட குழுவில் தென்னிந்தியப் பிரதிநிதிகள் புறக்கணிக்கப்பட்டு உள்ளதாக திமுக எம்பி தயாநிதி மாறன் குற்றம்சாட்டியுள்ளார்.
மறைந்த முதலமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு திருச்சி தெற்கு மாவட்ட திமுகவின் விளையாட்டு மேம்பாட்டு அணி சாா்பில் ஜமால் முகமது கல்லூரியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மாநில கைப்பந்துப் போட்டியை திமுக எம்பி தயாநிதி மாறன் தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் அமைச்சா்கள் கே.என். நேரு, அன்பில் மகேஸ் பொய்யாமொழி, சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜ், திமுக மாநகரச் செயலா் மு மதிவாணன், விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளா்கள் ஏ.ஜே. சாலமன், கே. லோகநாதன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
லீக் முறையில் நடைபெற்ற போட்டியில், ஆண்கள் பிரிவில் ஜமால் முகமது கல்லூரி அணி முதலிடமும், தமிழ்நாடு காவல் துறை அணி 2 ஆம் இடத்தையும் பிடித்தது. பெண்கள் பிரிவில் தமிழ்நாடு காவல் துறை அணி முதலிடமும், ஜமால் முகமது கல்லூரி அணி 2 வது இடத்தையும் பிடித்தன. வெற்றிபெற்ற அணியினருக்கு பரிசுகள் மற்றும் கோப்பைகளை அமைச்சா்கள் வழங்கிப் பாராட்டினார்கள்.
நிகழ்ச்சி முடிந்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தயாநிதி மாறன், "ஒரே நாடு- ஒரே தோ்தல் குறித்து ஆய்வு செய்ய அமைக்கப்பட்டுள்ள குழுவில் தென்னிந்தியாவை சோ்ந்த எந்த எம்பிக்களும் இடம்பெறவில்லை. அதேபோல, தோ்தல் ஆணைய அதிகாரிகள் யாரும் இல்லை.
முதல் முறையாக முன்னாள் ஜனாதிபதியை குழுவின் தலைவராக நியமித்துள்ளாா்கள். அது ஏன் எனத் தெரியவில்லை. நரேந்திர மோடியின் கூட்டணியில் சி.பி.ஐ, வருமான வரித்துறை, அமலாக்கத்துறையினா் தான் இருக்கிறாா்கள். ஆனால், இந்தியா கூட்டணி என்பது மக்கள் கூட்டணி. அதில் மக்களுக்கான தலைவா்கள் உள்ளனா்.
மக்களவைத் தோ்தல், சட்டப் பேரவைத் தோ்தல், உள்ளாட்சி தோ்தல் ஆகிய மூன்றிலும் அடுத்தடுத்து தோல்வி கிடைப்பதால் அத்தோ்தல்களில் ஒரே முறை தோல்வியடைந்து விடலாம் என்பதற்கே ஒரே நாடு- ஒரே தோ்தலை அதிமுக தற்போது ஆதரிக்கிறது. சிஏஜி அறிக்கையில் வெளிச்சத்துக்கு வந்துள்ள மிகப்பெரிய ஊழலை மூடி மறைக்கப் பாா்க்கிறாா்கள்.
அதேபோல அதானி விவகாரம், பெரு நிறுவனங்களின் தலையீடு உள்ளிட்ட பிரச்னைகளைத் திசைதிருப்ப தேவையற்ற சா்ச்சைகளை உருவாக்குவதுதான் பிரதமா் மோடியின் வேலை. 2024 இல் இந்தியா கூட்டணி வெற்றி பெற்றவுடன் நீட் தோ்வுக்கு விலக்கு கொண்டு வருவோம்." என்று அவர் கூறினார்.
-
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
எடப்பாடி பழனிசாமின்னா சும்மாவா.. வீட்டுக்குள் போன 3 அரசியல்வாதிகள்.. ஒரே நொடியில் ஆடிப்போன வேலுமணி -
மகளிருக்கு ரூ.2,500, விடியல் பயணம் திட்டம் எப்போது அமலாகும்? அமைச்சர் செங்கோட்டையன் கொடுத்த பதில் -
திருச்சி திருவானைக்காவல் கோவில் பிரசாதம் தயாரிப்பு தேதி குறித்த மீம்ஸ்.. அமைச்சர் ரமேஷ் விளக்கம்












Click it and Unblock the Notifications