திருச்சி மெட்ரோ ரயில்.. 68 கி.மீ. தொலைவுக்கு 3 வழித்தடங்கள்.. சாத்தியக்கூறு அறிக்கை தயாராவதாக தகவல்!
திருச்சி: திருச்சி மாநகரம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் 68 கி.மீ தொலைவுக்கு 3 வழித்தடங்களில் மெட்ரோ ரயில் சேவை அமைக்க சாத்தியக்கூறுகள் உள்ளதாக பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இதனால் திருச்சியில் மெட்ரோ ரயில் அமைப்பதற்காக சாத்தியக்கூறு அறிக்கைகள் தயாரிக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ்நாட்டின் இரண்டாவது தலைநகரமாக திருச்சியை கொண்டு வர வேண்டும் என்று மறைந்த முதல்வர் எம்.ஜி.ஆர் கனவு கண்டார். திருச்சியை குறி வைப்பதற்கு முழு முதற்காரணம் பூகோள ரீதியில் போக்குவரத்திற்கு, தமிழ்நாட்டின் மத்திய பகுதியாக திருச்சி இருப்பது தான்.
சாலை போக்குவரத்தில் தென் மாவட்டங்களின் நுழைவு வாயிலாக திகழும் திருச்சி, ரயில் போக்குவரத்து, விமான போக்குவரத்திலும் சிறந்து விளங்குகிறது. சென்னையில் இருந்து, கன்னியாகுமரியில் இருந்தும் அதிகபட்சமாக, 5 மணி நேர பயணத்தில் மக்களால் திருச்சிக்கு வந்தடைய முடியும்.

சென்னை மெட்ரோ
இந்த நிலையில் சென்னையின் போக்குவரத்து நெரிசலை சரி செய்வதற்கு, மெட்ரோ ரயில் திட்டம் தொடங்கப்பட்டு, சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இதனால் சென்னையை தொடர்ந்து, மதுரை, கோவைம், திருச்சி உள்ளிட்ட இரண்டாம் நிலை நகரங்களிலும் மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்த, சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் முனைப்பு காட்டி வருகிறது.

மெட்ரோ சேவை
இந்த நிலையில் திருச்சி மாநகரம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் 68 கி.மீ தொலைவுக்கு 3 வழித்தடங்களில் மெட்ரோ ரயில் சேவை அமைக்க சாத்தியக்கூறுகள் உள்ளதாக பரிந்துரைக்கப்பட்டுள்ளது. திருச்சி மாநகராட்சி மாமன்ற அவசரக் கூட்டம் நேற்று நடைபெற்றது. அதில் திருச்சி மாநகராட்சி பகுதிகளுக்கான விரிவான பொது போக்குவரத்து திட்டம் குறித்த ஆய்வறிக்கை மாமன்ற ஒப்புதலுக்கு வைக்கப்பட்டது.

பொது போக்குவரத்து மாஸ்டர் பிளான்
அப்போது இந்தத் திட்டம் தொடர்பாக மெட்ரோ நிறுவன அலுவலர் அழகப்பன் கூறுகையில், திருச்சி மாநகருக்கு அடுத்த 20 ஆண்டுகளுக்குத் தேவையான பொதுப் போக்குவரத்து திட்டம் குறித்த 'மாஸ்டர் பிளான்' தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த ஆய்வறிக்கை மூலமாகவே, திருச்சிக்கான மெட்ரோ உள்ளிட்ட முக்கிய திட்டங்களை கொண்டு வர முடியும். கடந்த ஒரு வருடமாக திருச்சி மாநகரம் மட்டுமின்றி அருகிலுள்ள நகரம், ஊராட்சிகளிலும் கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

திருச்சியில் மெட்ரோ தேவை
அதில் 22 சதவீதம் பேர் பொதுப் போக்குவரத்துகளில் ஒன்றான மாநகர பேருந்துகளை பயன்படுத்துகின்றனர். இந்தியாவிலுள்ள மற்ற மாநகராட்சிகளை ஒப்பிடும்போது, திருச்சியில் பொதுபோக்குவரத்து அதிகமாக உள்ளது. குறைந்தபட்சம் நாள்தோறும் 6.41 கி.மீ தொலைவுக்கு பேருந்துகளை சராசரியாக பயன்படுத்துகின்றனர். இவை தவிர, மெட்ரோ ரயில் சேவையை செயல்படுத்த திருச்சியில் 68 கி.மீ.க்கு தேவை உள்ளது. இதனை 3 வழித்தடங்களாக பிரித்துள்ளோம்.

3 வழித்தடங்கள் என்னென்ன?
சமயபுரத்திலிருந்து ஸ்ரீரங்கம், சத்திரம் பேருந்து நிலையம், தில்லைநகர் வழியாக வயலூர் வரை 18.7 கி.மீ தொலைவுக்கு ஒரு வழித்தடம் அமைக்கப்படும். துவாக்குடியிலிருந்து திருவெறும்பூர், பால்பண்ணை, மத்திய பேருந்து நிலையம் வழியாக பஞ்சப்பூர் வரை 26 கி.மீ தொலைவுக்கு இரண்டாவது வழித்தடம் கண்டறியப்பட்டுள்ளது. அடுத்ததாக ஜங்சனிலிருந்து பஞ்சப்பூர், ஏர்போர்ட், புதுக்கோட்டை சாலை வழியாக மாத்தூர் பகுதியிலுள்ள ரிங்ரோடு வரை 23.3 கி.மீ தொலைவுக்கு ஒரு வழித்தடம் அமைக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இவற்றில் எங்கெங்கு நிறுத்தங்கள் அமையும், எந்த வழியாக மெட்ரோ ரயில் இயக்கப்படும் என்பது குறித்து, அடுத்து நடைபெறக்கூடிய விரிவான திட்ட அறிக்கையின்போது தெரியவரும்.

ஆணையர் விளக்கம்
இதுகுறித்து மாநகராட்சி ஆணையர் ஆர்.வைத்திநாதன் கூறுகையில், ஆரம்பத்தில் சமயபுரத்திலிருந்து காவிரி பாலம் வழியாக சத்திரம் பேருந்து நிலையம் வரை மட்டுமே மெட்ரோ வழித்தடத்துக்கு ஆய்வு செய்தனர். அமைச்சர் கே.என்.நேரு அதை ஏற்கவில்லை. மதுரை, கோவையைக் காட்டிலும் திருச்சியில் பொதுப் போக்குவரத்தை பயன்படுத்துவோர் அதிகமாக உள்ளனர். எனவே சில வழித்தடங்களில் ஆய்வு செய்ய அமைச்சர் அறிவுறுத்தினார். அதன்படி 68 கி.மீ தொலைவுக்கு 3 வழித்தடங்கள் கண்டறியப்பட்டுள்ளன என்று தெரிவித்தார்.
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்












Click it and Unblock the Notifications