“நேருவுக்கு ஸ்கெட்ச்? இதுதான் BJP! நான் அப்படிப்பட்ட ஆள் இல்லை!” சத்தியப்பிரமாணம் செய்த கே.என்.நேரு
திருச்சி: "நான் எந்தத் தவறும் செய்யவில்லை. ஆனால் வேண்டுமென்றே மத்திய அரசு நேருவை அடித்தால், இந்தப் பகுதியில் திமுகவை அடிக்கலாம் என்ற நோக்கத்தோடு வேலையை செய்துகொண்டிருக்கிறார்கள்" என்று, அமைச்சர் கே.என்.நேரு பாஜகவை குற்றம்சாட்டியுள்ளார்.
தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில், திமுக மூத்த அமைச்சர் கே.என்.நேருவுக்கு எதிரான குற்றச்சாட்டுகளை அமலாக்கத்துறை தீவிரப்படுத்தியிருக்கிறது. அமலாக்கத்துறை ஆதாரங்களோடு கடிதம் எழுதியும் கூட, அரசு நடவடிக்கை எடுக்காமல் வேடிக்கை பார்த்து வருகிறது என்று பாஜக தலைவர்கள், கே.என்.நேருவுக்கு எதிராக களத்தில் குதித்துள்ளனர்.

இப்படி இருக்கையில், "நான் எந்தத் தவறும் செய்யவில்லை" என நேரு கூறியிருக்கிறார். திருச்சியில் தனது பிறந்தநாள் விழாவில் பங்கேற்று நேரு பேசியதாவது, "என் மீது மத்திய அரசு வழக்கு ஒன்றை தொடுத்தது. இந்த வழக்கில் நீதிமன்றத்தில் நாங்கள் வெற்றியடைந்துவிட்டோம். ஆனாலும், இந்த விவகாரங்களை மீண்டும் விசாரிக்க வேண்டும் என்று சொல்லி தமிழ்நாடு அரசுக்கு கடிதம் அனுப்பியிருக்கிறார்கள். இந்த விவகாரங்கள் நீதிமன்றத்தில் இருப்பதால் வெளிப்படையாக பேச முடியாது. இருப்பினும் உங்களிடம் சொல்கிறேன்.
நான் எந்தத் தவறும் செய்யவில்லை. ஆனால் வேண்டுமென்றே மத்திய அரசு நேருவை அடித்தால், இந்தப் பகுதியில் திமுகவை அடிக்கலாம் என்ற நோக்கத்தோடு வேலையை செய்துகொண்டிருக்கிறார்கள். உங்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நான் நிச்சயமாக எந்த தவறும் செய்ய மாட்டேன். இதற்கு முன்னரும் எந்த தவறும் செய்ததில்லை என்கிற உறுதியை தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன்.
இந்த குற்றச்சாட்டு குறித்து எல்லா விவரங்களையும் உங்களிடம் சொல்ல முடியும். ஆனால், வழக்கு விசாரணையில் இருக்கிறது. இந்த விசாரணைக்கு பாதிப்பு ஏற்பட்டு விடக்கூடாது என்பதால் நான் எதையும் சொல்லவில்லை. நான் 5 முறை தேர்தலில் நின்றிருந்தேன். அதில் 3 முறை வெற்றி பெற்றிருக்கிறேன். தோல்வி அடைந்த போதும் சொற்ப வாக்குகள் வித்தியாசத்தில்தான் தோல்வியடைந்தேன். எனவே தொகுதி மக்கள் எப்போதும் போல கழகத்திற்கு ஆதரவளிக்க வேண்டும்" என்று கேட்டுக்கொண்டார்.
-
“திமுக தயவில்தான் தவெக ஆட்சி நடக்கிறது.. நான்தான் வழியனுப்பி வைத்தேன்”.. ஸ்டாலின் ஓபன் டாக்! -
“கொளத்தூரை இழந்தது போல மொத்தத்தையும் இழக்கப்போவது உறுதி”.. ஸ்டாலினை குறி வைத்து தாக்கிய தவெக! -
திமுக சொல்வது பொய்.. தலைமையிடம் சொல்லிவிட்டு தான் தவெகவுடன் சேர்ந்தோம் - உடைத்து பேசிய ப சிதம்பரம் -
பாஜக மட்டுமில்லை.. அண்ணாமலையால் தவெக - திமுக - அதிமுக - நாம் தமிழருக்கு விழும் பெரிய அடி -
Annamalai: பாஜகவில் இருந்து விலகி தனிக்கட்சி ஆரம்பித்தவர்கள்.. அரசியலில் ஜொலித்தார்களா? சறுக்கினரா? -
இரக்கமே காட்டாதீங்க.. கேஸை போடுங்க.. திமுக மாஜி அமைச்சர்களுக்கு விஜய் செக்.. வரிசையாக ஆக்சன் -
சோனம் வாங்சுக் மத்திய கல்வி அமைச்சராக பொறுப்பேற்க வேண்டும்! கரப்பான் பூச்சி ஜனதா கட்சி வலியுறுத்தல்! -
கே.என்.நேரு மீது FIR.. டெல்லிக்கு பந்தை திருப்பிய முதல்வர் விஜய்.. அமலாக்கத்துறை மாஸ்டர் ஆட்டம்? -
அப்படியே ஆர்எஸ்எஸ் ஸ்டைல்.. அரசியல் பயிற்சி மையம் உருவாக்கும் அண்ணாமலை.. இதுதான் பின்னணி! -
"நான் முதலில் தமிழன்.." பாஜகவில் இருந்து விலகிய முதல் நாளே அண்ணாமலை சொன்ன வார்த்தை! நோட் பண்ணுங்க -
சென்னை திரும்பிய அண்ணாமலை.. விமான நிலையத்தில் திரண்டு வந்து ஆதரவாளர்கள் கொடுத்த ‘மாஸ்’ வரவேற்பு! -
அண்ணாமலையின் மூவ்! ஒன்னும் புதுசா இல்லை.. பாஜகவின் இன்னொரு கிளைதான்! கிளம்பும் விமர்சனம்!












Click it and Unblock the Notifications