அம்மனை பார்க்க போனால் ஆஸ்பத்திரிக்கு தான் போகனுமோ? சமயபுரத்தில் ’லொள் லொள்’ தொல்லை! பதறும் பக்தர்கள்
திருச்சி: புகழ்பெற்ற திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு நாளுக்கு நாள் பக்தர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்நிலையில் பக்தர்கள் தரிசனத்துக்கு செல்லும் வரிசையில் நாய்கள் தொல்லை அதிகமாக இருப்பதாக கூறுகின்றனர் பக்தர்கள். இதனால் தரிசனத்துக்கு செல்லும் போது கூட பயத்துடனே செல்ல வேண்டிய நிலை இருப்பதாக புலம்புகின்றனர்.
தமிழகத்தில் உள்ள சக்தி தலங்களில் முதன்மையானதாக சமயபுரம் மாரியம்மன் கோவில் உள்ளது. திருச்சி காவிரி கரை ஓரமாக உள்ள இந்த கோவில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இந்த கோவிலுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வெளி மாநிலங்களில் இருந்தும் அனைத்து நாட்களிலும் பக்தர்கள் வருகின்றனர்.

மேலும் ஆடி மாதம் அம்மனுக்கு உகந்த மாதம் என்பதால் பக்தர்கள் எண்ணிக்கை இலட்சக்கணக்கை தொடும். மேலும் குழந்தைகளின் உடல் நலன், குழந்தை வரம் வேண்டி வரும் பக்தர்கள் தங்கள் வேண்டுதல் நிறைவேறினால் சமயபுரம் மாரியம்மன் கோவிலில் தங்கள் நேர்த்திக் கடனை செலுத்துவது வழக்கம்.
இந்த நிலையில் தொடர் விடுமுறை மற்றும் மாசி மாதத்தின் காரணமாக அதிகப்படியாக சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு வந்து சென்று வருகின்றனர். இந்த நிலையில் தற்போது திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்திருப்பதை பயன்படுத்தியும் வெளி மாநில சபரிமலை பக்தர்களை குறி வைத்தும் இடைத்தரகர்களின் தலையீடு அதிகரித்துள்ளதாக பக்தர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

சமயபுரம் மாரியம்மன் கோவில் மண்டபம் மற்றும் சுவாமி தரிசனத்திற்காக காத்திருக்கும் பக்தர்களை சுவாமி தரிசனத்திற்கு நேரடியாக அழைத்துச் செல்வதாக கூறி அவர்களிடம் பணம் பறிப்பதாக குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது. குறிப்பாக வெளி மாநில ஐயப்ப பக்தர்கள் தான் இவர்களது குறி. சுவாமி தரிசனத்திற்கு ஒரு நபருக்கு 200 ரூபாய் என பேரம் பேசி தொல்லை செய்வதாக குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது,
மேலும் இடைத்தரகர்களுக்கு கோவில் காவலர்கள், அதிகாரிகள் உடந்தையாக இருப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஏற்கனவே இது தொடர்பாக கோவில் நிர்வாகத்திடம் பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை என சொல்லப்படுகிறது. இது ஒரு புறம் இருக்க தரிசனத்திற்காக பக்தர்கள் செல்லும் வரிசை பாதையில் குழந்தைகள் பாதுகாப்பு கேள்விக்குறியாகி இருப்பதாக குற்றம் சாட்டுகின்றனர் பக்தர்கள்.

தற்போது அனைத்து நாட்களிலும் சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு பக்தர்கள் வருகை அதிகரித்துள்ள நிலையில் அன்னதான மண்டபத்தின் அருகே இருந்து பக்தர்கள் தனி வழியில் சுவாமி தரிசனம் செய்ய அனுப்பப்படுகின்றனர். திருப்பதியைப் போல தடுப்புகள் அமைத்து சுமார் ஒரு மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகின்றனர்.
பக்தர்கள் வசதிக்காக மண்டபங்கள் இரும்பு தடுப்புகள் அமைக்கப்பட்டு நிழல் பகுதியில் அவர்கள் வரிசையில் செல்ல அனுமதிக்கப்படுகிறது. ஆனால் தற்போது பக்தர்கள் காத்திருக்கும் பகுதிகளில் நாய்கள் தொல்லை மிக அதிகமாக இருக்கிறது. வெயில் காரணமாக நாய்கள் அனைத்தும் பக்தர்கள் காத்திருக்கும் பகுதிகளில் ஆங்காங்கே தூங்கி வருகின்றன. சில நேரங்களில் அவற்றுக்குள்ளாக சண்டை வந்து பக்தர்களை தாக்கும் சம்பவங்களும் அதிகரித்து வருகிறது.

ஆனால் கோவிலை தவிர பிற பகுதிகளில் முற்றிலுமாக காவலாளிகள் இல்லாததால் பக்தர்கள் நாய்க்கடி தொல்லையால் அவதிப்படும் சூழல் உருவாகியுள்ளது. 100 ரூபாய் சிறப்பு தரிசனத்திற்கு செல்லும் பக்தர்களுக்கு மட்டும் காவலாளிகள் 'சிறப்பு கவனிப்பு' தரும் நிலையில் இலவச தரிசனத்திற்கு செல்லும் பக்தர்கள் நாய்கள் பயத்துடனே செல்லும் நிலை உள்ளது.
அம்மனை பார்க்க சென்றால் ஆஸ்பத்திரிக்கு தான் செல்ல வேண்டும் என்ற நிலைமை இருப்பதாகவும் புலம்புகின்றனர். எனவே கோவிலின் அனைத்து பகுதிகளிலும் காவலாளிகளை பாதுகாப்புக்கு நிறுத்த வேண்டும், கோவில் வளாகத்தில் சுற்றி தெரியும் நாய்களை அப்புறப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்திருக்கிறது.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications