திமுக - அதிமுக இடையேதான் போட்டி.. அழுத்தி சொன்ன இபிஎஸ்! ஆனால் பாஜகவை விமர்சிக்கலயே.. நோட் பண்ணீங்களா
திருச்சி: தமிழ்நாட்டில் மூன்று கூட்டணிகள் இருந்தாலும் திமுக - அதிமுக இடையேதான் போட்டி என்று எடப்பாடி பழனிசாமி கூறினார். மேலும் எடப்பாடி பேச்சு முழுக்கவே திமுகவை சரமாரியாக விமர்சித்து இருந்தார். ஆனால் மத்தியில் ஆளும் பாஜக குறித்து பெரிதாக எந்த விமர்சனத்தையும் முன்வைக்கவில்லை.
தமிழகத்தில் லோக்சபா தேர்தல் களம் அனல் பறக்க தொடங்கியுள்ளது. தொகுதி வேட்பாளர்களை அறிவித்த கட்சிகள், தற்போது அவர்களுக்கு வாக்கு சேகரிக்க பிரசாரத்தை தொடங்கியுள்ளன. இதேபோல் தொகுதி பங்கீடு, வேட்பாளர்களை அறிவித்த அதிமுக, அடுத்த கட்டமாக கூட்டணி கட்சிகள் உள்பட 40 தொகுதிகளுக்குமான வேட்பாளர்களை இன்று ஒரே மேடையில் அறிமுகம் செய்து வைத்தார்.

திருச்சியில் நடந்த இந்த அதிமுக கூட்டத்தில், எடப்பாடி பழனிசாமி அறிமுக செய்து வைத்தார். தொடர்ந்து பேசிய எடப்பாடி பழனிசாமி திமுகவை விமர்சித்து பேசினார். இதேபோல் தமிழகத்தில் அதிமுக - திமுக இடையே தான் போட்டி என்று பேசினார்.
தமிழகத்தில் திமுக - பாஜக இடையேதான் போட்டி எனஅண்ணாமலை உள்ளிட்டோர் கூறி வரும் நிலையில், எடப்பாடி அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக திருச்சி பொதுக்கூட்டத்தில் பேசினார். அதாவது, தமிழ்நாட்டில் மூன்று கூட்டணிகள் இருந்தாலும் திமுக- அதிமுக இடையேதான் போட்டி என்று கூறியிருந்தார். எடப்பாடி பேச்சு முழுக்கவே திமுகவை சரமாரியாக விளாசினார்.
ஆனால், மத்தியில் ஆளும் பாஜக குறித்து பெரிதாக எந்த விமர்சனத்தையும் முன்வைக்கவில்லை. பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக விலகினாலும், மத்திய அரசை எடப்பாடி இதுவரை விமர்சிக்கவில்லை என்றும் அவர்களுக்கு இடையே கள்ளக் கூட்டணி நீடிப்பதாகவும் திமுக விமர்சித்து வருகிறது. இந்த நிலையில், தான் இன்றைய வேட்பாளர்கள் அறிமுக கூட்டத்திலும் எடப்பாடி பழனிசாமி மத்தியில் ஆளும் பாஜக குறித்து எதுவும் பேசாதது அரசியல் வட்டாரத்தில் கவனம் பெற்றுள்ளது.
முன்னதாக கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:- மேகதாது அணை கட்ட கர்நாடக அரசு துடித்துக்கொண்டு இருக்கிறது. கர்நாடக அமைச்சர் சொல்கிறார்.. ஒரு சொட்டு கூட தண்ணீர் கூட தமிழ்நாட்டிற்கு கொடுக்க முடியாது என்று. நமது முதல்வர் வாயே திறக்கவில்லை. தமிழ்நாட்டிற்கும் தமிழ்நாட்டு விவசாயிகளுக்கு துரோகம் செய்யும் ஸ்டாலினுக்கு தகுந்த பதிலடி கொடுக்க வேண்டும்.
துளசி வாசம் மாறும்.. ஆனால் தவசி! அதிமுக கூட்டத்தில் பாமகவை சீண்டிய பிரேமலதா.. எடப்பாடிக்கு புகழாரம்
அதிமுக ஆட்சியின் போது இப்படிப்பட்ட பிரச்சினை வந்தது.. அப்போது உடனடியாக உச்ச நீதிமன்றத்தில் அவமதிப்பு வழக்கு தொடர்ந்து மேகதாது அணை கட்டுவதை தடுத்து நிறுத்தினோம். தமிழகத்தில் ஒரு மருத்துவக்கலூரியை ஸ்டாலினால் கொண்டு வர முடிந்ததா? எப்போ பார்த்தாலும் உதயநிதி ஸ்டாலின் ஒரு செங்கல்லை எடுத்துக் கொண்டு இருக்கிறார்.
எய்ம்ஸ் மருத்துவமனை கொண்டு வர வேண்டும் என்று ஜெயலலிதா கோரிக்கை வைத்தார். எய்ம்ஸ் மருத்துவமனையை விரைந்து கட்ட வேண்டும் என்று நாங்கள் பலமுறை கோரிக்கை விடுத்தோம். ஆனால், திமுக என்ன செய்தது. செங்கல்லை ரோட்டில் காட்டி ஒரு பிரயோஜனமும் இல்லை . நாடாளுமன்றத்தில் காட்ட வேண்டும். விளம்பரத்திற்காக செங்கல்லை தூக்கி காட்டுகிறார்கள். இவ்வாறு அவர் பேசினார்.












Click it and Unblock the Notifications