முகப்பில் ஸ்ரீரங்கம் கோயில் வடிவம்! திருச்சி விமான நிலைய புதிய முனையத்தின் சிறப்புகள் என்ன?
திருச்சி: திருச்சி விமான நிலையத்தில் ரூ 1200 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள பிரம்மாண்ட முனையத்தின் புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.
திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் ரூ 1200 கோடியில் புதிய முனையம் அமைக்கும் பணி கடந்த 2019 ஆம் ஆண்டு பிப்ரவரி 10 ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடியால் காணொலி வாயிலாக தொடங்கி வைக்கப்பட்டது.

இந்த பணிகள் 2021 ஆவது ஆண்டு செப்டம்பர் மாதத்திற்குள் முடித்து புதிய முனையத்தை செயல்பாட்டுக்குள் கொண்டு வர முயற்சிக்கப்பட்டது. ஆனால் கொரோனா பரவல் காரணமாக அந்த முனைய கட்டுமான பணிகள் முடிவடையாமல் இருந்தது. இதனால் முனைய கட்டுமான பணிகள் 2021, 2022, 2023 ஆகிய 3 ஆண்டுகள் தள்ளி போனது.
திறப்பு விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு பணிகள் முடிவடையாததால் திறப்பு விழா ஒத்தி வைக்கப்பட்டது. இதையடுத்து கூடுதல் பணியாளர்களை வைத்து கடந்த சில மாதங்களாக இரவு பகல் பாராமல் முனைய கட்டுமான பணிகள் நடந்தன. இதையடுத்து இந்த பணிகள் முடிவடைந்து இறுதி கட்டத்தை எட்டியது.
Sh. Sanjeev Kumar, Chairman-AAI, along with AAI officials, reviewed the progress of works in the new Integrated Passenger terminal building at Trichy International Airport which is gearing up for inauguration soon! @AAI_Official ¦ @aairedsr pic.twitter.com/MNwBGSbgGQ
— TIRUCHIRAPPALLI INTERNATIONAL AIRPORT (@aaiTRZairport) December 26, 2023
திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள முனையத்தை பிரதமர் நரேந்திர மோடி ஜனவரி 2 ஆம் தேதி திறந்து வைக்கிறார். பிரதமர் வருகையையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்படவுள்ளன. இந்த நிலையில் திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் உள்ள புதிய முனையத்தை அமைச்சர் கே.என். நேரு ஆய்வு செய்திருந்தார்.
இந்த புதிய முனையத் திறப்பு விழாவில் முதல்வர் ஸ்டாலின் கலந்து கொள்ளவுள்ளதையும் கே.என். நேரு உறுதிப்படுத்தினார். இந்த புதிய முனையம் 60,723 சதுர மீட்டர் பரப்பளவில் 2 அடுக்குகளை கொண்டது. இதில் ஒரே சமயத்தில் 4 ஆயிரம் சர்வதேச பயணிகள், 1500 உள்நாட்டு பயணிகளை கையாளலாம். இங்கு அரைவலுக்கு 6 வாயில்களும் டிபார்ச்சருக்கு 10 வாயில்களும் அமைக்கப்பட்டுள்ளன.

40 குடியேற்ற பிரிவு மையங்கள், 48 செக் இன் மையங்கள், 3 கஸ்டம்ஸ் மையங்கள், 15 இடங்களில் எக்ஸ்ரே சோதனை உள்ளிட்டவை உள்ளன. காத்திருப்பு அறைகள், லிப்ட்கள், எஸ்கலேட்டர்கள், 1000 கார்களை நிறுத்தும் அளவுக்கு பார்க்கிங் வசதிகள் உள்ளன. இந்த முனையத்தில் தமிழக கலாச்சார பண்பாடு மற்றும் திருவிழாக்களை மையமாக கொண்டு ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன.
ஸ்ரீரங்கம் ராஜகோபுரம் வடிவம் முனையத்தின் முன் பகுதியில் வைக்கப்பட்டுள்ளது. தேர் வடிவம் உள்ளிட்ட ஓவியங்கள் முனையத்தை மேலும் அழகாக்குகின்றன. சுற்றுச்சூழலுக்கு ஏற்றவகையில் இந்த முனையம் அமைக்கப்பட்டுள்ளது. சூரிய சக்தி மூலம் மின்சாரம் தயாரிக்க முனையத்தின் மேலே தகடு அமைக்கப்பட்டுள்ளது. விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு அறையும் கட்டப்பட்டு வருகிறது. வருகைகளில் நுழைவதற்கு ராஜகோபுரம் போன்ற அமைப்பும் உள்ளது.
-
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
மோடியை மடக்கிய ஸ்டாலின்.. எங்களைக் காக்கப் பிரதமர் தயாரா? தேதி வாரியாக பட்டியல் போட்டு விளாசல்! -
ரம்ஜான் நாளில் களத்தில் இறங்கிய பிரதமர் மோடி.. மேற்காசியாவில் திரும்பும் அமைதி! உற்றுநோக்கும் உலகம்! -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு












Click it and Unblock the Notifications