Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஆடை குறித்து பேசியது தவறு! மன்னிப்பு கேட்ட விடுதி வார்டன்! திருச்சி என்ஐடி மாணவிகள் போராட்டம் வாபஸ்!

Subscribe to Oneindia Tamil

திருச்சி: திருச்சியில் உள்ள தேசிய தொழில்நுட்பக் கழகத்தின் (Trichy NIT- National Institute of Technology) விடுதியில் ஒப்பந்த ஊழியர் ஒருவர் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக வந்த புகாரை அடுத்து அவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி விடுதி மாணவிகள் விடிய விடிய போராட்டம் நடத்தி வந்த நிலையில் விடுதி வார்டன் மன்னிப்பு கேட்டதை அடுத்து போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது.

திருச்சியில் மத்திய அரசின் தேசிய தொழில்நுட்பக் கல்லூரி உள்ளது. இங்கு படிக்க வேண்டும் என்றால் மாணவர்கள் ஜேஇஇ மெயின்ஸ் என்ற தகுதி தேர்வை எழுதி அதில் சரியான கட் ஆஃப் பெறுவோருக்கு இந்த கல்லூரியில் பொறியியல் படிக்க இடம் கிடைக்கும்.

trichy nit crime protest

சென்னை ஐஐடியில் படிக்க ஜேஇஇ அட்வான்ஸுடு தேர்வு எழுத வேண்டும். இது சற்று கடினமாக இருக்கும் என்பதால் பெரும்பாலானோர் திருச்சி என்ஐடியில் சேர விரும்புகிறார்கள். இங்கு மாணவர்கள், மாணவிகளுக்கென விடுதி வசதியும் உள்ளது. இந்த கல்லூரியில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் படித்து வருகிறார்கள்.

இந்த கல்லூரி விடுதியில் இணையதள வசதியில் பிரச்சினை ஏற்பட்டது. இதனால் அதை சரி செய்ய விடுதிக்கு கதிரேசன் என்ற ஒப்பந்த ஊழியர் ஒருவர் சென்றார். அப்போது அங்கிருந்த மாணவிக்கு அவர் பாலியல் தொல்லை கொடுத்ததாக தெரிகிறது. இது குறித்து விடுதி வார்டனிடம் அந்த மாணவி புகார் கூறிய போது அந்த பெண்ணை, " நீ ஏன் இப்படி ஆடை அணிகிறாய், அப்படி அணிந்தால் இப்படித்தான் செய்வார்கள்" என்ற பொருள்படும்படியான விமர்சனத்தை முன் வைத்ததாக தெரிகிறது.

இதனால் மாணவி அதிர்ச்சி அடைந்தார். பிறகு அந்த ஒப்பந்த ஊழியர் குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்ததை அடுத்து கதிரேசன் கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இந்த நிலையில் புகார் கூற வந்தால், விடுதி வார்டன், தனது ஆடை குறித்தே அவதூறாக பேசுகிறார் என கூறி, மாணவிகள் நள்ளிரவு முதல் 500-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

கல்லூரி வளாகத்தில் உள்ள என்ஐடி இயக்குநர் அகிலா வீட்டை முற்றுகையிட்டு மாணவிகள் விடிய விடிய போராட்டம் நடத்தியதை அடுத்து அங்கு திருச்சி மாவட்ட எஸ்பி வருண்குமார் நேரில் வந்து விசாரணை நடத்தினார். அப்போது மாணவிகளிடம் கோரிக்கைகளை கேட்டறிந்தார்.

அதற்கு மாணவிகள், "விடுதியில் எங்கள் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். புகார் கொடுத்தால் மாணவியின் ஆடை குறித்து விமர்சித்த வார்டன் இடைநீக்கப்பட வேண்டும் அல்லது மன்னிப்பு கேட்க வேண்டும்" என தெரிவித்தனர். இதையடுத்து வருண்குமார், கல்லூரி நிர்வாகத்திடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.

பிறகு கல்லூரி நிர்வாகத்தின் அறிவுறுத்தலின் பேரில் ஹாஸ்டல் வார்டன், மாணவிகளிடம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்டார். இதையடுத்து வருண்குமாரும், மாணவிகளிடம், "பாதுகாப்பு குறித்து கேட்ட கோரிக்கைகள் ஓரிரு நாளில் நிறைவேற்றப்படும். இனி இது போல் பிரச்சினை நடக்காத வண்ணம் கல்லூரி நிர்வாகம் கவனமாக செயல்படும். ஒரு வேளை ஏதாவது பிரச்சினை நடந்தால் நீங்கள் எனக்கே போன் செய்து சொல்லலாம்" என கூறி வருண்குமார், தனது செல்போன் எண்ணை மாணவிகளுக்கு கொடுத்தார். பிறகு இந்த போராட்டத்தை கலைத்துவிட்டு மாணவ, மாணவிகள் வகுப்புக்குச் சென்றனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+