14 ஆண்டுகளுக்கு பிறகு நடந்த நல்ல விஷயம்; இழந்த பெருமையை மீண்டும் மீட்டெடுத்த திருச்சி!
திருச்சி: 14 ஆண்டுகளுக்கு பிறகு திருச்சி -குவைத் இடையே நேரடி விமானச் சேவையை ஏர் இந்தியா நிறுவனம் தொடங்கியுள்ளது.
வாரத்தில் திங்கட்கிழமை, புதன்கிழமை, வெள்ளிக்கிழமை, சனிக்கிழமை ஆகிய 4 நாட்களில் இந்த சேவையை வழங்குகிறது ஏர் இந்தியா நிறுவனம்.

குவைத் தமிழ் இஸ்லாமிய சங்கம் உட்பட தமிழகத்தின் பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்கள் எடுத்த கடும் முயற்சியின் காரணமாக நிறுத்தப்பட்டிருந்த இந்த விமான சேவை 14 ஆண்டுகளுக்கு பிறகு மீன்டும் தொடங்கப்பட்டிருக்கிறது.
தமிழகத்தை சேர்ந்த ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் குவைத்தில் பணி நிமித்தமாக வசித்து வருகின்றனர். இதுமட்டுமல்லாமல் தொழில்முறை பயணமாக தமிழகத்தை சேர்ந்த பல தொழிலதிபர்களும் குறுகிய நாள் பயணமாக குவைத்திற்கு சென்று வருகின்றனர்.
இந்நிலையில் தமிழகத்தில் இருந்து குவைத்திற்கு இயக்கப்படும் விமானங்கள் எண்ணிக்கை அதிகரிக்க வேண்டும், திருச்சியிலிருந்து மீண்டும் நேரடி விமான சேவை தொடங்கப்பட வேண்டும் என குவைத் இஸ்லாமிய தமிழ் சங்கத்தினர் முயற்சித்து வந்தனர்.
அந்த வகையில் இது தொடர்பான கோரிக்கைகளை நாடாளுமன்ற உறுப்பினர்கள் திருச்சி சிவா, திருநாவுக்கரசர், எஸ்.எஸ்.பழனிமாணிக்கம், திருமாவளவன், சின்ராஜ், பாரிவேந்தர், முதலமைச்சரின் தனிப்பிரிவு உள்ளிட்ட பலரிடமும் அவர்கள் தொடர்ச்சியாக முன் வைத்து வந்தனர். இதுமட்டுமல்லாமல் மத்திய விமான போக்குவரத்துத் துறை அமைச்சகத்துக்கும் தொடர்ந்து கோரிக்கை வைக்கப்பட்டு வந்தது.
இதனிடையே நீண்ட காலமாக இந்த சேவை இழுபறியாகவே இருந்து வந்த நிலையில், இப்போது ஒரு வழியாக அதற்கு தீர்வு கிடைத்துள்ளது. இதனை தங்களது இடைவிடாத முயற்சிக்கு கிடைத்த வெற்றியாக கருதுகிறது இதற்காக நடவடிக்கை மேற்கொண்ட குவைத் தமிழ் இஸ்லாமிய அமைப்பு.
இந்நிலையில் இந்த மாதம் முதல் குவைத் -திருச்சி இடையே நேரடியாக விமானம் இயக்கப்படுகிறது. மொத்தம் 9 மணி நேரப் பயணத்தில் திருச்சியில் இருந்து குவைத்துக்கும் குவைத்தில் இருந்து திருச்சிக்கும் இனி பறக்க முடியும்.
திருச்சியிலிருந்து குவைத்திற்கு நேரடி விமானச் சேவை தொடங்கப்பட்டுள்ளதன் மூலம் தென் மாவட்டம் மற்றும் மத்திய மாவட்டங்களை சேர்ந்தவர்கள் மிகுந்த பயனடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகி
றது.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications