Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஏன்டா என்னை தனியா விட்டுட்டு போனே.. தம்பி படத்தையே பார்த்து கொண்டிருக்கும் சுஜித் அண்ணன்!

சுஜித்தின் பெரியப்பாவும் கிணற்றில் விழுந்து உயிரிழந்துள்ளார்

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    வராம போயிட்டியேடா தம்பி.. சோகத்தில் மூழ்கிய சுஜித்தின் அண்ணன்

    மணப்பாறை: கண்ணுக்கு எதிரே குழந்தையைப் பறி கொடுத்து விட்ட புத்திர சோகத்தில் தவித்துக் கொண்டுள்ளார் கலாமேரி. அவரது கணவர் பிரிட்டோவின் சோகமோ வேறு.. "தம்பி வர மாட்டானாப்பா" என்று அப்பாவிடம் தொடர்ந்து கேட்டபடி உள்ளானாம் சுஜித்தின் அண்ணன் புனித் ரோஷன். அவனுக்குப் பதில் சொல்ல முடியாமல் தவிக்கிறாராம் பிரிட்டோ.

    மக்கள் மெல்ல மெல்ல சுஜித்தை விட்டு விலக ஆரம்பித்து விட்டனர். ஆனால் விலகவே முடியாத, நீங்காத சோகத்துடன் ஒவ்வொரு நிமிடத்தையும் கழிக்க ஆரம்பித்துள்ளது சுஜித் குடும்பம்.

    சுஜித்தின் தாயாருக்கு கண்களில் நீர் வற்றிப் போய் விட்டது. இனி அழ ஒன்றுமே இல்லை. .மொத்தத்தையும் அழுது தீர்த்து விட்டார். பெற்ற வயிறு இப்போது பெரும் சுமையுடன் இருக்கிறது அவருக்கு. இந்த இடத்தில்தானே அவனை சுமந்தேன்.. இப்படி பறி கொடுத்து விட்டேனே என்று தினமும் கலங்கித் தவிக்கிறார்.

    புனித் ரோஷன்

    புனித் ரோஷன்

    பிரிட்டோ - கலாமேரி தம்பதிக்கு இரு மகன்கள். மூத்தவன் பெயர் புனித் ரோஷன். கடைக்குட்டிதான் நம்ம சுஜித். புனித் ரோஷனே இன்னும் பெரிய அளவில் விவரம் புரியாத சிறு வயது பாலகன்தான். சுஜித்தின் நிலையை சொல்ல வேண்டியதில்லை. சம்பவ நாளன்று இருவருமே வீட்டுக்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்தனர்.

    அலறிய ரோஷன்

    அலறிய ரோஷன்

    அந்த சமயத்தில்தான் சுஜித் குழிக்குள் விழுந்து விட்டான். இதையடுத்து ரோஷன் அலற அதைப் பார்த்து மேரி ஓடி வர என்று கூட்டம் கூடி விட்டது. அதற்குப் பிறகு நடந்தது அனைவராலும் மறக்க முடியாத துயரம். தம்பி உள்ளே விழுந்ததுமே அதிர்ச்சியாகி விட்டான் ரோஷன். தம்பி வெளியே வந்துருவானா என்று அப்பாவிடம் கேட்டபடி இருந்துள்ளான். பிரிட்டோவால் மகனை சமாதானப்படுத்த முடியவில்லை. பின்னர் தாயாரிடமும் கேட்டபடியே இருந்துள்ளான்.

    அவனுக்கு பசிக்குமே

    அவனுக்கு பசிக்குமே

    ஒரு கட்டத்தில் கலாமேரியே சோர்ந்து போய் விட்டார். துவண்டு போய் விட்டார். நடைப்பிணமாக மாறியதால் அவரிடமிருந்து மகனை பிரிட்டோவின் தங்கையின் பராமரிப்பில் விட்டனர். அங்கும் விடவில்லை ரோஷன். "அத்தை அத்தை தம்பி வந்துருவானா.. அவனுக்கு பசிக்குமே" என்று கேட்டபடியே இருந்துள்ளான்

    விரக்தி

    விரக்தி

    பிரிட்டோவின் தங்கைக்கோ பதில் சொல்ல முடியாமல் பெரும் அழுகைதான் வந்துள்ளது. இப்போது தம்பி வராமலேயே போய் விட்டான் என்ற பெரும் சோகத்துடன் உள்ளான் ரோஷன். பெரியவர்களைப் போல அவனுக்கு பெரிதாக எதையும் யோசிக்கத் தெரியவில்லை. சோகமாக இருக்கிறான். விரக்தியா வீட்டைச் சுற்றி சுற்றி வருகிறான். தம்பி விழுந்த போர்வெல் இருந்த இடத்தைப் போய் அவ்வப்போது பார்த்து வெறித்து நிற்கிறான். வீட்டில் உள்ள தம்பி படத்தையே பார்த்துக் கொண்டிருக்கிறான். கண்கள் குளமாக.. போட்டோவுக்கு மாலை போட்டுள்ளது!

    வலிகள்

    வலிகள்

    அவன் மனதுக்குள் என்னெல்லாம் ஓடுதோ.. "ஏன்டா என்னை தனியா விட்டுட்டுப் போனே.. நான் உன்னை காப்பாத்த முடியாம போச்சேடா தம்பி.. நீ இல்லாம எப்படிடா" என்றெல்லாம் மனதுக்குள் ஓடுதோ என்னவோ.. பிரிட்டோ கலாமேரி குடும்பத்தின் வலி அத்தனை சீக்கிரத்தில் போகாது.. அதை விட ரோஷனின் இழப்புக்கு ஈடே இல்லை. இன்னொரு தம்பி அவனுக்குப் பிறந்தாலும் கூட, சுஜித்தை தனது உதிரத்தில் சுமந்தபடிதான் வாழ்ந்திருப்பான் என்பதில் சந்தேகமே இல்லை.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+