தினமலர் கோபால்ஜியின் தாயார் சுப்புலட்சுமி அம்மாள் மறைவு.. முதல்வர் பழனிச்சாமி, ஸ்டாலின் இரங்கல்
திருச்சி: திருச்சியில் தினமலா் நாளிதழ் பங்குதாரா் மறைந்த ஆா். ராகவனின் மனைவி சுப்புலட்சுமி அம்மாள் காலமானார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, மு.க. ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்தனர்.
தினமலா் நாளிதழ் பங்குதாரா் மறைந்த ஆா். ராகவனின் மனைவி சுப்புலட்சுமி அம்மாள் ((77) திருச்சியில் வியாழக்கிழமை காலமானாா்.மறைந்த அம்மையாரின் உடலுக்கு, உறவினர்கள், நண்பர்கள்,பிரமுகர்கள் அஞ்சலி செலுத்தினார்கள்.

கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவிலில் சுப்பிரமணி அய்யர் - வேங்கடலட்சுமி தம்பதிக்கு 1943ல் பிறந்தவர் சுப்புலட்சுமி. அவருக்கு நான்கு சகோதரர்கள், மூன்று சகோதரிகள். தினமலர் பங்குதாரர் ஆர். ராகவ னை, 1964ல் மணந்தார். அவர்களுக்கு இரண்டு மகன்கள். திருச்சியில் வசித்து வந்த அவர், நேற்று மாலை இயற்கை எய்தினார்.
அவருக்கு, தினமலா் நாளிதழின் திருச்சி, வேலூா் பதிப்புகளின் ஆசிரியா் ஆா். ராமசுப்பு, வெளியீட்டாளா் ஆா். ஆா். கோபால்ஜி ஆகிய இரு மகன்கள் உள்ளனா். இந்நிலையில் சுப்புலட்சுமி அம்மாள் மறைவுக்கு முதல்வர் பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.
முதல்வர் வெளியிட்ட அறிக்கையில் "தினமலர் திருச்சி பதிப்பு ஆசிரியர் ஆர்.ராமசுப்பு, வெளியீட்டாளர் ஆர்ஆர். கோபால்ஜி ஆகியோரின் தாயார் சுப்புலட்சுமி காலமானார் என்ற செய்தி அறிந்து வேதனை அடைந்தேன். சுப்புலட்சுமி, தன் கணவர் ராகவன் வளர்ச்சிக்கு உற்ற துணையாகவும், பக்கபலமாகவும், மகன்களுக்கு நல்ல தாயாகவும் இருந்தவர் என்ற பெருமைக்குரியவர்.அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், தினமலர் குழுமத்திற்கும், என் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்" இவ்வாறு பழனிசாமி தெரிவித்துள்ளார்.
துணை முதல்வர் பன்னீர்செல்வம் வெளியிட்ட அறிக்கையில், 'சுப்புலட்சுமி மறைவு செய்தி கேட்டு மிகவும் வருத்தம் அடைந்தேன்' என தெரிவித்துள்ளார்.
தி.மு.க., தலைவர் ஸ்டாலின் அறிக்கையில், 'தினமலர்' பங்குதாரர், மறைந்த ஆர்.ராகவனின் மனைவியும், 'தினமலர்' திருச்சி, வேலூர் பதிப்பு ஆசிரியர், டாக்டர் ஆர்.ராமசுப்பு, வெளியீட்டாளர் ஆர்.ஆர்.கோபால்ஜி ஆகியோரின் தாயாருமான, ஆர்.சுப்புலட்சுமி காலமானார் என்ற செய்தி கேட்டு வேதனையுற்றேன். பத்திரிகை சுதந்திரத்தை பாதுகாக்கும்பணியில் ஈடுபட்டுள்ள, 'தினமலர்' பத்திரிகையின் வளர்ச்சிக்குத் துணை நின்ற, ஆர்.சுப்புலட்சுமியை இழந்து தவிக்கும், ராமசுப்பு, கோபால்ஜி ஆகியோருக்கு, என் இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்து கொள்கிறேன் இவ்வாறு, ஸ்டாலின் கூறியுள்ளார்.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அன்னைக்கே சொன்னாரே டிடிவி தினகரன்! நெருங்கும் கிளைமாக்ஸ்? பாஜக ஸ்கெட்ச்? கொத்து கொத்தாக ஓடும் தலைகள்












Click it and Unblock the Notifications