அடுத்த 24 மணி நேரத்தில் உதயநிதி ஸ்டாலின் வீட்டில் ரெய்டாம்.. காதில் விழுந்ததாக எச்.ராஜா தகவல்
திருச்சி: அடுத்த அமலாக்கத் துறை ரெய்டு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வீட்டில் நடக்க வாய்ப்பிருக்கிறது என பாஜக மூத்த நிர்வாகி எச் ராஜா தெரிவித்துள்ளார்.
மேகதாதுவில் காவிரி ஆற்றின் குறுக்கே கர்நாடகா அரசு அணை கட்டும் முயற்சிக்கு தமிழக அரசு துணை போவதாக குற்றம்சாட்டிய எச் ராஜா செய்தியாளர்களை சந்தித்தார். அவர் கூறுகையில் செந்தில் பாலாஜி வழக்கை பொறுத்தவரை மாநில அரசு 60 நாட்களில் இந்த வழக்கை விசாரணை செய்து முடிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

கோடிக்கணக்கில் கிராவல்களை எடுத்து விற்றதாக அமைச்சர் பொன்முடி மீது குற்றச்சாட்டு இருக்கிறது. முதல்வரை சமூகவலைதளங்களில் அவதூறாக சித்தரித்து புகைப்படத்தை வரைந்தவரை கைது செய்ய டிஜிபி எப்படி உத்தரவிட்டார் என தெரியவில்லை.
கர்நாடகா மாநிலத்தின் மேகதாது அணை கட்டுவதற்கு எந்தவித கண்டனமும் தெரிவிக்காமல் எதிர்க்கட்சிகள் கூட்டத்திற்கு சென்று வருகிறார் முதல்வர் ஸ்டாலின். அப்போது செந்தில் பாலாஜி இப்போது அமைச்சர் பொன்முடியை தொடர்ந்து அடுத்து அமைச்ச கே என் நேரு அல்லது அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோருக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத் துறை சோதனை நடைபெறும்.
அடுத்த 24 மணி நேரத்திற்குள் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வீட்டுக்கு அமலாக்கத் துறை செல்லவும் வாய்ப்புள்ளது. காவிரி ஆறு விவகாரத்தில் திமுக தமிழகத்தில் துரோகம் செய்துள்ளது. காவிரி ஆறு விவகாரத்தில் கருணாநிதியை போல் ஸ்டாலினும் துரோகம் செய்து வருகிறார். இந்தியாவின பிரதமர் ஆவதற்கு தமிழகத்தில் யாருக்கும் தகுதி இல்லை.
அமலாக்க, 6த் துறை நடத்தும் சோதனைக்கும் பாஜகவிற்கும் எந்த தொடர்பும் கிடையாது. செந்தில் பாலாஜியிடம் இருந்து 19 ஆயிரம் கோடி ரூபாய் பிடிபட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இவ்வாறு எச் ராஜா தெரிவித்தார். தக்காளி விவசாயிகள் படும்பாடு அதிகம். எனவே 40 ரூபாய்க்கு கீழ் தக்காளி விலை குறைந்தால்தான் தக்காளி வாங்குவோம் எனும் முடிவை எடுக்க வேண்டும்.
4 அல்லது 5 நாட்களுக்கு பொதுமக்கள் தக்காளி வாங்காமல் இருந்தால் தக்காளியின் விலை குறையலாம் என்றும் எச் ராஜா யோசனை தெரிவித்துள்ளார். அது போல் டிவிட்டரில் எச் ராஜா தனது பதிவில் தெய்வீக சிகாமணி, கௌதம சிகாமணி எல்லாம் ஆயோக்ய சிகாமணி தான் போலிருக்கு. பல்லாயிரக்கணக்கான கோடிகள் ஊழல் தமிழ் உணர்வு, தமிழர் நலன், மாநில உரிமை இவை அனைத்தும் மக்களை ஏமாற்றி பணம் கொள்ளையடிக்கும் தந்திரமே. தமிழகம் முன்னேர திநாவிடியன் ஸ்டாக் அடியோடு அழிக்கப்பட வேண்டும் என தெரிவித்துள்ளார்.
செந்தில் பாலாஜி விவகாரத்தில் ஸ்டாலினின் சபதத்தை அமலாக்கத்துறை நிறைவேற்றிவிட்டது என நான் அவருக்கு டேக் செய்து இந்த கருத்தை தெரிவித்தேன். அதிமுக ஆட்சியின்போது முதல்வர் ஸ்டாலின் என்ன சொன்னார்- திமுக ஆட்சிக்கு வந்தால் செந்தில் பாலாஜிக்கு சிறைதான் என்றார். அவரும் ஆட்சிக்கு வந்தார், ஆனால் செந்தில் பாலாஜியை அமலாக்கத் துறை கைது செய்துவிட்டது என்றும் தெரிவித்திருந்தார்.
-
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்! -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
திருச்சிக்கு இன்று வருகிறார் முதல்வர் விஜய்.. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க தவெக பிரமாண்ட ஏற்பாடு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்!












Click it and Unblock the Notifications