அடுத்த ED சோதனை "இந்த" அமைச்சர் வீட்டில்தான்.. எச்.ராஜா சொல்வது பலிக்குமோ? ஐயோ முக்கியமானவராச்சே
திருச்சி: அடுத்தது இந்த அமைச்சரின் வீட்டில்தான் அமலாக்கத் துறை ரெய்டு நடத்த போகிறது என பாஜக மூத்த நிர்வாகி எச். ராஜா தெரிவித்துள்ளார்.
திருச்சி மாவட்ட நிர்வாகம் இஸ்லாமியர்கள், கிறிஸ்துவர்களுக்கு ஆதரவாகவும் இந்துகளுக்கு விரோதமாகவும் குற்றம்சாட்டி அதை கண்டித்து திருச்சி மார்க்கெட் பகுதியில் பாஜக சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு பாஜக மூத்த தலைவர் எச் ராஜா தலைமை வகித்தார். இந்த ஆர்ப்பாட்டத்தில் எச்.ராஜா பேசுகையில் திமுக ஆட்சி மிகவும் மோசமாக இருக்கிறது. சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு உள்ளது.
இவர்களது ஆட்சியை துரத்த வேண்டும். இதை ஆட்சி மாற்றம் மூலம் நாம் செய்ய வேண்டும். இவர்கள் ஆட்சி தொடர்ந்தால் தமிழகத்தில் புல்டோசர் ஆட்சி அமையும். அப்போது அவர்கள் தூக்கி எறியப்படுவார்கள். தமிழகத்தில் நடக்கும் திராவிட மாடல் ஆட்சி என்பது மக்களுக்கும் இந்துக்களுக்கும் விரோதமான அராஜக ஆட்சி நடக்கிறது.
திராவிட மாடல் இயக்கத்தின் கடைசி சகாப்தம் இதுதான். திருவரங்கம் அரங்கநாத சுவாமி கோயில் கிழக்கு வாசல் கோபுரத்தின் சுவர் இடிந்து விழுந்துள்ளது. இது தொடர்பாக அமைச்சர் சேகர்பாபுவும், அமைச்சர் கே.என்.நேருவும் ஆய்வு செய்ய சென்றனர். அப்போது கே.என்.நேரு கூறுகையில், வீட்டில் உள்ள காரை பெயர்ந்து விழுவது போல் இங்கு விழுந்துள்ளது.

இது ஒரு பிரச்சினையா என முட்டாள்தனமாக கேட்கிறார். வீட்டு காரை விழுவதற்கும் கோயில் கோபுரம் சுவர் விழுவதற்கும் வித்தியாசம் இல்லையா. இந்து அறநிலையத் துறைக்கு தகுதி இல்லாத அமைச்சர் சேகர் பாபுவை தூக்கி எறிய வேண்டும். தமிழகத்திற்கு இந்து அறநிலையத் துறையே வேண்டாம். தமிழகத்தில் அடுத்து அமலாக்கத் துறை சோதனை சேகர் பாபு வீட்டில்தான் நடக்கும் என எச் ராஜா தெரிவித்துள்ளார்.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையும் பாஜக மூத்த நிர்வாகி எச் ராஜாவும் ஒவ்வொரு முறையும் இந்த அமைச்சர் வீட்டில் ரெய்டு , அந்த அமைச்சர் வீட்டில் ரெய்டு என பட்டியலிட்டு வருகிறார்கள். அந்த வகையில் அமைச்சர் உதயநிதி, கே.என்.நேரு உள்ளிட்டோர் வீடுகளில் ரெய்டு நடக்கும் என பாஜகவினர் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் எச் ராஜா சேகர்பாபுவை குறிவைத்து பேசியுள்ளார்.
-
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு












Click it and Unblock the Notifications