எந்த காலத்திலும் ஸ்டாலின் முதல்வராக வாய்ப்பில்லை ராஜா - அதிமுக முன்னாள் எம்பி ப.குமார்
அதிமுகவின் கிளை செயலாளராக இருந்த எடப்பாடி பழனிசாமி தற்போது முதல்வராக உயர்ந்து நிற்கிறார். இந்த இயக்கத்தையும், ஆட்சியையும் வழிநடத்திக் கொண்டிருக்கிறார். அவருக்கு கட்சியினர் உறுதுணையாக இருக்க வேண்டும் எ
திருச்சி: எந்த காலத்திலும் மு.க. ஸ்டாலின் முதல்வராக முடியவே முடியாது என்றும் அவரது தந்தை உயிருடன் இருந்த போதே ஸ்டாலினை நம்பி முதல்வர் பதவியை ஒப்படைக்கவில்லை என்றும் திருச்சி தெற்கு அதிமுக மாவட்ட செயலாளர் ப.குமார் கூறியுள்ளார். எடப்பாடி பழனிச்சாமி ஆட்சியில் இருப்பதால்தான் சரியான நேரத்திற்கு தண்ணீர் கிடைத்துள்ளது திமுக ஆட்சியில் இருந்தால் வறண்டு போயிருக்கும் என்றும் தெரிவித்திருக்கிறார்.
திருச்சியின் தெற்கு மாவட்ட செயலாளராக அண்மையில் நியமிக்கப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ப.குமார் திருவெறும்பூர் ஒன்றிய பகுதிகளில் நேற்று கட்சி நிர்வாகிகளை சந்தித்து பேசினார். சட்டசபைத் தேர்தலில் அதிமுகவின் வெற்றி குறித்து ஆலோசனைகளை வழங்கினார். நிகழ்ச்சியில் மாற்றுகட்சி நண்பர்கள் சுமார் 100 பேர் தங்களை அஇஅதிமுகழகத்தில் இணைத்து கொண்டனர். அந்த பகுதியில் தூய்மை பணியாளர்களுக்கு நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

இந்தக் கூட்டத்தில் தெற்கு மாவட்ட செயலாளர் ப. குமார் பேசுகையில், "ஊராட்சி வாரியாக ஆய்வு மேற்கொண்டு மக்களின் குறைகளை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற அடிப்படையில் புதிதாக நியமனம் செய்யப்பட்ட மாவட்ட செயலாளர்கள் இந்த ஆய்வு பணியை மேற்கொண்டு வருகிறோம்.
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மறைவிற்கு பின்னர் அதிமுக பல்வேறு சோதனைகளை சந்தித்தது. எடப்பாடி பழனிசாமி அதிமுகவை வழிநடத்துவாரா? ஆட்சியை பூர்த்தி செய்வாரா? என்று திமுகவினர் கேள்வி எழுப்பினர். அதிமுகவின் கிளை செயலாளராக இருந்த எடப்பாடி பழனிசாமி தற்போது முதல்வராக உயர்ந்து, இந்த இயக்கத்தையும், ஆட்சியையும் வழிநடத்திக் கொண்டிருக்கிறார். அவருக்கு கட்சியினர் உறுதுணையாக இருக்க வேண்டும்.
கட்சிக்கு அதிக அளவில் உறுப்பினர்களை சேர்க்க வேண்டும். மக்கள் பணியாற்ற விரும்புகிறவர்கள் கட்டாயம் அதிமுகவில் இருக்க வேண்டும்.திமுகவினர் சுயநலத்துடன் செயல்படக்கூடியவர்கள். 8 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது காவிரி ஆற்றில் ஜூன் 12ஆம் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது. எடப்பாடி பழனிசாமிக்கு தண்ணி ராசி உண்டு. அதனால் தான் சரியான நேரத்திற்கு தண்ணீர் கிடைத்துள்ளது.
அதேபோல் திமுக ஆட்சியில் இருந்திருந்தால் இந்நேரம் வறண்டு போயிருக்கும். திமுக தலைவர் ஸ்டாலின் எந்த காலத்திலும் முதல்வராக முடியாது. அவரது தந்தை உயிருடன் இருந்த போதே ஸ்டாலினை நம்பி முதல்வர் பதவியை ஒப்படைக்கவில்லை என்று கூறினார்.
-
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
திருச்சிக்கு இன்று வருகிறார் முதல்வர் விஜய்.. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க தவெக பிரமாண்ட ஏற்பாடு -
அரசியல் சதுரங்கத்தின் அசாத்திய மூளை.. நவீன தமிழகத்தின் சிற்பி! யார் இந்த ‘கலைஞர்’ கருணாநிதி? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications