துளசி வாசம் மாறும்.. ஆனால் தவசி! அதிமுக கூட்டத்தில் பாமகவை சீண்டிய பிரேமலதா.. எடப்பாடிக்கு புகழாரம்
திருச்சி: ஒருவார்த்தை சொன்னால் சொன்னது தான்.. துளசி கூட வாசம் மாறும்.. ஆனால் தவசி வார்த்தை மாறியதாக வரலாறு இல்லை என்று பிரேமலதா விஜயகாந்த் கூறினார். மேலும், அதிமுக கூட்டணியில் இருந்து விலகிய பாமகவையும் அவர் விமர்சித்து பேசினார்.
தமிழகத்தில் லோக்சபா தேர்தல் வரும் ஏப்ரல் 19 ஆம் தேதி நடக்கிறது. இந்த தேர்தலில் அதிமுக தனி கூட்டணியில் தேர்தலை சந்திக்கிறது. தொகுதி பங்கீடு, வேட்பாளர்களை அறிவித்த அதிமுக இன்று கூட்டணி கட்சிகள் உள்பட 40 தொகுதிகளில் போட்டியிடும் தொகுதி வேட்பாளர்களை ஒரே மேடையில் இன்று எடப்பாடி பழனிசாமி அறிமுக செய்து வைத்தார். இந்த விழாவில் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கலந்துகொண்டார். அப்போது அவர் பேசியதாவது:-

இரண்டு நாள் வரைக்கும் கூட்டணியில் இருக்கிறோம். இருக்கிறோம் என்று நாடகம் நடத்தியவர்கள் எல்லாம் தங்களுக்கு வேண்டியது கிடைத்த உடனேயே துண்ட காணும் துணியை காணும் என்று கூடாரத்தை காலி செய்துவிட்டு வேறு இடத்துக்கு சென்றுவிட்டார்கள். ஆனால் தேமுதிக அப்படியில்லை. ஒரு வார்த்தை சொன்னால், அந்த வார்த்தையில் உறுதியாக இருப்போம். இறுதியாக இருப்போம். நம்பிக்கையாக இருப்போம் என்பதை இந்த நேரத்தில் உறுதியாக சொல்கிறோம்.
ஏனென்றால் அண்ணன் எந்த மண்டலத்தை சேர்ந்தவர் என்றால் கொங்கு மண்டலத்தை சேர்ந்தவர். அவருடைய அமைச்சர்களும் கொங்கு மண்டலத்தை சேர்தவர்கள். கொங்கு மண்டலத்துக்காரர்கள் மரியாதை மிக்கவர்கள். அன்பானவர்கள். அதே போல நம்பிக்கைக்கு உரியவர்கள். இதனை ஒவ்வொரு முறையும் அண்ணன் நிரூபித்து காட்டியிருக்கிறார்கள். எத்தனையோ முதல்வர்களை நாங்கள் பார்த்திருக்கிறோம்.
3 வருடமாக செங்கல்லை காட்டுகிறார் உதயநிதி.. நாடாளுமன்றத்தில் காட்ட வேண்டியதுதானே.. எடப்பாடி அட்டாக்
எடப்பாடி பழனிசாமி அண்ணன் பண்போடும், பாசத்தோடும், மரியாதையோடும், மிக கண்ணியத்தோடும் இருக்கின்ற சிறந்த உதாரணம் என்பதை இந்த நேரத்தில் நான் பெருமையோடு சொல்லிக்கொள்கிறேன். அவருடன் இருக்கின்ற அமைச்சர்கள் பெருமக்கள் அத்தனை பேரும் நாட்டிற்கு சிறந்த உதாரணங்களாக புரட்சி தலைவர் எம்ஜிஆர், புரட்சி தலைவி ஜெயலலிதா, அண்ணன் எடப்பாடி பழனிசாமி வழிநடத்தி செல்கிறார்கள்.
இதனால் தான் சொல்கிறேன், கேப்டன் வளர்த்த கட்சியும் நியாயத்திற்கும் தர்மத்திற்கும் தான் நாங்கள் துணை நிற்போமே தவிர ரவுடிசத்திற்கும், கொலை, கொள்ளைக்கும் நாங்கள் துணை நிற்க மாட்டோம். ஒருவார்த்தை சொன்னால் சொன்னது தான்,.. துளசி கூட வாசம் மாறும்.. ஆனால் தவசி வார்த்தை மாறியதாக வரலாறு இல்லை.
இதனால் அண்ணன் வீட்டுக்கு வரும்போது உறுதியளித்தோம். அப்போது என்ன ஆனாலும், இறுதி வரை உங்களுடன் இருப்போம். என்று வாக்குறுதி கொடுத்தேன். அதேபோல் உறுதியாக அதிமுகவுடன் கூட்டணி அமைத்து இருக்கிறோம். இந்த தேர்தலில் மட்டும் இல்லை, 2026 தேர்தலிலும் எங்கள் கூட்டணி வெற்றி பெறும். இவ்வாறு அவர் கூறினார்.
-
கடலூரில் நடந்தது என்ன.. திருமாவளவனிடம் மனம் விட்டு பேசிய பிரேமலதா.. பரபரப்பு பின்னணி -
பணிகள் கிட்டத்தட்ட ஓவர்.. இனி 4 வழி இல்லை.. சென்னையின் முக்கிய பகுதியில் மிகப்பெரிய 6 வழி சாலை -
தங்கத்தை மிஞ்சப்போகும்.. பலரின் வீட்டிலேயே இருக்கும் ஒரு குட்டி உலோகம்.. அடிக்குது ஜாக்பாட்! -
தென்னிந்திய தர்காக்கள் மற்றும் பள்ளி வாசல்கள் சங்கம் அதிமுகவிற்கு ஆதரவு! -
கடலூரில் நாளை விஜய் பிரச்சாரத்தால் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரத்திற்கு அனுமதி மறுப்பு.. நடந்தது என்ன? -
அமெரிக்காவை அலறவிட்ட பிரான்ஸ்! 129 டன் தங்கத்தை மீட்க "கோல்டன்" ஸ்கெட்ச்.. அப்போ இந்தியா பிளான் என்ன -
சிறகடிக்க ஆசை: விஜயாவின் மாற்றம்! முத்து, மீனாவை பெருமையாக பேசுறாங்களே! குடும்பத்தில் கொண்டாட்டம் -
ரஷ்யா மாஸ்டர் பிளான்: இந்தியாவுக்கு ஜாக்பாட்.. சீனா உதவி.. ஒன்று கூடிய BRICS நாடுகளால் டிரம்ப் ஷாக்! -
மொத்தமாக மாறிய டிரம்ப்.. ஈரான் விஷயத்தில் தொனியை மாற்றிய அமெரிக்க அதிபர்.. அடேங்கப்பா! -
2 வெர்ஷன்.. ஜனநாயகன் படம் இணையத்தில் லீக்கானது எப்படி? அதிகம் பலன் அடைவது யார்? அந்த மர்ம கை -
23000 ஊழியர்களை பணிநீக்கம் செய்த பின்பும்.. டிசிஎஸ் நிறுவனத்தில் கட்டுப்படுத்த முடியாத செலவு! -
லீக் ஆன ஜனநாயகன்.. நானே ரீலிஸ் பண்ணித்தரேன்னு சொன்னேனே விஜய்.. விட்டு விளாசிய சாட்டை!












Click it and Unblock the Notifications