பொற்காலம்! தமிழ்நாட்டின் டாப் நகரமாக உருவெடுக்கும் திருச்சி! அட சென்னையை ஓவர் டேக் செய்திடும் போலயே
திருச்சி : திருச்சி மாநகராட்சியில் செய்யப்படும் மாற்றங்கள்.. வெளியாகும் அறிவிப்புகள் மக்கள் இடையே கவனம் பெற்று வருகிறது. அதிலும் நேற்று வெளியிடப்பட்ட திருச்சி டைடல் பார்க் புகைப்படங்கள் பெரிய அளவில் கவனம் ஈர்த்து உள்ளன. சென்னையை கிட்டத்தட்ட நெருங்கும் அளவிற்கு திருச்சிக்கு அறிவிப்புகள் வெளியாகி வருகின்றன.
திருச்சியில் மேற்கொள்ளப்படும் திட்டங்களை சமீபத்தில் துணை முதல் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் பார்வையிட்டார். அதன்படி

1. கலைஞர் நூலகம்.
2. அங்குரான் அறிவியல் ஆய்வகம்.
3. ஒருங்கிணைந்த பேருந்து நிலையம்.
4. ஒலிம்பிக் அகாடமி.
5. சிப்காட். ஆகிய திட்டங்களை நேரில் பார்வையிட்டார்.
இது போக பஞ்சப்பூர் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம், திருச்சி எலிவேட்டட் காரிடார் ஆகியவற்றின் கட்டுமானங்களும் இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளன. இந்த 7 அறிவிப்புகள் திருச்சியை அடுத்த கட்டத்தை நோக்கி எடுத்து செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
திருச்சி ஐடி பார்க்: தமிழ்நாட்டில் சென்னை, கோவை, மதுரை உட்பட 10 நகரங்களில் ஐடி பார்க் அமைக்கப்படும் என்று தமிழ்நாடு அரசு சமீபத்தில் தெரிவித்தது. இதற்கான பணிகள் வேகமாக நடந்து வருகின்றன. சமீபத்தில் கூட சேலம், தூத்துக்குடி மற்றும் தஞ்சாவூர் என்று ஒரே நாளில் மூன்று டைடல் பார்க் அமைக்க முதல்வர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். திருச்சியில் இதற்கான பணிகள் தொடங்க உள்ளன.
கல்லணை ஊரில் ஆப்பிள்: இது போக ஆப்பிள் சப்ளையர் ஜபில் திருச்சியில் எலக்ட்ரானிக்ஸ் உற்பத்தி ஆலையை ரூ.2,000 கோடி செலவில் நிறுவ உள்ளது. இந்த திட்டத்தின் மூலம் 5,000 வேலை வாய்ப்புகள் உள்ளதாக மாநில அரசின் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிறுவனம் சர்வதேச அளவில் எலக்ட்ரானிக்ஸ் உற்பத்தி துறையில் முக்கிய உற்பத்தி மற்றும் சேவை நிறுவனம் ஆகும். ஹெச்பி மற்றும் சிஸ்கோ போன்ற முக்கிய நிறுவனங்களின் உபகரணங்களை இந்த நிறுவனம் உற்பத்தி செய்யும். ஆப்பிள் போன் உற்பத்தியிலும், அதன் உபகரண உற்பத்தியிலும் முக்கிய பணிகளை செய்து வருகிறது.
திருச்சி பூங்கா: ஏற்கனவே திருச்சி மாநகராட்சி சார்பில் திருச்சி பஞ்சப்பூரில் டைடல் பூங்கா அமைக்க 14.1 ஏக்கர் நிலம் ஒதுக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
முன்னதாக தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக் கழகம் (டிட்கோ) மற்றும் தமிழ்நாடு எலக்ட்ரானிக் கார்ப்பரேஷன் ஆஃப் தமிழ்நாடு (ELCOT) ஆகியவற்றின் கூட்டு நிறுவனமான டைடல் பார்க் லிமிடெட் நிறுவனத்திடம் ஐடி மற்றும் ஐடி அலுவலகம் கட்டுவதற்காக திருச்சி மாநகராட்சி பஞ்சப்பூரில் 8.9 ஏக்கர் நிலத்தை இறுதி செய்துள்ளது.
இந்த நிலையில்தான் முந்தைய ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டு, பெரிய அலுவலக இடத்துக்கு புதிதாக தற்போது இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் தேர்ந்தெடுக்கப்பட்ட கவுன்சில், டைடல் பூங்காவிடம் நிலத்தை ஒப்படைப்பதற்கு முன் அதன் மதிப்பை மதிப்பீடு செய்ய தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.
திருச்சியில் இத்திட்டத்திற்காக 2023-24 பட்ஜெட்டில் மாநில தொழில் துறையும் ரூ.600 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. பல இட ஆய்வுகளுக்குப் பிறகு, நகர்ப்புற உள்ளாட்சி அமைப்பு, பஞ்சப்பூர் வருவாய் கிராமத்தில் மாநகராட்சியின் 8.9 ஏக்கர் நிலம் திட்டத்திற்கு சாத்தியமானது என்று தெரிவித்தது. இது தற்போது 14.1 ஏக்கராக மாற்றப்பட்டு உள்ளது.
இங்கே கட்டுமான பணிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளன. இன்றுதான் சிங்கப்பூர் நாட்டைச் சேர்ந்த கேப்பிட்டாலாண்ட்(Capitaland) குழுமம் 50,000 தகவல் தொழில்நுட்ப வல்லுநர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் சென்னை பல்லாவரம் ரேடியல் சாலையில் அமைத்துள்ள சர்வதேச தொழில்நுட்ப பூங்காவை (International Tech Park) அமைத்துள்ளது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications