திருச்சிராப்பள்ளி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அமைச்சர் அன்பில் மகேஷ்க்கு கொலை மிரட்டல்.. முன்னாள் திமுக ஒன்றிய செயலாளர் கைது

Google Oneindia Tamil News

திருச்சி: திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் சட்டமன்ற உறுப்பினரும் பள்ளிக்கல்வித் துறை அமைச்சருமான அன்பில்மகேஷ் பொய்யாமொழிக்கு முன்னாள் திமுக ஒன்றிய செயலாளர் நவல்பட்டு விஜி என்பவர் கொலை மிரட்டல் விடுத்ததாக கைது செய்யப்பட்டார்.

திருச்சி மாவட்டம் திமுகவின் கோட்டையாக உள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் திமுக மாவட்டத்தில் உள்ள 9 இடங்களிலும் திமுகவே வென்றது.

இந்நிலையில் திருவெறும்பூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற அன்பில் மகேஷ் பொய்யாமொழி. திருச்சி மேற்கில் போட்டியிட்டு வெற்றி பெற்ற கே.என்.நேரு ஆகியோர் அமைச்சர்களாகினர்.

நர்சரி பள்ளிகள் திறப்பு குறித்த அறிவிப்பு தவறானது.. அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவிப்பு.. விளக்கம் நர்சரி பள்ளிகள் திறப்பு குறித்த அறிவிப்பு தவறானது.. அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவிப்பு.. விளக்கம்

அன்பில் மகேஷ்

அன்பில் மகேஷ்

திருவெறும்பூர் எம்எல்ஏ அன்பில் மகேஷ் பொய்யாமொழி பள்ளிக்கல்வித் துறை அமைச்சரானார். இவருக்கும் நவல்பட்டு பகுதியைச் சேர்ந்த திருவரம்பூர் முன்னாள் ஒன்றிய திமுக செயலாளர் நவல்பட்டு விஜிக்கும் இடையே பிரச்சனை வெடித்தது, இதை தொடர்ந்து நவல்பட்டு விஜி கட்சியின் அடிப்படை உறுப்பினர் மற்றும் ஒன்றிய செயலாளர் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டார்.

போலீசில் புகார்

போலீசில் புகார்

இதனால் நவல்பட்டு விஜி அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியை அச்சுறுத்தும் விதமாக வாட்ஸ்அப் மற்றும் ஃபேஸ்புக் வழியாக கொலை மிரட்டல் விட்டதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக திமுகவைச் சேர்ந்த மாரியப்பன் என்பவர் நவல்பட்டு விஜி மீது நவல்பட்டு காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

திடீர் கைது

திடீர் கைது

இந்த வழக்கில் தனக்கு முன்ஜாமீன் வழங்க வேண்டும் என்று கோரி சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் நவல்பட்டு விஜி அணுகினார். இந்த வழக்கு தொடர்பான முன்ஜாமீன் மீதான மனு நிலுவையில் உள்ள நிலையில் சனிக்கிழமை நவல்பட்டு விஜியை காவல்துறையினர் திடீரென்று கைது செய்தனர். இதனிடையே நவல்பட்டு விஜி திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

அரசியல்

அரசியல்

அன்பில் மகேஷை முகநூலில் தரக்குறைவாக விமர்சித்த குற்றச்சாட்டின் பேரில் திருவெறும்பூர் ஒன்றிய திமுக செயலாளராக இருந்த நவல்பட்டு விஜி கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். கடந்த சட்டசபை தேர்தலில் போது மகேஷுக்கு எதிராக வீடுவிடாக துண்டறிக்கை கொடுப்பேன் என்றொல்லாம் அப்போது விஜி திரும்பியதாக கூறப்படுகிறது. இந்த சூழலில் கொலை மிரட்டல் புகாரில் விஜி கைதாகி உள்ளார்.

English summary
Former DMK Union Secretary Nawalpattu Viji arrested for making death threats to Minister Anbil Mahesh
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X