அப்ளிகேஷன் எழுதக் கூப்பிட்டேன்.. அவன் வரலை.. வாழவே பிடிக்கலை.. ஹாஸ்டல் ரூமில் தூக்கில் தொங்கிய மாணவி

அண்ணா பல்கலை மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்

Subscribe to Oneindia Tamil

திருச்சி: "நான் என் காதலனை அப்ளிகேஷன் ஃபில் பண்ண வா என்று கூப்பிட்டேன்.. வரவில்லை.. எனக்கு வாழவே பிடிக்கல" என்று அண்ணா பல்கலை மாணவி டைரியில் எழுதி வைத்துவிட்டு.. ஹாஸ்டல் ரூமிலேயே தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தர்மபுரியை சேர்ந்தவர் ஜெயவேல், இவரது மகள் லோகேஸ்வரி.. 20 வயதாகிறது.. திருச்சியில் உள்ள அண்ணா பல்கலைகழக பொறியியல் கல்லூரியில் சிவில் இன்ஜினியரிங் 4ம் ஆண்டு படித்து வந்தார். காலேஜ் அருகில் இருக்கும் விஜிபி நகரில் உள்ள ஹாஸ்டலில் தங்கி படித்து வந்துள்ளார்.

engineering college student suicide in Trichy anna university

இதே கல்லூரியில் படித்து வந்த ஒரு மாணவனுடன் லோகேஸ்வரிக்கு காதல் ஏற்பட்டுள்ளது.. அந்த மாணவனும் இவர் ஊரை சேர்ந்தவர்தானாம். இந்த காதல் விவகாரம் வீட்டுக்கு தெரியவந்துள்ளது.. இரு வீட்டிலுமே கல்யாணத்துக்கு ஒப்புக் கொண்டார்கள்.. ஆனால் படிப்பு முடியட்டும் என்று சொல்லி இருந்தனர்.

இந்நிலையில், நேற்று வழக்கம்போல் லோகேஸ்வரி காலேஜ் போய்விட்டு, நேராக ஹாஸ்டலுக்கு வந்தார்... பின்பு தன் ரூம் கதவை உள்பக்கமாக தாழ்ப்பாள் போட்டுக் கொண்டார்.. இவருடைய அந்த அறையில் 15 மாணவிகள் தங்கி இருந்துள்ளனர்.. ஆனால் இவர்கள் எல்லாம் ஊருக்கு போய்விட்டனர்.. அதனால் லோகேஸ்வரி மட்டுமே இருந்து உள்ளார்.

4 மணிக்கு ரூமுக்கு போனவர் நைட் சாப்பாட்டுக்கும் வெளியே வரவில்லை. அதனால் சந்தேகம் அடைந்த ஹாஸ்டல் ஊழியர் லோகேஸ்வரி ரூம் கதவை தட்டினார்.. பதில் வரவே இல்லை.. செல்போன் பண்ணினார்கள்.. அதையும் எடுக்கவில்லை.. அதனால் 10 மணிக்கு நவல்பட்டு போலீசுக்கு தகவல் தந்தனர்.. விரைந்து வந்த போலீசார் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தால், ஃபேனில் லோகேஸ்வரி சடலமாக தொங்கி கொண்டிருந்தார்.

இதையடுத்து பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, விசாரணையும் ஆரம்பமானது. ஆனால் ஹாஸ்டலில் யாருக்கும் இதை பற்றி தெரியவில்லை.. லோகேஸ்வரி ரூமிலேயே போலீசார் சோதனையிட்டனர்.. அப்போதுதான் டைரியில், தற்கொலைக்கான காரணத்தை எழுதி வைத்திருந்தார்.

அதில் "என் அப்பாவுக்கு நிறைய கடன் இருக்கு.. ஸ்காலர்ஷிப் எனக்கு கிடைத்தால்தான் படிக்க முடியும் என்ற நிலை உள்ளது. அதுக்குதான் நேற்று ஸ்காலர்ஷிப் ஃபார்ம் வாங்கி வந்தேன். அதை நிரப்ப என் காதலனை காலேஜுக்கு கூப்பிட்டேன்.. வா என்று சொல்லியும் வரவில்லை.. எனவே எனக்கு வாழ பிடிக்கவில்லை" என்று எழுதியிருந்தார். இதையடுத்து காதலனிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+