அறிவிக்கப்படாத பஸ் கட்டண உயர்வு? பஞ்சப்பூர் பேருந்து நிலையத்தில் அதிர்ச்சி.. தவிக்கும் மக்கள்!
திருச்சி: பஞ்சப்பூர் ஒருங்கிணைந்த பேருந்து நிலையத்தில் இருந்து புறப்படும் புறநகர் பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாக மக்களிடம் இருந்து புகார்கள் எழுந்துள்ளன. சாதாரண பேருந்துகளில் ரூ.5ம், ஏசி பேருந்துகளில் ரூ.10 வரையும் பேருந்து கட்டணம் எந்த அறிவிப்பும் இன்றி உயர்த்தப்பட்டுள்ளதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
திருச்சி பஞ்சப்பூரில் ரூ.408.36 கோடியில் புதிதாக ஒருங்கிணைந்த பேருந்து முனையம் பயன்பாட்டுக்கு வந்துள்ளது. ஜூலை 16ஆம் தேதி அமைச்சர் நேரு கொடியசைத்துத் தொடங்கி வைத்தார். ஏசி வசதி, டிஜிட்டல் வசதி, நகரும் படிக்கட்டுகள் என்று கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தை விடவும் சிறப்பாக கட்டப்பட்டிருப்பதாகத் திருச்சி மக்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

பஞ்சப்பூர் பேருந்து நிலையம் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்திருப்பதால், கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுமா என்ற கேள்வி எழுந்தது. ஆனால் கட்டணம் உயர்த்தப்படாது என்று அமைச்சர் கே.என்.நேரு மற்றும் மாவட்ட ஆட்சியர் சரவணன் ஆகியோர் கூறினர். ஆனால் கடந்த 4 நாட்களாகவே அரசுப் பேருந்து, தனியார் பேருந்து என்று இரண்டிலும் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாகப் பயணிகள் குற்றம்சாட்டி வருகின்றனர்.
சத்திரம் பேருந்து நிலையத்தில் இருந்து புறப்படும் புறநகர் பேருந்துகளில் கட்டணம் உயர்த்தப்படவில்லை. அதேபோல் மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து கரூருக்கு செல்லும் புறநகர் பேருந்துகளில் இந்த கட்டணம் உயர்வு கேட்கப்படுவதில்லை. பஞ்சப்பூர் ஒருங்கிணைந்த பேருந்து நிலையத்தில் இருந்து புறப்பட்டு இதர பகுதிகளுக்குச் செல்லும் பேருந்துகளில் தங்களின் இஷ்டத்திற்கு கட்டணம் வசூலிக்கப்படுவதாகப் பயணிகள் புகார் கூறியுள்ளனர்.
1 முதல் 5 வரையிலான பஸ் ஸ்டாப்களுக்கு செல்ல ஏற்கனவே வசூலிக்கப்பட்ட கட்டணத்தை விட கூடுதலாக ரூ.5ம், ஏசி பேருந்துகளில் ரூ.10ம் கூடுதல் கட்டணமாக வசூலிக்கப்பட்டு வருகிறது. அதேபோல் ஒன் டூ ஒன் பேருந்துகளிலும் ரூ.5 கூடுதல் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. இதன்படி திருச்சி - புதுக்கோட்டை செல்லும் ஏசி பேருந்துகளில் பழைய கட்டணமாக ரூ.60 பெறப்பட்டு வந்தது.
ஆனால் தற்போது ரூ.70 கட்டணமாக மாற்றப்பட்டுள்ளது. சாதாரண பேருந்துகளில் ரூ.47ல் இருந்து ரூ.52ஆக கட்டணம் உயர்த்தப்பட்டிருக்கிறது. இதே திருச்சி - புதுக்கோட்டை ஒன் டூ ஒன் பேருந்துகளில் ரூ.50க்கு பதிலாக ரூ.55 கட்டணமாக வசூலிக்கப்பட்டிருக்கிறது. இதனால் பேருந்துகளில் மூலம் பயணித்து கூலி வேலைக்குச் செல்வோர், பெண்கள், கல்லூரி மாணவர்கள், தனியார் நிறுவன ஊழியர்கள் என்று பல்வேறு தரப்பினரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
பொதுமக்கள் பஞ்சப்பூர் பேருந்து நிலையத்தின் வருகையால் ஒருநாளுக்கு கூடுதலாக ரூ.20 வரை செலவு செய்யும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். மத்தியப் பேருந்து நிலையத்தில் இருந்து பஞ்சப்பூர் பேருந்து நிலையம் 9 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. இதற்கான டீசல் செலவை ஈடுகட்டும் வகையில் இந்த பேருந்து கட்டணம் ஒவ்வொரு பயணியிடம் இருந்தும் வசூலிக்கப்படுவதாகப் புகார்கள் எழுந்துள்ளன. இதனால் மாவட்ட நிர்வாகமும், போக்குவரத்துக் கழகமும் இணைந்து இந்த பிரச்சனைக்குத் தீர்வு காண வேண்டும் என்பதே மக்களின் கோரிக்கையாக உள்ளது.
-
5,000 பேர் மட்டும் தான்.. திருச்சி கிழக்கில் விஜய் நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சிக்கு கட்டுப்பாடு -
நாளை மறுநாள் திருச்சி செல்லும் விஜய்.. முதல்வரான பிறகு பொதுவெளியில் முதல் நிகழ்ச்சி! பிளான் என்ன? -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
மணப்பாறை சிப்காட்: 650 பேருக்கு வேலை ரெடி! வேகமெடுக்கும் பெப்சி ரூ.880 கோடி மெகா தொழிற்சாலை திட்டம் -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications